சுஸுகி ஹயாட்டே இபி பைக், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்
சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம், தங்களின் சுஸுகி ஹயாட்டே இபி பைக்கை சத்தமில்லாமல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளனர்.
சுஸுகி ஹயாட்டே இபி பைக் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் தெரிந்து கொள்ளலாம்.

சுஸுகி ஹயாட்டே இபி...
சுஸுகி ஹயாட்டே இபி பைக்கானது, சுஸுகி நிறுவனத்தின் நுழைவு நிலை கம்யூட்டர் மோட்டார்சைக்கிளின் மேம்படுத்தபட்ட வடிவம் ஆகும்.
சுஸுகி ஹயாட்டே இபி பைக், மெல்ல மெல்ல தற்போது சந்தையில் விற்பனை செய்யபடும் ஹயாட்டே பைக்கிற்கு மாற்றாக அமைய உள்ளது.

இஞ்ஜின்;
சுஸுகி ஹயாட்டே இபி பைக், 113 சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்ட், எஸ்ஓஹெச்ஸி இஞ்ஜின் கொண்டுள்ளது.
4-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ள இதன் இஞ்ஜின், 8.58 பிஹெச்பியையும், உச்சபட்சமாக 9.3 என்எம் டார்க்கை வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

மைலேஜ்;
இதன் செக்மண்ட்டில், முக்கியமாக கவணிக்க வேண்டிய விஷயமே மைலேஜ் தான் என கூறப்படுகிறது. சுஸுகி ஹயாட்டே இபி பைக் எஸ்இபி (சுஸுகி ஈக்கோ பெர்ஃபார்மன்ஸ்) தொழில்நுட்பம் கொண்டுள்ளதால், சிறந்த எரிபொருள் திறன் கொண்டுள்ளது.

டிசைன்;
சுஸுகி டிசைனர்கள், இந்த சுஸுகி ஹயாட்டே இபி கம்யூட்டர் மோட்டார்சைக்கிளுக்கு பிரிமியம் டிகேல்கள் மற்றும் ஸ்டிக்கர்களை வழங்கியுள்ளனர்.
ஸ்டைலிஷான மற்றும் ஸ்போர்ட்டியான தோற்றம் வழங்கும் வகையில் சுஸுகி ஹயாட்டே இபி பைக்கின் பாடிவர்க் மறுவடிவமைக்கபட்டுள்ளது.

சிறப்பம்சம்;
சுஸுகி ஹயாட்டே இபி பைக், அல்லாய் வீல்கள் மற்றும் ட்யூப்லெஸ் டயர்கள் கொண்டுள்ளது.

இதர அம்சங்கள்;
சுஸுகி ஹயாட்டே இபி பைக், மிக நீண்ட சீட் (இருக்கை) வழங்கபட்டுள்ளது.
மேலும், சுஸுகி ஹயாட்டே இபி பைக் தான், இதன் செக்மெண்ட்டிலேயே மிக நீண்ட வீல் பேஸ் கொண்டுள்ளது.

கிடைக்கும் வண்ணங்கள்;
சுஸுகி ஹயாட்டே இபி பைக் மொத்தம் 3 வண்ணங்களில் கிடைக்கிறது.
சுஸுகி ஹயாட்டே இபி பைக், பியர்ல் மீரா ரெட், கிளாஸ் ஸ்பார்கிள் பிளாக் மற்றும் மெட்டாலிக் ஊர்ட் கிரே ஆகிய நிறங்களில் வழங்கப்படுகிறது.

போட்டி;
போட்டியை பொருத்தவரை, சுஸுகி ஹயாட்டே இபி பைக் மிக கடுமையான போட்டி நிலவுகிறது.
சுஸுகி ஹயாட்டே இபி பைக், ஏற்கனவே இந்த செக்மண்ட்டில் உள்ள, ஹோண்டா லிவோ, டிவிஎஸ் விக்டர், ஹீரோ பேஷன் ஆகிய பைக்குகளின் போட்டியை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

வருங்கால திட்டம்;
சுஸுகி நிறுவனம், இந்திய வாகன சந்தைகளில், வரும் காலங்களில் வெவ்வேறு செக்மண்டில் பல்வேறு வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

விலை;
சுஸுகி ஹயாட்டே இபி பைக், 62,166 ரூபாய் என்ற (மும்பை) ஆன்-ரோட் விலையில் அறிமுகம் செய்துள்ளனர்.

இதர தொடர்புடைய செய்திகள்;
5 சுஸுகி ஹயாட்டே வாடிக்கையாளர்களுக்கு அடித்த யோகம்!
மேம்படுத்தப்பட்ட சுஸுகி ஹயாட்டே பைக் விற்பனைக்கு வந்தது
ஹயாட்டே தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்


Click it and Unblock the Notifications








