ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் அதிகாரப்பூர்வமாக வெளியீடு!
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புத்தம் புதிய ஹிமாலயன் மோட்டார்சைக்கிளின் படங்கள் மற்றும் சில முக்கியத் தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அட்வென்ச்சர் டூரர் ரகத்தில் வரும் இந்த புதிய மோட்டார்சைக்கிள் சாகச பிரியர்களை வெகுவாக கவரும் அம்சங்களை கொண்டிருக்கிறது. இந்த புதிய மோட்டார்சைக்கிளின் தகவல்களை கேலரிக்கு கீழே தொடர்ந்து படிக்கலாம்.

இந்த புதிய மோட்டார்சைக்கிளின் உருவாக்கத்தில், இந்தியாவின் பிரபல ஆஃப்ரோடு பைக் பந்தய வீரர் சிஎஸ்.சந்தோஷ் ஆலோசனைகளை தந்து முக்கிய பங்களிப்பை வழங்கியிருக்கிறார்.
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கில் ஒற்றை சிலிண்டர் கொண்ட எல்எஸ்400 ஆயில் கூல்டு சிஸ்டம் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்மாக 25 பிஎச்பி பவரை இந்த எஞ்சின் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டதாக வருகிறது.
இந்த பைக் லிட்டருக்கு 30 கிமீ முதல் 35 கிமீ வரை மைலேஜ் தரும் என்பதோடு, 15 லிட்டர் கொள்ளளவு உடைய பெட்ரோல் டேங்க், அடிக்கடி எரிபொருள் நிரப்ப வேண்டிய அவசியத்தை குறைக்கும் என நம்பலாம்.
இந்த பைக் 80 முதல் 120 கிமீ வேகத்தில் மிகச்சிறப்பான பயண அனுபவத்தையும், சவுகரியத்தையும் வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது. 10,000 கிமீ தூரத்துக்கு ஒருமுறை சர்வீஸ் இடைவெளி வழங்கப்படும் என்பதால், பராமரிப்பும் எளிதாகவும், குறைவான செலவீனம் கொண்டதாகவும் இருக்கும்.
அத்துடன், 25,000 கிமீ தூரத்துக்கு ஒருமுறை ஸ்பார்க் ப்ளக் மாற்றினால் போதுமானதாக இருக்கும் என்று ராயல் என்ஃபீல்டு தெரிவிக்கிறது. இமயமலையில் மேற்கொள்ளப்படும் பல சாகச பயணங்களுக்கு தற்போது அதிக அளவில் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அதனை மனதில் கொண்டு, இமயமலையில் மேற்கொள்ளப்படும் சாகசப் பயணங்கள் மற்றும் சாகச ரக மோட்டார்சைக்கிள் விரும்பிகளுக்கு மிக பொருத்தமான அம்சங்கள் நிரப்பப் பெற்றதாக இந்த மோட்டார்சைக்கிள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முன்புற மட்கார்டு அதிக இடைவெளி, அதிக நிலைத்தன்மையையும், கரடுமுரடான சாலைகளில் எளிதாக பேலன்ஸ் செய்யும் வகையில், இருக்கை அமைப்பு மற்றும் சஸ்பென்ஷன் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கும், இந்த பைக்கின் அதிகாரப்பூர்வ படங்களை டிரைவ்ஸ்பார்க் தமிழ் வாசகர்கள் கேலரியிலும், அதற்கு கீழே வீடியோ தொகுப்புகளையும் வெகு விரைவாகவும், துல்லியமாகவும் கண்டு ரசிக்கலாம்.


Click it and Unblock the Notifications










































