விற்பனையில் டாப் - 10 இருசக்கர வாகனங்கள்... ஆக்டிவாவுக்கு போதாத காலம்...!!

Written By:

ஆண்டு கடைசியில் எப்போதுமே வாகன விற்பனையில் சுணக்கம் காணப்படுவதுண்டு. அதன் தாக்கம் கடந்த மாதத்திலும் எதிரொலித்தது. கடும் சந்தைப்போட்டிக்கு மத்தியில் கடந்த மாதம் முதல் 10 இடங்களை பிடித்த இருசக்கர வாகனங்களின் விபரங்களை வழங்கியிருக்கிறோம்.

ஹீரோ ஸ்பிளென்டர், ஹோண்டா ஆக்டிவா இடையிலான போட்டி தொடர்ந்த போதிலும், இரண்டாவது மாதமாக ஆக்டிவா விற்பனையில் சரிவு காணப்பட்டது. டிசம்பரில் முதல் 10 இடங்களை பிடித்த இருசக்கர வாகனங்களின் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

10. பஜாஜ் சிடி 100

10. பஜாஜ் சிடி 100

கடந்த மாதம் 10வது இடத்தில் பஜாஜ் சிடி 100 உள்ளது. கடந்த மாதத்தில் 34,480 பஜாஜ் சிடி 100 பைக்குகள் விற்பனையாகியுள்ளன. அதிக மைலேஜ், குறைவான விலை என்பது இதன் பலம்.

09. டிவிஎஸ் ஜுபிடர்

09. டிவிஎஸ் ஜுபிடர்

கடந்த மாதம் டிவிஎஸ் ஜுபிடர் ஸ்கூட்டருக்கு 9வது இடத்திற்கு தள்ளப்பட்டது. கடந்த மாதத்தில் மொத்தம் 47,217 டிவிஎஸ் ஜுபிடர் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த 2014ம் ஆண்டு டிசம்பரைவிட இது 33 சதவீத உயர்வாகும். தோற்றம், வசதிகளில் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.ட

08. ஹீரோ கிளாமர்

08. ஹீரோ கிளாமர்

கடந்த மாதம் ஹீரோ கிளாமர் பைக்கிற்கு 8வது இடம் கிடைத்தது. கடந்த மாதத்தில் 48,748 கிளாமர் பைக்குகள் விற்பனையாகியுள்ளன. தோற்றம், எஞ்சின், ஹீரோ சர்வீஸ் நெட்வொர்க் இதற்கு வலு சேர்க்கின்றன.

07. ஹோண்டா சிபி ஷைன்

07. ஹோண்டா சிபி ஷைன்

ஹோண்டா ஷைன் பைக் 7வது இடத்தை பிடித்தது. கடந்த மாதத்தில் 51,047 ஷைன் பைக்குகள் விற்பனையாகியுள்ளன. தோற்றம், எஞ்சின், குறைந்த பராமரிப்பு போன்றவை வாடிக்கையாளர்களிடம் நன் மதிப்பை பெற்றுத் தந்துள்ளன.

06. ஹீரோ மேஸ்ட்ரோ

06. ஹீரோ மேஸ்ட்ரோ

ஸ்கூட்டர் மார்க்கெட்டில் டிவிஎஸ் ஜுபிடரிடம் இழந்த இரண்டாவது இடத்தை மீண்டும் பிடித்திருக்கிறது. கடந்த மாதத்தில் 52,084 ஹீரோ மேஸ்ட்ரோ ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த 2014ம் ஆண்டு டிசம்பரைவிட, கடந்த மாதத்தில் விற்பனை 21 சதவீதம் அதிகரித்துள்ளது. ஹோண்டாவின் ரீ-பேட்ஜ் மாடல் என்பதால், நம்பகத்தன்மையுடன், ஹீரோவின் வலுவான சர்வீஸ் கட்டமைப்பும் வலு சேர்க்கிறது.

 05. ஹீரோ பேஷன்

05. ஹீரோ பேஷன்

ஹீரோ பேஷன் பைக் 5-வது இடத்தை பிடித்தது. கடந்த மாதத்தில் 55,765 பேஷன் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் விற்பனையை விட தற்போது 34 சதவீதம் குறைந்துவிட்டது. தோற்றம், எஞ்சின், விலை போன்றவற்றில் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.

04. டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர்

04. டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர்

பட்டியலில் 4வது இடத்தை பிடித்து அசத்தியிருக்கிறது டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர். கடந்த மாதம் பல பைக் மாடல்களின் விற்பனை குறைந்ததையடுத்து, இதற்கு 4வது இடம் கிடைத்தது. கடந்த மாதத்தில் 56,521 எக்ஸ்எல் சூப்பர் மொபட்டுகள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. குறைந்த விலையில் கிடைக்கும் எளிமையான போக்குவரத்து சாதனம். அத்துடன், பொருட்களை வைத்து எடுத்துச் செல்வதற்கு வசதியான மொபட் என்பதும் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.

03. ஹீரோ டீலக்ஸ்

03. ஹீரோ டீலக்ஸ்

ஹீரோ டீலக்ஸ் பைக் மூன்றாவது இடத்தை பிடித்தது. கடந்த மாதத்தில் 93,451 ஹீரோ டீலக்ஸ் பைக்குகள் விற்பனையாகின. விலை குறைவான, சிறப்பான தோற்றம், நம்பகமான எஞ்சின் கொண்ட பைக் மாடல்.

 02. ஹோண்டா ஆக்டிவா

02. ஹோண்டா ஆக்டிவா

கடந்த நவம்பரைத் தொடர்ந்து டிசம்பரிலும் ஸ்பிளென்டரிடம் நம்பர்-1 இடத்தை கோட்டை விட்டது ஆக்டிவா. கடந்த மாதத்தில் 1,74,154 ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. நகர்ப்புறத்துக்கு ஏற்ற சிறப்பான போக்குவரத்து சாதனம் என்பதுடன், தரம், செயல்திறன், டிசைனிலும் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.

 01. ஹீரோ ஸ்பிளென்டர்

01. ஹீரோ ஸ்பிளென்டர்

கடந்த மாதம் நம்பர்-1 இடத்தை தக்க வைத்தது ஹீரோ ஸ்பிளென்டர். கடந்த மாதத்தில் 1,84,856 ஹீரோ ஸ்பிளென்டர் பைக்குகள் விற்பனையாகின. கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் விற்பனையை ஒப்பிடும்போது, தற்போது 14 சதவீதம் குறைவு. இருந்தாலும், தனது நம்பகத்தன்மை, தோற்றம், சிறந்த எஞ்சின், எரிபொருள் சிக்கனம் என அனைத்து விதத்திலும் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.

 

English summary
Top 10 selling two wheelers in Dec 2015.
Story first published: Tuesday, January 19, 2016, 12:37 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark