ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள், 8 புதிய வண்ணங்களில் வெளியாகிறது?
2016-ஆம் ஆண்டிற்கான மேம்பாடுகளின் ஒரு பகுதியாக, ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் 8 புதிய வண்ணங்களின் வெளியாக உள்ளது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் சார்பாக மேம்படுத்தபட்டு வெளியாக உள்ள இந்த மோட்டார்சைக்கிள்கள் குறித்து வரும் ஸலைடர்களில் காணலாம்.

2016-ஆம் ஆண்டிற்கான மேம்பாடுகள் பற்றி...
பல்வேறு நிறுவனங்களின் தங்கள் வாகனங்களை தேவைபடும் போது மேம்பாடுகள் செய்து வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், 2016-ஆம் ஆண்டிற்காக ராயல் என்ஃபீல்டு நிறுவனமும் தங்களின் மோட்டார்சைக்கிள்களுக்கு மேம்பாடுகளை செய்கின்றது.
இந்த ஆண்டு, 8 புதிய நிறங்களில் இந்த மோட்டார்சைக்கிள்கள் வழங்கபட உள்ளது. இந்த நிறங்கள் தொடர்பான மேம்பாடுகளின் காரணமே நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பையும் மற்றும் அதன் மூலம் உற்பத்தி செய்யபடும் தயாரிப்புகளை இளம் வாடிக்கையாளர்களையும் ஈர்க்கும் வகையில் புதுமையாக வைத்திருப்பது தான் என தெரிகிறது.

4 மாடல்களுக்கு, 8 வண்ணங்கள்;
இந்த 8 வண்ணங்கள் தொடர்பான மேம்பாடுகள், 4 மோட்டார்சைக்கிள் மாடல்களில் பரவலாக வழங்கபட உள்ளது.
இந்த புதிய நிறங்கள் தொடர்பான மேம்பாடுகள், கிளாசிக் 350, எலக்ட்ரா 350, கிளாசிக் 500 மற்றும் புல்லட் 500 ஆகிய மாடல்களில் பரவலாக வழங்கபட உள்ளது. இதோடு மட்டுமல்லாமல், இந்த இந்திய உற்பத்தி நிறுவனம் வேறு சில மேம்பாடுகளையும் சேர்த்து வழங்க உள்ளனர்.

இதர மேம்பாடுகள்;
புதிய பெயிண்ட் வேலைப்பாடுகள் தவிர, வேறு சில விஷுவல் மாற்றங்களும் செய்யபட உள்ளது.
இந்த மோட்டார்சைக்கிள்களுக்கு புதிய ஸ்டிக்கரகள், குரோம் லோகோ-க்கள், ஹெட்லைட் கேஸிங், ஃபோர்க் கவர் உள்ளிட்ட மாற்றங்கள் செய்யபட உள்ளது. மேலும், சீட்-டிற்கு புதிய கவர் கூட வழங்கபட உள்ளது. சில மாற்றங்கள், இந்த நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோவில் உள்ள, சில குறிப்பிட்ட மாடல்களுக்கு மட்டும் செய்யபட உள்ளது.

இஞ்ஜின்;
இஞ்ஜின் தொடர்பாக, ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களுக்கு எந்த விதமான மாற்றங்களும் செய்யபட போவதில்லை என தெரிகிறது.

உற்பத்தி;
இந்த ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் தொடர்ந்து சென்னை உற்பத்தி ஆலையிலேயே உற்பத்தி செய்யபட உள்ளது.

விலைகளில் மாற்றம்?
2016-ஆம் ஆண்டிற்கு, ஈர்க்கும் வகையில் புதிய வண்ணங்களில் வெளியாக உள்ள புதிய ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களின் விலைகளில் சிறிய அளவிலான ஏற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

மாடல் ரீதியாக, புதிய நிற மேம்பாடுகள்;
ராயல் என்ஃபீல்டு எலக்ட்ரா 350 - பெரிடியன் புளூ, மர்ஸாலா
ரெட் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 - ஃபன்கி மிண்ட், செஸ்ட்னட்
ராயல் என்ஃபீல்டு புல்லட் 500 - மார்ஷ் கிரே
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 - ஸ்குவாட்ரன் புளூ, குரோம் கிராஃபைட் மற்றும் குரோம் கிரீன்

எதிர்பார்க்கபடும் அறிமுக காலம்;
புதிய நிறங்களின் மேம்பாடுகளுடன் வெளியாக உள்ள ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் இந்த ஜனவரி மாதத்திலேயே வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதர தொடர்புடைய செய்திகள்;
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக் எப்போது வரும் என தவிப்பவர்களுக்காக
உற்பத்தி பிரிவில் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்... ஸ்பை படங்கள்
சென்னையில் மூன்றாவது ஆலையை அமைக்க ராயல் என்ஃபீல்டு திட்டம்

செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்


Click it and Unblock the Notifications








