விற்பனையில் டாப் - 10 டூ வீலர்கள்... ஸ்பிளென்டர், ஆக்டிவா குடுமிப்புடி தொடர்கிறது!

By Saravana

பிப்ரவரி மாதத்திலும் சில இருசக்கர வாகன மாடல்களின் ஆதிக்கம் தொடர்ந்து நீடிக்கிறது. அதேசமயத்தில், விற்பனை எண்ணிக்கையில் சிறிய மாற்றங்கள் இல்லாமல் இல்லை.

கடந்த மாத விற்பனையின்படி, முதலிடத்தில் ஸ்பிளென்டரா, ஆக்டிவாவா என்ற கேள்வியுடன் நீங்கள் நுழைந்திருந்தார், ஸ்லைடரில் ஏறி பயணிக்கவும்.

10. பஜாஜ் சிடி 100

10. பஜாஜ் சிடி 100

கடந்த மாதத்தில் 10வது இடத்தில் பஜாஜ் சிடி 100 பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் 42,924 சிடி 100 பைக்குகள் விற்பனையாகியிருக்கின்றன. விலை குறைவான, அதிக மைலேஜ் தரும் பைக் என்பது இதன் பலம்.

எஞ்சின்: 99.2சிசி

பவர்: 8 பிஎச்பி

மைலேஜ்: 89 கிமீ/லி

விலை: ரூ.41,000

09. பஜாஜ் பல்சர்

09. பஜாஜ் பல்சர்

பல்சர் வரிசை கொஞ்சம் கொஞ்சமாக மதிப்பை இழந்து வருவது விற்பனை எண்ணிக்கை மூலமாக தெரிய வருகிறது. எனவே, பஜாஜ் விழித்துக் கொள்ளும் நேரமாக இதனை கூற வேண்டும். கடந்த மாதத்தில் பல்சர் வரிசையில் 47,208 பைக்குகளை பஜாஜ் ஆட்டோ விற்பனை செய்திருக்கிறது. இந்த வரிசையில் பல்சர் 135 மாடல்தான் குறைவான விலை கொண்டதாக விற்பனை செய்யப்படுகிறது.

எஞ்சின்: 135சிசி

பவர்: 13 பிஎச்பி

மைலேஜ்: 64 கிமீ/லி

விலை: ரூ.71,500

 08. டிவிஎஸ் ஜுபிடர்

08. டிவிஎஸ் ஜுபிடர்

ஸ்கூட்டர் மார்க்கெட்டில் மிகச்சிறப்பான விற்பனையை பதிவு செய்து வருகிறது டிவிஎஸ் ஜுபிடர். கடந்த மாதத்தில் 47,712 ஜுபிடர் ஸ்கூட்டர்கள் விற்பனையாகியிருக்கின்றன. டிசைன, மைலேஜ், விலை என அனைத்திலும் நிறைவை தருகிறது.

எஞ்சின்: 109சிசி

பவர்: 8 பிஎச்பி

மைலேஜ்: 62 கிமீ/லி

விலை: ரூ.57,500

07. ஹோண்டா சிபி ஷைன்

07. ஹோண்டா சிபி ஷைன்

ஏழாவது இடத்தை சிபி ஷைன் பெற்றுள்ளது. கடந்த மாதத்தில் 58,433 ஷைன் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. டிசைன், அதிக மைலேஜ், சிறப்பான செயல்திறன், சரியான விலை கொண்ட 125சிசி மாடல். இந்த பைக் காம்பி பிரேக்கிங் சிஸ்டம் கொண்ட மாடலிலும் கிடைக்கிறது.

எஞ்சின்: 125சிசி

பவர்: 10 பிஎச்பி

மைலேஜ்: 65 கிமீ/லி

விலை: ரூ.65,000

06. ஹீரோ கிளாமர்

06. ஹீரோ கிளாமர்

ஆறாவது இடத்தை ஹீரோ கிளாமர் பிடித்திருக்கிறது. கடந்த மாதத்தில் 60,883 கிளாமர் பைக்குகளை ஹீரோ விற்பனை செய்துள்ளது. கடந்த மாதம் விற்பனையில் ஷைன் பைக்கை விஞ்சி 125சிசி செக்மென்ட்டில் முன்னிலை வகிக்கிறது. அதிக மைலேஜ், ஹீரோவின் சர்வீஸ் நெட்வொர்க் இதன் பலமாக இருக்கிறது.

எஞ்சின்: 125சிசி

பவர்: 8 பிஎச்பி

மைலேஜ்: 55 கிமீ/லி

விலை: ரூ.63,500

05. டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர்

05. டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர்

நம்ம ஊரு வண்டியாக புகழப்பெறும் டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்ர் தற்போது 2 ஸ்ட்ரோக் மற்றும் 4 ஸ்ட்ரோக் எஞ்சின் கொண்ட மாடல்களில் கிடைக்கிறது. பொருட்களை எடுத்துச் செல்வதற்கும், எளிமையான போக்குவரத்து சாதனமாகவும் விளங்குகிறது. இதன் குறைவான விலையும் வாடிக்கையாளர்களை கவர்கிறது.

எஞ்சின்: 70சிசி

பவர்: 3.5 பிஎச்பி

மைலேஜ்: 66 கிமீ/லி

விலை: ரூ.27,500

 04. ஹீரோ பேஷன்

04. ஹீரோ பேஷன்

நான்காம் இடத்தில் ஹீரோ பேஷன் பைக் உள்ளது. கடந்த மாதத்தில் 81,656 பேஷன் பைக்குகள் விற்பனையாகியிருக்கின்றன. பேஷன் பைக் 100சிசி மற்றும் 110சிசி மாடல்களில் கிடைக்கிறது. டிசைன், விலை, மைலேஜில் கவரும் ஹீரோ பைக்.

எஞ்சின்: 97சிசி

பவர்: 7 பிஎச்பி

மைலேஜ்: 84 கிமீ/லி

விலை: ரூ.59,000

03. ஹீரோ டீலக்ஸ்

03. ஹீரோ டீலக்ஸ்

ஹீரோ நிறுவனத்தின் நம்பகமான, விலை குறைவான பைக் மாடல்களில் ஒன்று. ஸ்டைலிலும் குறைவில்லை. கடந்த மாதம் 1,06,572 டீலக்ஸ் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. அலாய் வீல்கள், எலக்ட்ரிக் ஸ்டார்ட் வசதியுடன் கிடைக்கிறது.

எஞ்சின்: 97சிசி

பவர்: 7.7 பிஎச்பி

மைலேஜ்: 83 கிமீ/லி

விலை: ரூ.50,000

 02. ஹீரோ ஸ்பிளென்டர்

02. ஹீரோ ஸ்பிளென்டர்

கார் மார்க்கெட்டில் மாருதி நிறுவனத்துக்கு ஆல்ட்டோ போன்று, டூ வீலர் மார்க்கெட்டில் ஹீரோவுக்கு ஸ்பிளென்டர். விலை, மைலேஜ், டிசைன் என அனைத்திலும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும், ஏகோபித்த ஆதரவையும் பெற்ற மாடல். கடந்த மாதத்தில் 1,89,314 ஸ்பிளென்டர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன.

எஞ்சின்: 97சிசி

பவர்: 7.4 பிஎச்பி

மைலேஜ்: 81 கிமீ/லி

விலை: ரூ.54,000

01. ஹோண்டா ஆக்டிவா

01. ஹோண்டா ஆக்டிவா

ஹீரோ ஸ்பிளென்டருக்கு கடும் நெருக்கடியை கொடுத்து வருகிறது. கடந்த மாதத்திலும், தொடர்ந்து நம்பர்-1 பட்டத்தை தக்க வைத்திருக்கிறது. கடந்த மாதத்தில் 2,10,028 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. நகர்ப்புறத்திற்கு ஏற்ற சிறந்த போக்குவரத்து சாதனம், சிறந்த செயல்திறன், அருமையான எஞ்சின் போன்றவை இதற்கு வலு சேர்க்கின்றன.

எஞ்சின்: 109சிசி

பவர்: 8 பிஎச்பி

மைலேஜ்: 66 கிமீ/லி

விலை: ரூ.58,500

More from DriveSpark

Article Published On: Wednesday, March 23, 2016, 17:14 [IST]
English summary
Top 10 Selling Two-Wheelers In February 2016. Read now in Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+