ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிளை கஸ்டமைஸ் செய்து கொள்ள உதவும் ஆக்சஸரீஸ்கள்

By Ravichandran

இந்திய வாகன சந்தைகளில் மிகவும் எதிர்பார்க்கபட்ட வாகனங்களில் ஒன்றான ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் அட்வென்சர் டூரர் மோட்டார்சைக்கிள் சமீபத்தில் தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டது.

சவாலான விலையில் அறிமுகம் செய்யபட்டுள்ள இது, மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெரும் என எதிர்பார்க்கலாம்.

இந்த ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிள், ஆப்-ரோட் பயனங்களுக்கு ஏற்ற வாகனம் ஆகும். இந்த வாகனத்தை கொண்டு ஒருவர் நாட்டின் எந்த மூலைகளுக்கும் சுலபமாக பயனம் மேற்கொள்ள முடியும்.

இப்போது, இந்த ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிளை எப்படியெல்லாம் இதற்கான ஆக்சஸரீஸ்கள் கொண்டு கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம் என தெரிந்து கொள்வோம்.

royal-enfield-himalayan-motorcyle-official-accessories-images-aluminum-panniers

அலுமினியம் பேனியர்;

பேனியர் என்பது சாமான்களை சாமான்கள் எடுத்துச் செல்லும் பெரிய கூடை போன்ற பொருள் ஆகும்.

அலுமினியத்திலான பேனியர்களில் நீண்ட தூர பயணங்களுக்கு தேவையான ஏராளமான பொருட்களை எடுத்து செல்ல முடியும். இதை மனதில் வைத்து கொண்டு தான், ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்த ஹிமாலயன் மோட்டார்சைக்கிளை வடிவமைத்துள்ளனர். இந்த மோட்டார்சைக்கிளில், அலுமினியம் பேனியர்களை பொருத்தி கொள்ளும் வகையிலான வசதி வழங்கபட்டுள்ளது.

royal-enfield-himalayan-motorcyle-official-accessories-soft-saddle-bags

சாஃப்ட் சேட்டல் பேக்;

சாஃப்ட் சேட்டல் பேக் என்பது மென்மையான பைகள் ஆகும். நம்மில் சிலருக்கு பாக்ஸ் போன்ற வடிவிலான பேனியர்கள் வைத்து கொள்ள பிடிக்காமல் இருக்கலாம்.

இந்த மென்மையான மற்றும் உறுதியான பைகளிலும் ஏராளமான பொருட்களை எடுத்து செல்ல முடியும். ஆனால், இந்த பைகளை மோட்டார்சைக்கிளில் மாட்டுவதற்கான மவுண்ட் வேண்டும் அமைப்பு வேண்டும். அந்த வகையில், ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் இதற்கான பொருத்தமான தேர்வுகள் கொண்டுள்ளது.

royal-enfield-himalayan-motorcyle-official-accessories-himalayan-jerry-can

ஜெர்ரி கேன்ஸ்;

ஜெர்ரி கேன் என்பது பெட்ரோல் மற்றும் தண்ணீர் போன்ற பொருட்களை கொண்டு செல்ல உதவும் கேன்கள் ஆகும்.

இந்த ஜெர்ரி கேன்களை மோட்டார்சைக்கிளின் முன் பகுதியில் மாட்டி கொள்ளலாம். இப்படி பயணத்திற்கு தேவையான அனைத்தும் நம்முடன் இருந்தால், இதற்காக ஆங்காங்கே தேடி கொண்டிருக்க வேண்டிய அவசியம் இருக்காது.

royal-enfield-himalayan-motorcyle-official-accessories-tank-bags

டேங்க் பேக்ஸ்;

டேங்க் பேக் என்பது எரிபொருள் டேங்க் மீது மாட்டகூடிய அல்லது மவுண்ட் செய்யகூடிய பைகள் ஆகும். இதில், மொபைல்ஃபோன்கள் அல்லது ஜிபிஎஸ் சாதனங்கள் போன்ற சிறிய சிறிய பொருட்களை கொண்டு செல்லலாம்.

டஃபள் பேக்ஸ்;

டஃபள் பேக்ஸ் என்பது சிங்கிள் கேன்வாஸ் பேக்குகள் ஆகும். இவை மென்மையானதாகவும் எளிதில் சுமந்து செல்லும் வகையில் உள்ளது. பேக்கிங் பேக்குகளாக பயனபடுத்தபடும் இவற்றில் உங்களின் இலகுவான மற்றும் மிதமான எடை கொண்ட பொருட்களை கொண்டு செல்லலாம்.

வழக்கமாக, இத்தகைய பேக்குகள், சிறிய தூர பயணங்களுக்கு மிகவும் உபயோகமானதாக இருக்கும்.

royal-enfield-himalayan-motorcyle-official-accessories-riding-gears

ரைடிங் கியர்ஸ்;

ரைடிங் கியர்ஸ் என்பது நாம் மோட்டார்சைக்கிள் பயணங்களின் போது உபயோகிக்கும் பல்வேறு வகையிலான கூடுதல் உடமைகளை குறிக்கிறது.

ரெவிட் என்ற புகழ்பெற்ற நிறுவனம், பிரத்யேகமான ரைடிங் கியர்களான ஜேக்கட்கள், டிரவுஸர்கள் (பேண்ட்), கிளவ்ஸ் மற்றும் பூட்கள் பொருட்களை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.

இத்தகைய ரைடிங் கியர்களை அனைத்து விதமான வெப்பநிலைகளிலும் பயன்படுத்தி கொள்ளலாம். இவை உங்களை மேலும் தன்னம்பிக்கை மிக்கவராகவும், பாதுகாப்பானதாகவும் உணர செய்யும்.

ரெவிட் நிறுவனம் தான், தங்களின் தேவைகளுக்கான ரைடிங் கியர்களை வழங்கும் என ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தெரிவித்தது.

இறுதி கருத்து;

மேற்குறிப்பிட்ட இந்த ஆக்சஸரீஸ்களை தவிர, ஷோரூம்களிலும், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களிலும் ஏராளமான பொருட்கள் கிடைக்கிறது.

எக்ஸ்ஹாஸ்ட்கள், ஹேண்டில்பார்கள், கிராஷ் கார்ட், ஹெட்லேம்ப் கிரில், ஹெட்லேம்ப்கள், ஹெல்மெட்கள், எல்இடி, ஹேலோஜன் லைட்டிங் உள்ளிட்ட பல்வேறு வகையிலான ஆக்சஸரீஸ்கள் கொண்டு உங்களின் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிளை நீங்கள் விரும்பும் வகைகளில் மறுவடிவமைத்து கொள்ளலாம்.

இதர தொடர்புடைய செய்திகள்;

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிள், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் அட்வென்சர் டூரர் பைக் இந்தியாவில் அறிமுகம்

ஹிமாலயன் தொடர்புடைய செய்திகள்

More from DriveSpark

Article Published On: Friday, March 18, 2016, 12:04 [IST]
English summary
Royal Enfield Himalayan Adventure Tourer Motorcyle was launched recently. Now, you can customise your Himalayan with whole lot of official Accessories. Some of these official Accessories includes Aluminum Panniers, Soft Saddle Bags, Jerry Cans, Tank Bags, Duffle Bags and Riding Gears. To know more about these official Accessories, check here...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X