2015- ம் ஆண்டில் விற்பனையில் இந்தியாவின் டாப் - 10 இருசக்கர வாகனங்கள்!

By Saravana

கடந்த ஆண்டு இருசக்கர வாகன மார்க்கெட் சீரான வளர்ச்சி கண்டது. மேலும், பல புதிய மாடல்கள் வந்தாலும், பட்டியலில் உள்ள பெரும்பாலான இருசக்கர வாகன மாடல்கள், தொடர்ந்து பல ஆண்டுகளாக இந்த பட்டியலில் நிலையான இடத்தை தக்க வைத்து வருகின்றன.

சில மாடல்கள் பட்டியலில் புதிதாக குடியேறி, தனக்கான இடத்தை பதிவு செய்து கொண்டன. அந்த வகையில், கடந்த ஆண்டு விற்பனையில் இந்தியாவின் டாப் - 10 இருசக்கர வாகனங்களை பட்டியலில் காணலாம்.

10. ஹீரோ மேஸ்ட்ரோ

10. ஹீரோ மேஸ்ட்ரோ

கடந்த ஆண்டு விற்பனையில் 10வது இடத்தை ஹீரோ மேஸ்ட்ரோ ஸ்கூட்டர் பிடித்தது. கடந்த ஆண்டில் 4,97,276 மேஸ்ட்ரோ ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த 2014ம் ஆண்டு விற்பனையுடன் ஒப்பிடும்போது, தற்போது விற்பனை 4 சதவீதம் உயர்ந்துள்ளது.

09. டிவிஎஸ் ஜுபிடர்

09. டிவிஎஸ் ஜுபிடர்

டிவிஎஸ் ஜுபிடர் ஸ்கூட்டர் 9வது இடத்தை பெற்றது. இந் ஸ்கூட்டரின் விற்பனை மிக அபாரமாக வளர்ச்சி கண்டு வருகிறது. கடந்த ஆண்டில் 4,99,905 ஜுபிடர் ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. 2014ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், விற்பனை 51 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இந்த ஆண்டு இந்த ஸ்கூட்டரின் விற்பனை பல புதிய மைல்கல்களை கடக்கும் என எதிர்பார்க்கலாம்.

08. பஜாஜ் பல்சர்

08. பஜாஜ் பல்சர்

டாப் 10 பட்டியலில் பஜாஜ் பல்சர் பைக்குகள் தொடர்ந்து இடம்பிடித்து வருகின்றன. கடந்த ஆண்டில் பல்சர் பிராண்டு 8வது இடத்தை பெற்றிருக்கிறது. கடந் ஆண்டில் 6,24,182 பல்சர் பைக்குகள் விற்பனையாகியுள்ளன. 2014ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது விற்பனை ஒரு சதவீதம் குறைந்தது.

07. ஹீரோ கிளாமர்

07. ஹீரோ கிளாமர்

ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் வெற்றிகரமான 125சிசி பைக் மாடல் ஹீரோ கிளாமர். கடந்த ஆண்டு 7வது இடத்தை பிடித்தது. கடந்த ஆண்டில் 6,28,288 கிளாமர் பைக்குகள் விற்பனையாகின. 2014ம் ஆண்டு விற்பனையுடன் ஒப்பிடுகையில், இது 18 சதவீதம் கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது.

06. டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர்

06. டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர்

இந்தியாவின் ஒரே மொபட் மாடலான டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் விற்பனையிலும் சிறப்பான இடத்தை தக்க வைத்து வருகிறது. கடந்த ஆண்டில் 7,18,296 எக்ஸ்எல் சூப்பர் மொபட்டுகள் விற்பனையாகியுள்ளன. 1980ம் ஆண்டு டிவிஎஸ் எக்ஸ்எல் மொபட் பிராண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், கடந்த 2015ம் ஆண்டு ஜூலை மாதத்தில் விற்பனையில் ஒரு கோடி என்ற இமாலய இலக்கை கடந்து சாதனை படைத்தது. இந்தநிலையில், தற்போது 4- ஸ்ட்ரோக் எஞ்சினுடன் புதிய எக்ஸ்எல் சூப்பர் 100 மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம், விற்பனை கூடுதலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 05. ஹோண்டா சிபி ஷைன்

05. ஹோண்டா சிபி ஷைன்

கடந்த ஆண்டு விற்பனையில் ஹோண்டா சிபி ஷைன் 5வது இடத்தை பிடித்தது. கடந்த ஆண்டு இந்த பைக்கின் விற்பனை 8 சதவீதம் குறைந்தது. இருப்பினும், 125சிசி பைக் மார்க்கெட்டில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

04. ஹீரோ டீலக்ஸ்

04. ஹீரோ டீலக்ஸ்

கடந்த ஆண்டு ஹீரோ டீலக்ஸ் நான்காவது இடத்தை பிடித்தது. கடந்த ஆண்டில் 10,81,851 டீலக்ஸ் பைக்குகள் விற்பனையாகின. கடந்த 2014ம் ஆண்டைவிட விற்பனை 2 சதவீதம் குறைந்தது.

03. ஹீரோ பேஷன்

03. ஹீரோ பேஷன்

கடந்த ஆண்டு மூன்றாவது இடத்தை ஹீரோ பேஷன் பைக் பிடித்தது. கடந்த ஆண்டில் 11,86,621 பேஷன் பைக்குகள் விற்பனையாகியுள்ளன. இந்த பைக்கும் 2014ம் ஆண்டு விற்பனையைவிட குறைவான எண்ணிக்கையையே பதிவு செய்துள்ளது. அதாவது, 14 சதவீதம் அளவுக்கு குறைந்தது.

02. ஹோண்டா ஆக்டிவா

02. ஹோண்டா ஆக்டிவா

நம்பர்- 1 இடத்தை ஒரு சில மாதங்கள் கைப்பற்றி, ஹீரோவுக்கு தலைவலியை கொடுத்து வரும் ஹோண்டா ஆக்டிவா கடந்த ஆண்டு விற்பனையில் 2வது இடத்தை பெற்றுள்ளது. கடந்த ஆண்டில் 24,09,166 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. 2014ம் ஆண்டைவிட விற்பனை 16 சதவீதம் அதிகரித்தது. மேலும், முதல்6 இடத்தில் உள்ள மாடல்களில் விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்த ஒரே மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

01. ஹீரோ ஸ்பிளென்டர்

01. ஹீரோ ஸ்பிளென்டர்

ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் கடும் நெருக்கடிக்கும் மத்தியில் விற்பனையில் இந்தியாவின் நம்பர்-1 இருசக்கர வாகனம் என்ற பெருமையை ஹீரோ ஸ்பிளென்டர் பெறுகிறது. கடந்த ஆண்டில் 24,89,336 ஸ்பிளென்டர் பைக்குகள் விற்பனையாகியுள்ளன. 1994ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஸ்பிளென்டர் விற்பனையில் தொடர்ந்து சாதித்து வருகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, January 28, 2016, 14:13 [IST]
English summary
Ten Best selling two-wheelers in 2015
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+