கோடையை வெல்ல கூல் ஐடியா... டூ வீலர்களுக்கான விசேஷ குடைகள்!

Written By:

கோடை காலத்தில் வெயிலில் வறுபடும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு குளு குளு செய்தி. ஆம், இருசக்கர வாகனங்களில் வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபடுவதற்கான விசேஷ குடைகள் ஆன்லைனில் விற்பனைக்கு கிடைக்கின்றன.

மலிவான விலைியில் கிடைக்கும் இந்த விசேஷமான குடைகள் நிச்சயம் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அதிக பயன் தருவதாக அமையும். கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

பயன்பாடு

பயன்பாடு

மழை மற்றும் வெயில் காலத்தில் குடை பிடித்துக் கொண்டு பைக், ஸ்கூட்டரை ஓட்டுவது மிக சவாலானது. அத்துடன், அது காற்றின் வேகத்தில் வண்டியை கீழே தள்ளும் ஆபத்தும் இருக்கிறது.

விசேஷம்

விசேஷம்

ஆனால், இந்த குடைகள் இருசக்கர வாகனங்களில் எளிதாக பொருத்தும் விசேஷ வடிவமைப்பை பெற்றிருக்கின்றன. காற்று வேகத்தை எளிதாக சமாளிக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

பார்வையை மறைக்காது

பார்வையை மறைக்காது

இந்த குடைகளை டூ வீலரில் பொருத்துவதும் எளிது என்பதுடன் ஒற்றை கம்பியில் இருப்பதால், பார்வையையும் மறைக்காது.

வேகம்

வேகம்

இந்த குடைகளை மணிக்கு 70 கிமீ வேகம் வரை பயன்படுத்த முடியும். எனவே, நிச்சயம் இது பயனுள்ளதாக அமையும்.

 வெயிலின் தாக்கம்

வெயிலின் தாக்கம்

அனலை கக்கும் வெயிலில் முகம் மற்றும் உடல்களில் ஏற்படும் உபாதைகள் குறையும் என்பதோடு, நேரடியாக சூரிய ஒளி படுவதால் ஏற்படும் பாதிப்புகளும் இந்த குடையால் குறையும். மழை நேரத்திலும் இது பயன்படும்.

கழற்றுவதும் ஈஸி

கழற்றுவதும் ஈஸி

தேவையில்லாத நேரத்தில் இந்த குடையை எளிதாக கழற்றி வைத்துக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.

ரகம்

ரகம்

பைக், ஸ்கூட்டர், சைக்கிள் என அனைத்திற்கும் ஏற்ற வடிவமைப்பில் இந்த குடைகள் கிடைப்பதும் மற்றொரு சிறப்பு.

வண்ணங்கள்

வண்ணங்கள்

டூ வீலர் குடைகள் பல வண்ணங்களில் கிடைக்கிறது. குறிப்பாக, பெண்கள் விரும்பும் இளஞ்சிவப்பு வண்ணம் அனேக நிறுவனங்கள் விற்பனைக்கு வைத்திருக்கின்றன.

இலகுவானது

இலகுவானது

இந்த குடை வெறும் ஒன்றரை கிலோ மட்டுமே எடை கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

விலை

விலை

ரூ.1,100 முதல் ரூ.1,500 வரையிலான விலையில் இந்த விசேஷ டூ வீலர் குடைகள் ஆன்லைனில் கிடைக்கிறது.

விற்பனை

விற்பனை

மும்பை, ஹைதாராபாத் உள்ளிட்ட நகரங்களில் இந்த குடைகளுக்கு அதிக வரவேற்பு காணப்படுகிறது. குறிப்பாக, பெண்கள், வயோதிகர்கள் அதிக அளவில் இந்த குடையை வாங்குவதற்கு முனைப்பு காட்டுகின்றனர்.

வரப்பிரசாதம்

வரப்பிரசாதம்

தமிழகத்தில் வெயில் கொடுமையை தாளமுடியாத இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இந்த குடை வரப்பிரசாதமாக அமையும் என நம்பலாம்.

Photo Credit: Chaya Umbrella

Source: Snapdeal

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Special Umbrella For Two Wheelers.
Story first published: Thursday, March 17, 2016, 17:15 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark