கடந்த நிதி ஆண்டில் டாப் 10 இருசக்கர வாகனங்கள்: நம்பர்-1 யார் தெரியுமா?

By Saravana

இந்திய மக்கள் விரும்பும் வாகன ரகத்தில் இருசக்கர வாகனங்களுக்கு மிக முக்கிய பங்குண்டு. குறைவான விலையில் நிறைவான போக்குவரத்து வசதியை வழங்கி வரும் இருசக்கர வாகனங்களுக்கு எப்போதுமே வரவேற்பு இருந்து வருகிறது.

மார்க்கெட்டில் ஏராளமான மாடல்கள் மலிந்துவிட்டாலும், அதில் ஒரு சில மாடல்கள்தான் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ற மாடல்களாக இருக்கின்றன. அந்த வகையில், கடந்த நிதி ஆண்டில் மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று விற்பனையில் கலக்கிய இந்தியாவின் டாப் 10 டூ வீலர் மாடல்களை இப்போது காணலாம்.

10. டிவிஎஸ் ஜுபிடர்

10. டிவிஎஸ் ஜுபிடர்

ஹோண்டா ஆக்டிவாவுக்கு அடுத்து விற்பனையில் இந்தியாவின் சிறப்பான ஸ்கூட்டர் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. குறுகிய காலத்தில் வாடிக்கையாளர் மனதில் சிறப்பான இடத்தை பெற்றுவிட்டது. கடந்த நிதி ஆண்டில் 5,37,431 டிவிஎஸ் ஜுபிடர் ஸ்கூட்டர்கள் விற்பனையாகியிருக்கின்றன. அருமையான டிசைன், சிறப்பம்சங்கள் என்பதுடன், மைலேஜிலும் வாடிக்கையாளர்கள் மனதில் இடம்பிடித்துவிட்டது. 7.9 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 109.7சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் இந்த ஸ்கூட்டர் லிட்டருக்கு 62 கிமீ மைலேஜ் தருகிறது.

09. பஜாஜ் சிடி100

09. பஜாஜ் சிடி100

மார்க்கெட்டில் மிக மலிவான விலை கொண்ட பைக் மாடல்களில் ஒன்று. அதிக மைலேஜ், விலை குறைவு போன்ற காரணங்களால் விற்பனையிலும் சிறப்பான இடத்தை பெற்று வருகிறது. கடந்த நிதி ஆண்டில் 5,90,067 பஜாஜ் சிடி100 பைக்குகள் விற்பனையாகியிருக்கின்றன. இந்த பைக்கில் 9.1 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 99.27சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பைக் லிட்டருக்கு 89 கிமீ மைலேஜ் தரும் என்று அராய் சான்று கூறுகிறது. நடைமுறையிலும் சிறப்பான மைலேஜை வழங்கும் மாடல்.

08. பஜாஜ் பல்சர்

08. பஜாஜ் பல்சர்

பல்சர் வரிசையில் பல பைக் மாடல்களை பஜாஜ் ஆட்டோ விற்பனை செய்து வருகிறது. 135சிசி முதல் 200சிசி வரையிலான ரகத்தில் பல்சர் மாடல்கள் கிடைக்கிறது. இதில், பல்சர் 150 மாடல் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று விளங்குகிறது. கடந்த நிதி ஆண்டில் பல்சர் பிராண்டில் மட்டும் 6,18,371 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. செயல்திறன், டிசைன், விலை என அனைத்திலும் சிறப்பான மாடல்.

07. ஹீரோ கிளாமர்

07. ஹீரோ கிளாமர்

கடந்த நிதி ஆண்டில் 6,18,371 ஹீரோ கிளாமர் பைக்குகள் விற்பனையாகியிருக்கின்றன. ஹீரோ பிராண்டின் மீதான நம்பகத்தன்மை, மைலேஜ் ஆகியவை இந்த பைக்கின் வலுவான அம்சங்கள். இந்த பைக்கில் 7.8 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 124.8சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. லிட்டருக்கு 55 கிமீ மைலேஜ் தரும் என அராய் தெரிவிக்கிறது. கார்புரேட்டர் மற்றும் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட மாடல்களில் கிடைக்கிறது.

06. டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர்

06. டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர்

கடந்த நிதி ஆண்டில் விற்பனையின் அடிப்படையில் இந்தியாவின் முதல் 10 சிறந்த இருசக்கர வாகன மாடல்களில் டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் மொபட் 6வது இடத்தை பிடித்து அசத்தியிருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் 7,23,767 டிவிஎஸ் ஜுபிடர் எக்ஸ்எல் சூப்பர் மொபட்டுகள் விற்பனையாகியிருக்கின்றன. தற்போது 4-ஸ்ட்ரோக் மாடலிலும் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதுடன், இந்த மாடலுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனால், தொடர்ந்து டாப் - 10 பட்டியலில் எதிர்பார்க்கலாம்.

05. ஹோண்டா சிபி ஷைன்

05. ஹோண்டா சிபி ஷைன்

ஒவ்வொரு மாதமும் 5வது இடத்தை கெட்டியாக பிடித்து வந்த ஹோண்டா ஷைன் பைக் கடந்த நிதி ஆண்டிலும் 5வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த நிதி ஆண்டில் 7,98,699 ஹோண்டா ஷைன் பைக்குகள் விற்பனையாகியிருக்கின்றன. இந்த பைக்கில் இருக்கும் 124.7சிசி எஞ்சின் அதிகபட்சமாக 10.57 பிஎச்பி பவரை அளிக்க லிட்டருக்கு 65 கிமீ மைலேஜ் தரும். அதிர்வுகள் குறைவான எஞ்சின், நல்ல மைலேஜ், சிறந்த டிசைன் இந்த பைக்கை தொடர்ந்து முன்னிலைப்படுத்தி வருகிறது.

04. ஹீரோ பேஷன்

04. ஹீரோ பேஷன்

கடந்த நிதி ஆண்டில் 11,39,576 ஹீரோ பேஷன் பைக்குகள் விற்பனையாகியிருக்கின்றன. இந்த பைக்கில் இருக்கும் 99.7சிசி எஞ்சின் அதிகபட்சமாக 8.24 பிஎச்பி பவரை அளிக்க வல்லது. டிசைன், சிறப்பம்சங்கள், மைலேஜ் என நம்பகமான பைக் மாடல். மறுவிற்பனை மதிப்பிலும் சிறப்பாக இருக்கிறது.

03. ஹீரோ டீலக்ஸ்

03. ஹீரோ டீலக்ஸ்

ஹீரோ நிறுவனத்தின் விலை குறைவான மாடல்களில் சிறந்த மாடல் இதுதான். கடந்த நிதி ஆண்டில் 11,48,254 ஹீரோ டீலக்ஸ் பைக்குகள் விற்பனையாகியிருக்கின்றன. அதிக மைலேஜ், சிறப்பான டிசைன், குறைவான விலை போன்றவை இதனை முன்னிலைப்படுத்தும் அம்சங்களாக இருக்கின்றன.

02. ஹோண்டா ஆக்டிவா

02. ஹோண்டா ஆக்டிவா

ஹீரோ ஸ்பிளென்டருக்கும், ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்கும் முதலிடத்திற்கான போட்டி கடுமையாக நடந்தது. இந்த நிலையில், மிக குறைந்த வித்தியாசத்தில் ஹீரோ ஸ்பிளென்டரிடம் முதல் இடத்தை இழந்து, இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் 24,66,350 ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனையாகியிருக்கின்றன. ஸ்கூட்டர் என்றாலே, ஹோண்டா ஆக்டிவாதான் என்ற நிலை மார்க்கெட்டிலும், மக்கள் மனதிலும் உள்ளது. 2015 நிதி ஆண்டைவிட, கடந்த 2016ம் ஆண்டில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் விற்பனை 13.2 சதவீதம் கூடுதலாகியிருப்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

01. ஹீரோ ஸ்பிளென்டர்

01. ஹீரோ ஸ்பிளென்டர்

ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் கடும் நெருக்கடிக்கு மத்தியில் கடந்த நிதி ஆண்டில் விற்பனையில் நம்பர்-1 இருசக்கர வாகனம் என்ற பெருமையை ஹீரோ ஸ்பிளென்டர் பெற்றிருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் 24,86,065 ஹீரோ ஸ்பிளென்டர் பைக்குகள் விற்பனையாகியிருக்கின்றன. சரியான விலையில் ஸ்டைலான பைக் என்பதுடன், சிறந்த மைலேஜ் தரும் பைக் மாடலாகவும் இருக்கிறது. அதேநேரத்தில், கடந்த நிதி ஆண்டில் ஸ்பிளென்டர் பைக் விற்பனை 1.2 சதவீதம் குறைந்திருக்கிறது. எனவே, நடப்பு நிதி ஆண்டில் முதல் இடத்தை பிடிப்பதில் ஸ்பிளென்டருக்கு கடும் சவால்கள் காத்திருக்கின்றன.

கடந்த நிதி ஆண்டில் கலக்கிய டாப் 10 கார்கள்!

கடந்த நிதி ஆண்டில் கலக்கிய டாப் 10 கார்கள்!

More from DriveSpark

Article Published On: Friday, April 29, 2016, 10:57 [IST]
English summary
Which bike or scooter is it that claimed the hearts and wallets of the Indian rider in the financial year 2015-16? Let's find out...
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+