ஃப்யூவல் இஞ்ஜெக்ஷன் வசதி கொண்ட சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எஃப் இந்தியாவில் அறிமுகம்

By Ravichandran

சுஸுகி மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம், ஃப்யூவல் இஞ்ஜெக்ஷன் தொழில்நுட்பம் கொண்ட சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எஃப் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் தற்போது தொடர் பண்டிகைகாலங்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

இதை கருத்தில் கொண்டு, பல்வேறு அட்டோமொபைல் நிறுவனங்கள் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்கின்றன அல்லது தற்போது சந்தைகளில் உள்ள தயாரிப்புகளில் மேம்பாடுகள் செய்து வழங்குகின்றனர்.

அந்த வகையில், சுஸுகி மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஃப்யூவல் இஞ்ஜெக்ஷன் தொழில்நுட்பம் கொண்ட சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எஃப் பைக் பற்றிய கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

மேம்பாடுகள்;

மேம்பாடுகள்;

ஜப்பானை சேர்ந்த சுஸுகி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம், இந்திய வாகன சந்தைகளில் சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எஃப் பைக்கை ஃஎப்ஐ எனப்படும் ஃப்யூவல் இஞ்ஜெக்ஷன் தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தி அறிமுகம் செய்துள்ளனர்.

ஃப்யூவல் இஞ்ஜெக்ஷன் தொழில்நுட்பம் கொண்ட சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எஃப் பைக், அதிக செயல்திறன் கொண்டிருக்க வாய்ப்புள்ளதால், இது மக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெரும் என எதிர்பார்க்கலாம்.

கிடைக்கும் மாடல்;

கிடைக்கும் மாடல்;

ஃப்யூவல் இஞ்ஜெக்ஷன் தொழில்நுட்பமானது சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எஃப் பைக்கின் மோட்டோஜிபி எடிஷன் மாடலில் மட்டுமே கிடைக்கும். இதற்கு வாடிக்கையாளர்கள், ஃபிரன்ட் டிஸ்க் பிரேக் மற்றும் ரியர் டிஸ்க் பிரேக் உடைய ஜிக்ஸெர் எஸ்எஃப் பைக்கை தேர்வு செய்ய வேண்டும்.

தற்போதைய நிலையில், சுஸுகி மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம், ஃப்யூவல் இஞ்ஜெக்ஷன் தொழில்நுட்பம் உடைய சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எஃப் பைக்கின் மோட்டோஜிபி எடிஷன் மாடலை ஒரே ஒரு நிற தேர்வில் மட்டுமே வழங்குகின்றனர்.

புக்கிங்;

புக்கிங்;

ஃப்யூவல் இஞ்ஜெக்ஷன் தொழில்நுட்பம் உடைய சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எஃப் பைக், 5,000 ரூபாய் என்ற டோக்கன் புக்கிங் கட்டணத்தை செலுத்தி, இதன் புக்கிங்கை செய்து கொள்ளலாம்.

ஆனால், ஒரு சில டீலர்ஷிப்கள் மட்டுமே இந்த பைக்கின் புக்கிங்கை ஏற்று கொள்கின்றனர்.

கிடைக்கும் நகரங்கள்;

கிடைக்கும் நகரங்கள்;

ஃப்யூவல் இஞ்ஜெக்ஷன் தொழில்நுட்பம் உடைய சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எஃப் பைக், இந்தியாவில் 9 நகரங்களில் மட்டுமே கிடைக்கும். தற்போதைய நிலையில், இது அஹமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, ஹைதராபாத், கொச்சி, கொல்கத்தா, மும்பை மற்றும் பூனே ஆகிய நகரங்களில் மட்டுமே கிடைக்கிறது.

விவரக்குறிப்புகள்;

விவரக்குறிப்புகள்;

இதுவரை, சுஸுகி நிறுவனம், ஃப்யூவல் இஞ்ஜெக்ஷன் தொழில்நுட்பம் உடைய சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எஃப் பைக்கின் விவரக்குறிப்புகள் எதையும் வெளியிடவில்லை. ஃப்யூவல் இஞ்ஜெக்ஷன் தொழில்நுட்பம் போன்ற மேம்பாடுகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், இந்த சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எஃப் பைக் கூடுதல் செயல்திறன் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம்.

டெலிவரி;

டெலிவரி;

ஃப்யூவல் இஞ்ஜெக்ஷன் உடைய சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எஃப் பைக்கின் டெலிவரி, இந்த மாத இறுதியில் இருந்தே துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்ப்பு;

எதிர்பார்ப்பு;

இந்தியாவில் பண்டிகை காலங்களை அடுத்து, இந்திய வாகன சந்தைகளில் சுஸுகி நிறுவனம் மேலும் பல மாடல்களை அறிமுகம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலை;

விலை;

ஃப்யூவல் இஞ்ஜெக்ஷன் தொழில்நுட்பம் கொண்ட சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எஃப் பைக், 99,262 ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் விற்கப்படும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

கைக்கு எட்டும் விலையில் விற்பனைக்கு வந்தது புதிய சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எஃப் பைக்!!

ரியர் டிஸ்க் பிரேக் உடைய சுஸுகி ஜிக்ஸெர் பைக் இந்தியாவில் அறிமுகம்

சுஸுகி ஜிக்ஸெர் மாடல்களில் விரைவில் ரியர் டிஸ்க் பிரேக் ஆப்ஷன்!

More from DriveSpark

Article Published On: Wednesday, September 7, 2016, 18:14 [IST]
English summary
Suzuki Motorcycles India has updated its Gixxer SF with Fuel Injection (FI) system for this Festive Season. Models equipped with FI can now be booked for token amount of Rs. 5,000. Customers will have spend Rs. 99,262 ex-showroom (Delhi) for this motorcycle. Fuel Injection system on Suzuki Gixxer SF will be offered only on MotoGP Edition model. To know more, check here...
மேலும்... #சுஸுகி #suzuki
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+