750சிசி ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் ரகசிய சோதனை... விடுவோமா என்ன?
இரண்டு சிலிண்டர்கள் கொண்ட 750சிசி எஞ்சினுடன் புதிய ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் ரகசியமாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அந்த மோட்டார்சைக்கிளை ஆட்டோமாபைல் இணையதளம் ஒன்று ரகசியமாக படம்பிடித்து வெளியிட்டிருக்கிறது.
முதல்முறையாக இரட்டை சிலிண்டர் எஞ்சினுடன் மோட்டார்சைக்கிளை ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்ய இருப்பது, அந்த நிறுவன தயாரிப்புகள் மீது அலாதி பிரியம் கொண்டிருப்பவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருவதாக அமைந்திருக்கிறது.

முதல் மாடல்
மிக பழமையான மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ராயல் என்ஃபீல்டு தற்போது ஒற்றை சிலிண்டர் எஞ்சின் கொண்ட மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்து வருகிறது. 350சிசி மற்றும் 500சிசி திறன் கொண்ட எஞ்சின்கள் அவை. ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி மோட்டார்சைக்கிளில் 535சிசி எஞ்சினும், சமீபத்தில் வந்த ஹிமாலயன் பைக்கில் 411சிசி எஞ்சினும் உள்ளது.
Source: Motorcyclenews.com

புதிய மாடல்
இந்த நிலையில், சந்தையில் போட்டியை சமாளிக்கவும், தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து கொள்ளவும் புதிய 750சிசி மாடலை தயாரித்துள்ளது ராயல் என்ஃபீல்டு. புதிய எஞ்சினில் பேரலல் ட்வின் அமைப்புடைய சிலிண்டர்களுடன் தயாராகியுள்ளது.
Source: Motorcyclenews.com

மோட்டார்சைக்கிள் மாடல்
தற்போது 535சிசி எஞ்சினுடன் விற்பனை செய்யப்பட்டு வரும் கான்டினென்டல் ஜிடி மோட்டார்சைக்கிளில் இந்த புதிய 750சிசி எஞ்சினை பொருத்தி சோதனைகள் செய்து வருகிறது ராயல் என்ஃபீல்டு. இங்கிலாந்திலுள்ள புதிய ஆராய்ச்சி மையத்தில் இந்த எஞ்சின் உருவாக்கப்பட்டிருக்கிறது.
Source: Motorcyclenews.com

பிளாட்ஃபார்ம்
சமீபத்தில் வந்த ஹிமாலயன் பைக்கில் இருக்கும் 411சிசி எஞ்சினில் மாற்றங்களை செய்து பேரலல் ட்வின் சிலிண்டர் அமைப்புடைய புதிய எஞ்சினாக மாற்றப்பட்டிருக்கிறது. மேலும், ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்திற்கு பதிலாக, சாதாரண கார்புரேட்டர் சிஸ்டம் கொண்ட எரிபொருள் செலுத்து அமைப்புடன் வருகிறது. இதனால், எஞ்சினின் உற்பத்தி செலவீனம் குறையும்.
Photo Credit: Bikeportal.com

ஆற்றல்
புதிய 750சிசி எஞ்சின் அதிகபட்சமாக 40 பிஎச்பி பவரையும், 60என்எம் டார்க்கையும் வழங்கும் ஆற்றலை பெற்றிருக்கும். ஆயில்கூல்டு எஞ்சின் குளிர்விப்பு அமைப்பு இருக்கும். இந்த புதிய எஞ்சின் மூலமாக வெளிநாட்டு மார்க்கெட்டுகளிலும் சந்தைப் போட்டியை எளிதாக சமாளிக்கும் வாய்ப்பு ஏற்படும்.
Photo Credit: Bikeportal.com

விரைவில்...
தற்போது தீவிர சோதனை ஓட்டத்தில் இருக்கும் 750சிசி கான்டினென்டல் ஜிடி மோட்டார்சைக்கிள் அடுத்த ஆண்டு இந்தியாவிலும், 2018ல் ஐரோப்பிய மார்க்கெட்டுகளிலும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Photo Credit: Bikesocial

டிரையம்ஃப் எஞ்சினியர்கள்
இங்கிலாந்தின் லீசெஸ்டர்ஷயர் பகுதியில் புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை ராயல் என்ஃபீல்டு திறந்துள்ளது. அந்நாட்டின் பழமையான பிரிமியம் மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான டிரையம்ஃப் நிறுவனத்தின் ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்த எஞ்சினியர்கள் பலர் இந்த புதிய மையத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த ஆராய்ச்சி மையத்திலிருந்து பல புதிய தயாரிப்புகளை உருவாக்க ராயல் என்ஃபீல்டு திட்டமிட்டிருக்கிறது.
Photo Credit: Bikesocial.com


Click it and Unblock the Notifications








