சுஸுகியின் ஜிஎஸ்எக்ஸ்-எஸ்1000, ஜிஎஸ்எக்ஸ்-எஸ்1000எஃப் மாடலில் ஸ்பெஷல் எடிஷன்கள் அறிமுகம்
சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம், சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்1000 மற்றும் சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்1000எஃப் மோட்டார்சைக்கிள்களின் ஸ்பெஷல் எடிஷன்களை அறிமுகம் செய்துள்ளது.
இந்த ஸ்பெஷல் எடிஷன்கள் குறித்த கூடுதல் விவரங்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஸ்பெஷல் எடிஷன்;
சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம், ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் ஆட்டோமொபைல் நிறுவனம் ஆகும்.
இந்நிறுவனம், தங்களின் ஜிஎஸ்எக்ஸ்-எஸ்1000 மற்றும் ஜிஎஸ்எக்ஸ்-எஸ்1000எஃப் மோட்டார்சைக்கிள்களுக்கு சிறப்பு மாற்றங்கள் (treatment) செய்யப்பட்ட ஸ்பெஷல் எடிஷன்களை அறிமுகம் செய்துள்ளனர்.

மொத்த ஸ்பெஷல் எடிஷன்கள்;
மொத்தத்தில், சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம், 3 ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்துள்ளனர்.
ஜிஎஸ்எக்ஸ்-எஸ்1000 மாடலில் 2 ஸ்பெஷல் எடிஷன்களும், சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்1000எஃப் மாடலில் 1 ஸ்பெஷல் எடிஷனும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஜிஎஸ்எக்ஸ்-எஸ்1000;
ஜிஎஸ்எக்ஸ்-எஸ்1000 மாடலில், கார்பன் எடிஷன்-புளு (Carbon Edition-Blue) மற்றும் கார்பன் எடிஷன்-ரெட் (Carbon Edition-Red) என்ற பெயரிலான ஸ்பெஷல் எடிஷன்களை அறிமுகம் செய்துள்ளனர்.

ஜிஎஸ்எக்ஸ்-எஸ்1000எஃப்;
சுஸுகி நிறுவனம், ஜிஎஸ்எக்ஸ்-எஸ்1000எஃப் மாடலில், டூர் எடிஷன் என்ற ஸ்பெஷல் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது.

கிடைக்கும் தேதி;
சுஸுகி நிறுவனம் அறிமுகம் செய்யும் இந்த 3 ஸ்பெஷல் எடிஷன்களும், ஆகஸ்ட் 2016 முதல் அனைத்து சுஸுகி ஷோரூம்களிலும் விற்பனைக்கு கிடைக்கும்.

கார்பன் எடிஷன்;
கார்பன் எடிஷன் என்ற பெயரில் வெளியாகும் மோட்டார்சைக்கிள்கள், ரெட் மற்றும் பிளாக் நிற கூட்டிலான மோட்டோஜிபி புளு பெயின்ட் ஸ்கீமில் கிடைக்கும்.
சுஸுகி நிறுவனம், கார்பன் எடிஷன் மாடலுக்கு, மாற்று கவர், கிளட்ச் கவர், கிராங்க்கேஸ் கவர், கார்பர் ஃபைபர் மூலம் செய்யப்பட ரியர் ஹக்கர் ஆகியவற்றையும் வழங்குகிறது.
இந்த 2 நிற தேர்வுகளுக்கும் அதே நிறத்திலான மேட்சிங் ப்ரெம்போ பிரேக் கேளிப்பர்கள் பொருத்தப்பட்டுள்ளது.

டூர் எடிஷன்;
ஜிஎஸ்எக்ஸ்-எஸ்1000எஃப் மாடலின் டூர் எடிஷன் புளு அல்லது ரெட்/பிளாக் பெயின்ட் ஸ்கீமில் மட்டுமே கிடைக்கும். சுஸுகி நிறுவனம், இந்த ஸ்பெஷல் எடிஷனில் ஏராளமான சிறப்பு அம்சங்களை சேர்த்துள்ளனர்.
சுஸுகி நிறுவனம், இந்த டூர் எடிஷன் மாடலுக்கு, ஹீட்டட் கிரிப்கள், உயர்ந்த வின்ட் ஸ்கிரீன், சில்வர் கிராஃபிக் கிட், 1.5 லிட்டர் டேங்க் பேக் மற்றும் 12 லிட்டர் டெயில் பேக் ஆகிய பல்வேறு அம்சங்களை வழங்குகின்றனர்.

கிடைக்கும் சந்தைகள்;
சுஸுகி நிறுவனம் வழங்கும் இந்த 3 ஸ்பெஷல் எடிஷன் மாடல்களும், பிரத்யேகமாக ஐரோப்பிய சந்தைகளில் மட்டுமே விற்கப்பட உள்ளது.

இந்தியாவிற்கு வருமா?
சுஸுகி நிறுவனம், இந்த 3 ஸ்பெஷல் எடிஷன்களில் எந்த மாடலையும் இந்திய வாகன சந்தைகளுக்கு வழங்காது.
மேலும், சுஸுகி நிறுவனம் வழங்கும் இந்த 3 ஸ்பெஷல் எடிஷன் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்வது தொடர்பான எந்த தகவல்களும் இது வரை வெளியாகவில்லை.

இதர தொடர்புடைய செய்திகள்;
ரியர் டிஸ்க் பிரேக் உடைய சுஸுகி ஜிக்ஸெர் பைக் இந்தியாவில் அறிமுகம்
ஸ்பெஷல் எடிஷன் தொடர்புடைய செய்திகள்
சுஸுகி தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

சுஸுகியின் ஜிஎஸ்எக்ஸ்-எஸ்1000, ஜிஎஸ்எக்ஸ்-எஸ்1000எஃப் மாடல் ஸ்பெஷல் எடிஷன் - கூடுதல் படங்கள்

Click it and Unblock the Notifications