ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள், 9 புதிய வண்ணங்களில் அறிமுகம்
9 மேம்படுத்தபட்ட வண்ணங்களில், உயர்த்தபட்ட விலைகளில், தங்கள் நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்களை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
மேம்படுத்தபட்ட நிறங்கள் மற்றும் புதிய விலைகள் குறித்த கூடுதல் விவரங்களை வரும் ஸ்லைடர்களில் தெரிந்து கொள்ளலாம்.

9 நிறங்கள்;
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தங்களின் மோட்டார்சைக்கிள்களை 9 புதிய நிறங்களில் மேம்படுத்தி வழங்குகிறது.

எந்த மாடல்களில், எத்தனை நிறங்கள்?
கிளாசிக் மாடலில் 4 புதிய நிற தேர்வுகளிலும், புல்லட் ரேன்ஜ்களில் 3 வண்ணங்களின் தேர்வுகளிலும், காண்டினெண்டல் ஜிடி ஒரு புதிய நிறத்திலும், 2016 தண்டர்பர்ட் ஒரு புதிய வண்ணத்திலும் வழங்கபடுகிறது.

புதிய நிறங்களில் கிடைக்கும் மோட்டார்சைக்கிள்களும், விலைகளும்...1
புதிய வண்ணங்களில் கிடைக்கும் மோட்டார்சைக்கிள்களும், அதன் விலைகளின் விவரங்களை விவரமாக தெரிந்து கொள்ளலாம்.
ராயல் என்ஃபீல்டு காண்டினெண்டல் ஜிடி - ஜிடி கிரீன் - 2.16 லட்சம் ரூபாய்
ராயல் என்ஃபீல்டு தண்டர்பர்ட் 350 - ஆஸ்ஃபால்ட் - 1.54 லட்சம் ரூபாய்
ராயல் என்ஃபீல்டு தண்டர்பர்ட் 500 - ஆஸ்ஃபால்ட் - 1.95 லட்சம் ரூபாய்
ராயல் என்ஃபீல்டு புல்லட் எல்க்ட்ரா 350 - மெரூன் மற்றும் புளூ - 1.33 லட்சம் ரூபாய்
குறிப்பிடபட்டுள்ள அனைத்து விவரங்களும், ஆன் - ரோட் (டெல்லி) விலைகளாகும்.

புதிய நிறங்களில் கிடைக்கும் மோட்டார்சைக்கிள்களும், விலைகளும்...2
புதிய வண்ணங்களில் கிடைக்கும் மோட்டார்சைக்கிள்களும், அதன் விலைகளின் விவரங்களை விவரமாக தெரிந்து கொள்ளலாம்.
ராயல் என்ஃபீல்டு புல்லட் 500 - மார்ஷ் கிரே - 2.16 லட்சம் ரூபாய்
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 - மிண்ட் மற்றும் செஸ்ட்னட் - 1.41 லட்சம் ரூபாய்
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 - குரோம் கிரீன் மற்றும் கிளாசிக் குரோம் கிரே - 1.92 லட்சம் ரூபாய்
குறிப்பிடபட்டுள்ள அனைத்து விவரங்களும், ஆன் - ரோட் (டெல்லி) விலைகளாகும்.

விலக்கபட உள்ளவை;
பெரும்பாலான மாடல்களில், தற்போது கிடைக்கும் வண்ண தேர்வுகள் கொண்ட மோட்டார்சைக்கிள்கள் தொடர்ந்து விற்கபடும்.
எனினும், சந்தைகளில் சீராக விற்பனையாகாத மாடல்கள், விலக்கி கொள்ளபடும்.

கூடுதல் விலைகள் இல்லை;
வெவ்வேரு வண்ணங்களில் மேம்படுத்தி வழங்கபடும் வாகனங்கள், புதிய வண்ணங்களில் வழங்கபடுவதற்காக விலைகள் கூட்டபடவில்லை.

இளைய தலைமுறையினரை ஈர்க்கும்;
ரெட்ரோ-ஸ்டைலிங் மோட்டார்சைக்கிள்களின், ஸ்டைலிங் முறையை காட்சிபடுத்தும் வகையில் சில வண்ணங்கள் ஏற்கபட்டுள்ளது.
இந்த புதிய நிறங்களும், பெயிண்ட் ஸ்கீம்களும் இளம் தலைமுறையினரை நிச்சயம் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;
ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள், 8 புதிய வண்ணங்களில் வெளியாகிறது?
ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் தொடர்பான செய்திகள்
ஒரு மணிநேரத்தில் ஆன்லைனில் ஸ்பெஷல் புல்லட்டுகள் விற்று தீர்ந்தன

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
செய்திகள் உடனுக்குடன்;
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்


Click it and Unblock the Notifications








