சமையல் எண்ணெயில் ஓடும் மோட்டார்சைக்கிள்... கேரள மாணவர்களின் அசத்தல்!

By Meena

விக்குற விலைவாசியில பெட்ரோல், டீசல் ஊத்தி கட்டுப்படியாகுமா? என்ற புலம்பல்களை நாம் அடிக்கடி கேட்பதுண்டு. குறைந்த விலையில் மாற்று எரிபொருகள்காக வந்த பயோ கேஸ் போன்றவையும் பெரிய அளவில் வாகன ஓட்டிகளுக்குப் பலனளிக்கவில்லை.

ஏதாவது வேஸ்ட்டா போற பொருளில் இருந்து எரிபொருள் கண்டுபிடிச்சா பரவாயில்லை என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு. அதன் மூலம் எரிபொருள் விலை குறைய வாய்ப்புள்ளது என்பதும் அவர்கள் வாதம்.

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்

இந்த நிலையில், சமையலுக்குப் பயன்படுத்திய பிறகு மீதமான எண்ணெய்யை வாகன எரிபொருளாகப் பயன்படுத்த முடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள் கேரளத்தைச் சேர்ந்த 4 இளைஞர்கள்.

இது என்னப்பா புது டெக்னிக்கா இருக்கே? என பார்ப்பவர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்கள் அவர்கள். கேரள மாநிலம், கொச்சியில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்களான அதுல் ஜியோ, ராகுல் சி.வி., அஜின் சி.எம்., ரவீண் குமார் ஆகிய நான்கு பேர் கொண்ட இளைஞர் படைதான் சத்தமில்லாமல் இந்த தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

மாணவர்கள்

கழிவுகளாக வீணாய்ப் போகும் பொருள்களை வெளிநாடுகளில் எரிபொருளாக மாற்றிப் பயன்படுத்தப்படுவதை அறிந்த அந்த நான்கு பேரும், அதேபோன்றதொரு முயற்சியில் நாமும் செயல்படுவோம் என உறுதியேற்றார்கள்.

கல்லூரி இறுதியாண்டு புராஜெக்ட்டாக சமையல் எண்ணெய் எரிபொருளை கையில் எடுத்தார்கள். இதற்காக அவர்கள் தேர்வு செய்த வாகனம் ராயல் என்ஃபீல்டு. அதன் லோகோவை ஆர்இ என மாற்றியும் உள்ளனர். ரீசைக்கிள், ரீ யூஸ், ரெடுயூஸ் என்ற வார்த்தைகளின் முதல் இரு எழுத்துகள்தான் ஆர்.இ.

முதலில் சமையல் எண்ணெய் எரிபொருளைப் பயன்படுத்தி வாகனத்தை இயக்க முடியவில்லையாம். விடா முயற்சி... விஸ்வரூப வெற்றி என்ற அடிப்படையில், அதில் சில சேர்மங்களை சேர்த்து பயோ எரிபொருளாக மாற்றியுள்ளனர்.

அதைப் பயன்படுத்தும் போது வெளியாகும் மாசுவின் அளவு தொடக்கத்தில் இருந்ததைக் காட்டிலும், இப்போது குறைந்துள்ளதாகவும் அவர்கள் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.

ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் எரிபொருள் தயாரிக்க ரூ.76 செலவாகிறதாம். மொத்தமாக பெரிய அளவில் இதை உற்பத்தி செய்தால் லிட்டர் ரூ.30-க்கு விற்பனை செய்ய முடியும் என்கின்றனர் கண்களில் நம்பிக்கையுடன்.

இளைய இந்தியாவின் இத்தகைய சமூகம் சார்ந்த சிந்தனைகள்தான் உலக அரங்கில் நம்மை தலை நிமிர வைக்கும் வெளிச்சக் கீற்று....

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Royal Enfield Runs On A Different Fuel; How About Cooking Oil?
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X