அக்டோபர் விற்பனையில் அசத்திய இந்தியாவின் டாப் 10 மோட்டார்சைக்கிள்கள்!

கடந்த அக்டோபர் மாத விற்பனையின்படி, முதல் 10 இடங்களை பிடித்த இந்தியாவின் முன்னணி மோட்டார்சைக்கிள்களின் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

இந்தியாவின் தனிநபர் போக்குவரத்தில் இருசக்கர வாகனங்கள் மிக முக்கிய பங்களிப்பை பெற்றிருக்கின்றன. இந்த நிலையில், சந்தையின் தேவையை கருதி பல புதிய மாடல்கள் தொடர்ந்து அறிமுகமாகி வருகின்றன.

அதில், சந்தைப் போட்டியை சமாளித்து சிறப்பான முதல் 10 இடங்களை பிடித்த மோட்டார்சைக்கிள் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

10. டிவிஎஸ் அப்பாச்சி

10. டிவிஎஸ் அப்பாச்சி

டிவிஎஸ் அப்பாச்சி பிராண்டுக்கு தொடர்ந்து சிறப்பான வரவேற்பு இருக்கிறது. கடந்த அக்டோபரில் மொத்தம் 35,230 அப்பாச்சி பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. பல்சருக்கு அடுத்து இந்திய இளைஞர்களிடம் அதிக வரவேற்பை பெற்ற பிராண்டாக இருக்கிறது டிவிஎஸ் அப்பாச்சி.

09. ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350

09. ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350

ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கிற்கான மவுசு மாதத்திற்கு மாதம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த மாதம் 37,006 கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள்கள் விற்பனையாகி இருக்கின்றன. வலிமையான தோற்றம், அலாதியான சப்தம் வாடிக்கையாளர்களை சுண்டி இழுத்து வருகிறது.

08. பஜாஜ் சிடி

08. பஜாஜ் சிடி

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் விலை குறைவான பைக் மாடல்களில் ஒன்றாக விற்பனையில் இருக்கிறது. கடந்த மாதத்தில் 42,616 பஜாஜ் சிடி100 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதிக மைலேஜ், குறைவான விலை இதற்கான வரவேற்பை உறுதி செய்து வரும் விஷயங்கள்.

07. பஜாஜ் பிளாட்டினா

07. பஜாஜ் பிளாட்டினா

பஜாஜ் நிறுவனத்தின் அடுத்த குறைவான விலை பைக் மாடல். கடந்த மாதத்தில் 50,531 பஜாஜ் பிளாட்டினா பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. பட்ஜெட் விலையில் சற்றே பிரிமியம் அம்சங்கள் கொண்ட மாடல். மைலேஜிலும் சிறப்பானது.

 06. பஜாஜ் பல்சர்

06. பஜாஜ் பல்சர்

கடந்த மாதம் 6வது இடத்தை பஜாஜ் பல்சர் பிராண்டு பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் 63,287 பல்சர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. டிசைன், செயல்திறன், விலை என அனைத்திலும் மிகச் சிறப்பானதாக இருக்கிறது.

 05. ஹீரோ கிளாமர்

05. ஹீரோ கிளாமர்

கடந்த மாதத்தில் 75,320 ஹீரோ கிளாமர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. நம்பகமான எஞ்சின், அதிக மைலேஜ் போன்றவை இந்த பைக்கிற்கான வரவேற்பை தொடர்ந்து உறுதி செய்து வருகிறது.

04. ஹோண்டா ஷைன்

04. ஹோண்டா ஷைன்

125சிசி மார்க்கெட்டில் ஹோண்டா ஷைன் சிறப்பான தேர்வாக இருந்து வருகிறது. அதனை மெய்ப்பிக்கும் விதத்தில் விற்பனையிலும் முக்கிய பங்களிப்பை ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்துக்கு கொடுத்து வருகிறது. கடந்த மாதத்தில் 82,753 ஷைன் மோட்டார்சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. சரியான விலை, அதிக மைலேஜ், செயல்திறன் மிக்க எஞ்சின், பாந்தமான தோற்றம் இந்த பைக்கிற்கு அதிக வரவேற்பை பெறுவதற்கான விஷயங்கள்.

03. ஹீரோ பேஷன்

03. ஹீரோ பேஷன்

ஹீரோ நிறுவனத்தின் விற்பனையில் மிக முக்கிய பங்களிப்பை தொடர்ந்து வழங்கி வருகிறது. கடந்த மாதத்தில் 87,489 பேஷன் பைக்குகள் விற்பனையாகி உள்ளன. தோற்றம், மென்மையான எஞ்சின், தோதுவான விலையில் கிடைக்கும் சிறப்பான மாடல்.

02. ஹீரோ டீலக்ஸ்

02. ஹீரோ டீலக்ஸ்

கடந்த மாதத்தில் ஹீரோ டீலக்ஸ் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் 1,33,986 டீலக்ஸ் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. குறைவான விலையில் சிறந்த எஞ்சின் பொருத்தப்பட்ட பைக் மாடல். அதிக மைலேஜும், டிசைனும் கூடுதல் சிறப்பு.

01. ஹீரோ ஸ்பிளென்டர்

01. ஹீரோ ஸ்பிளென்டர்

இந்தியர்களின் மிகவும் விருப்பமான பிராண்டு ஹீரோ ஸ்பிளென்டர். பல ஆண்டுகளாக தொடர்ந்து விற்பனையில் முன்னிலை வகித்து வருகிறது. கடந்த மாதத்தில் 2,54,813 ஹீரோ ஸ்பிளென்டர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Most Read Articles
English summary
Motorcycles models such as Hero Splendor, HF Deluxe, Glamour; Bajaj Platina, Royal Enfield Classic 350 and TVS Apache witnessed increase in the monthly sales.
Story first published: Wednesday, November 23, 2016, 17:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X