ஜனவரியில் விற்பனையில் கலக்கிய டாப் 10 டூவீலர்கள்- நம்பர்-1 இடத்தில் யார்?

Written By:

புத்தாண்டின் துவக்கமாக அமைந்த ஜனவரியில் இருசக்கர வாகன விற்பனை சிறிதளவு வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது. கடந்த மாதம் 2.63 சதவீத வளர்ச்சியை இருசக்கர வாகன மார்க்கெட் பதிவு செய்திருக்கிறது.

வழக்கம்போல் முதல் பத்து இடங்களில் நம்பர்-1 இடத்தை பிடிக்க ஹீரோ ஸ்பிளென்டர், ஹோண்டா ஆக்டிவா இடையில் கடும் போட்டி நிலவியது. இந்தநிலையில், எந்தெந்த இருசக்கர வாகன மாடல்கள் முதல் 10 இடங்களை பிடித்து அசத்தியிருக்கிறது என்பதை ஸ்லைடரில் காணலாம்.

10. டிவிஎஸ் ஜுபிடர்

10. டிவிஎஸ் ஜுபிடர்

டிவிஎஸ் ஜுபிடர் விற்பனை தொடர்ந்து சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்து வருவதுடன், டாப் 10 பட்டியலில் இடம்பிடித்து வருகிறது. கடந்த மாதம் 42,838 ஜுபிடர் ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த மாதம் 28.9 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. டிசைன், விலை, மைலேஜ் என அனைத்திலும் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.

 09. பஜாஜ் பல்சர்

09. பஜாஜ் பல்சர்

பஜாஜ் பல்சர் 9வது இடத்தை பிடித்துள்ளது. பல்சர் பைக்குகளின் விற்பனை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், பஜாஜ் ஆட்டோ விழித்துக் கொண்டு செயல்பட வேண்டிய தருணமாக இருக்கிறது. கடந்த மாதத்தில் பல்சர் வரிசையில் 46,314 பைக்குகளை பஜாஜ் ஆட்டோ விற்பனை செய்துள்ளது. குறைவான விலையில், சிறந்த செயல்திறன் மற்றும் டிசைனிலான பல்சர் பைக்குகள் இளைஞர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற மாடலாக இருக்கிறது.

08. ஹீரோ மேஸ்ட்ரோ

08. ஹீரோ மேஸ்ட்ரோ

ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் ரீபேட்ஜ் மாடலான ஹீரோ மேஸ்ட்ரோ தொடர்ந்து விற்பனையில் நல்ல எண்ணிக்கைய பதிவு செய்து வருகிறது. கடந்த மாதம் 8வது இடத்தை பிடித்தது. மேலும், 48,002 ஹீரோ மேஸ்ட்ரோ ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. டிசைன், சிறந்த எஞ்சின் என்பதில் மட்டுமல்லாது, ஹீரோவின் சிறப்பான வாடிக்கையாளர் சேவை நெட்வொர்க்கும் பக்கபலமாக அமைகிறது.

07. டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர்

07. டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர்

டிவிஎஸ் நிறுவனத்தின் விற்பனையில் டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் மொபட் சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது. கடந்த மாதத்தில் 53,849 எக்ஸஎல் சூப்பர் மொபட்டுகளை டிவிஎஸ் விற்பனை செய்துள்ளது. விலை குறைவான சிறந்த போக்குவரத்து சாதனம். அத்துடன், எளிதாக ஓட்டுவதற்கும், பொருட்களை வைத்து எடுத்துச் செல்வதற்கும் வசதியை அளிக்கிறது.

06. ஹீரோ கிளாமர்

06. ஹீரோ கிளாமர்

ஹீரோ கிளாமர் பைக்கும் தொடர்ந்து சிறப்பான விற்பனை வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. கடந்த மாதம் 63,009 ஹீரோ கிளாமர் பைக்குகள் விற்பனையாகியுள்ளன. மேலும், இது கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தைவிட 54.1 சதவீதம் கூடுதல். சிறப்பான எஞ்சின், மைலேஜ், ஹீரோவின் சர்வீஸ் நெட்வொர்க் இதற்கு பக்கபலமாக உள்ளது.

05. ஹோண்டா ஷைன்

05. ஹோண்டா ஷைன்

ஹோண்டா ஷைன் பைக் தொடர்ந்து 5வது இடத்தை தக்க வைத்து வருகிறது. கடந்த மாதத்தில் 76,562 ஹோண்டா ஷைன் பைக்குகள் விற்பனையாகியுள்ளன. 125சிசி செக்மென்ட்டில் சிறந்த செயல்திறன் மிக்க எஞ்சின், டிசைன், மைலேஜ் மற்றும் சரியான விலை கொண்ட மாடல். ரீசேல் மதிப்பிலும் சிறப்பானது.

04. ஹீரோ பேஷன்

04. ஹீரோ பேஷன்

ஹீரோ பேஷன் பைக் 4வது இடத்தை பெற்றிருக்கிறது. கடந்த மாதத்தில் 80,261 ஹீரோ பேஷன் பைக்குகள் விற்பனையாகியுள்ளன. ஆனால், கடந்த ஆண்டு ஜனவரியைவிட விற்பனை 21.5 சதவீதம் குறைந்துவிட்டது. டிசைன், மைலேஜில் சிறப்பான மாடல்.

03. ஹீரோ டீலக்ஸ்

03. ஹீரோ டீலக்ஸ்

வழக்கம்போல் ஜனவரியிலும் மூன்றாவது இடத்தை ஹீரோ டீலக்ஸ் பிடித்தது. கடந்த மாதத்தில் 1,07,272 ஹீரோ டீலக்ஸ் பைக்குகள் விற்பனையாகியுள்ளன. இது கடந்த ஆண்டு ஜனவரியைவிட 13.6 சதவீதம் கூடுதல். குறைந்த விலையில் டிசைன், மைலேஜ், எஞ்சின் என அனைத்திலும் சிறப்பானது.

 02. ஹீரோ ஸ்பிளென்டர்

02. ஹீரோ ஸ்பிளென்டர்

ஹீரோ ஸ்பிளென்டர் தொடர்ந்து விற்பனையில் கலக்கி வருகிறது. ஆனால், கடந்த மாதம் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. கடந்த மாதத்தில் 1,99,345 ஹீரோ ஸ்பிளென்டர் பைக்குகள் விற்பனைய செய்யப்பட்டிருக்கின்றன. டிசைன், மைலேஜ், எஞ்சின், விலை என அனைத்திலும் சிறப்பான மாடல் என்பதோடு, ரீசேல் மதிப்பிலும் சிறந்து விளங்குகிறது.

 01. ஹோண்டா ஆக்டிவா

01. ஹோண்டா ஆக்டிவா

நகர்ப்புற வாசிகளின் நம்பர்-1 சாய்ஸ் என்ற பெருமைக்குரிய மாடலாக விளங்குகிறது ஹோண்டா ஆக்டிவா. கடந்த மாதம் ஸ்பிளென்டரை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தை பிடித்திருக்கிறது. கடந்த மாதத்தில் 2,10,123 ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. செயல்திறன், மைலேஜ், டிசைன், ரீசேல் மதிப்பு என அனைத்திலும் அட்டகாசமான ஸ்கூட்டர் மாடல். நகர்ப்புறத்திற்கு ஏற்ற சிறப்பான பயன்பாடு கொண்ட போக்குவரத்து சாதனமாக விளங்குகிறது.

 
English summary
Top 10 Best selling two-wheelers in January 2016.
Story first published: Saturday, February 27, 2016, 14:00 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark