விற்பனையில் டாப் - 10 டூ வீலர்கள்... செல்லாது அறிவிப்பால் தடுமாறிய முன்னணி மாடல்கள்!

Written By:

கடந்த மாதம் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு இருசக்கர வாகன விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை ஏறுமுகத்தில் மட்டும் இருந்து வந்த இருசக்கர வாகன விற்பனை கடந்த மாதம் இறங்குமுகத்தை சந்தித்தது.

கடந்த மாதம் 5.85 சதவீதம் வரை விற்பனை குறைந்தது. செல்லாது அறிவிப்பு ஏற்படுத்திய தாக்கத்தால் பல முனனணி மாடல்களின் விற்பனை குறைந்தது. இருப்பினும், அதிலும் முண்டியடித்து முதல் பத்து இடங்களை பிடித்த ஜாம்பவான் இருசக்கர வாகன மாடல்களை இந்த செய்தியில் காணலாம்.

10. ஹீரோ பேஷன்

10. ஹீரோ பேஷன்

இதுவரை நான்காவது இடத்தை தக்க வைத்து வந்த ஹீரோ பேஷன் பைக்கின் விற்பனை தடாலாடியாக குறைந்தது. கடந்த மாதம் 53 சதவீதம் அளவுக்கு ஹீரோ பேஷன் விற்பனை சரிந்தது. கடந்த மாதத்தில் 40,272 பேஷன் பைக்குகள் விற்பனையாகின. இது ஹீரோ நிறுவனத்துக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.

 09. பஜாஜ் பிளாட்டினா

09. பஜாஜ் பிளாட்டினா

பஜாஜ் பிளாட்டினாா பைக்கின் விற்பனை ஏறுமுகத்தை சந்தித்தது. கடந்த மாதத்தில் 42,395 பிளாட்டினா பைக்குகள் விற்பனையாகின. அதிக மைலேஜ் தரும் மிக குறைவான விலை பட்ஜெட் பைக் என்பது இதற்கு வலு சேர்க்கும் விஷயம்.

08. பஜாஜ் பல்சர்

08. பஜாஜ் பல்சர்

பஜாஜ் பல்சர் விற்பனையும் சரிந்தது. கடந்த மாததத்தில் 42,975 பல்சர் பைக்குகள் விற்பனையாகியுள்ளன. உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது அறிவிப்பே பல்சர் விற்பனை குறைந்ததற்கு ஒரு முக்கிய காரணமாக பார்க்கலாம்.

07. ஹோண்டா சிபி ஷைன்

07. ஹோண்டா சிபி ஷைன்

125சிசி மார்க்கெட்டில் சிறந்த தேர்வாக வலம் வரும் ஹோண்டா சிபி ஷைன் பைக்கினஅ விற்பனையும் சரிவை சந்தித்தது. கடந்த மாதம் 45,236 ஷைன் பைக்குகள் விற்பனையாகி உள்ளன. விற்பனை கிட்டத்தட்ட 26.60 சதவீதம் சரிந்துள்ளது.

06. ஹீரோ கிளாமர்

06. ஹீரோ கிளாமர்

ஹீரோ கிளாமர் பைக்கின் விற்பனையில் பெரிய மாற்றங்கள் இல்லை. கடந்த மாதத்தில் 53,301 கிளாமர் பைக்குகள் விற்பனையாகி உள்ளன. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தைவிட இது 16 சதவீதம் கூடுதல். ஸ்மூத்தான எஞ்சின், தோற்றம் இதன் பக்கபலமாக உள்ளது.

05. டிவிஎஸ் ஜுபிடர்

05. டிவிஎஸ் ஜுபிடர்

டிவிஎஸ் ஜுபிடர் ஸ்கூட்டரின் விற்பனை தொடர்ந்து சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. ஸ்கூட்டர் மார்க்கெட்டில் இரண்டாவது இடத்தை பிடித்து அசத்தி வருகிறது. கடந்த மாதத்தில் 54,838 ஜுபிடர் ஸ்கூட்டர்கள் விற்பனையாகி உள்ளன. விற்பனை 6 சதவீதம் கூடுதலாக பதிவாகி இருப்பது டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு உற்சாகம் தரும் விஷயம். டிசைன், மைலேஜ், விலை என அனைத்திலும் சிறப்பான தேர்வாக அமைந்துள்ளது.

04. டிவிஎஸ் எக்ஸ்எல்100

04. டிவிஎஸ் எக்ஸ்எல்100

கடந்த மாதம் டிவிஎஸ் எக்ஸ்எல்100 மொபட் 4வது இடத்தை பிடித்து அசத்தி உள்ளது. குறிப்பாக, 4 ஸ்ட்ரோக் எஞ்சின் மாடல் அறிமுகம் செய்யப்பட்டதற்கு பின்பு எக்ஸ்எல் சூப்பர் மொபட்டின் விற்பனை சிறப்பான விற்பனையை பதிவு செய்து வருகிறது. கடந்த மாதத்தில் 76,381 எக்ஸ்எல்100 மொபட்டுகள் விற்பனையாகி உள்ளன. கடந்த ஆண்டு நவம்பரைவிட இது 32 சதவீதம் கூடுதல். இந்தியாவின் மிக குறைவான விலை கொண்ட இருசக்கர வாகனம் என்பதும், ஓட்டுவதற்கு எளிமையாக இருப்பதும் பலரை கவர்ந்து வருகிறது.

 03. ஹீரோ டீலக்ஸ்

03. ஹீரோ டீலக்ஸ்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் குறைவான விலை கொண்ட பைக் மாடலாக இருப்பதுடன், சிறந்த டிசைன் மற்றும் நம்பகமான எஞ்சின் இதன் பக்கபலமாக இருக்கிறது. கடந்த மாதத்தில் 1,10,515 ஹீரோ டீலக்ஸ் பைக்குகள் விற்பனையாகி உள்ளன. விற்பனை 17 சதவீதம் அதிகரித்து உள்ளது.

02. ஹோண்டா ஆக்டிவா

02. ஹோண்டா ஆக்டிவா

செல்லாது அறிவிப்பால் விற்பனையில் சிறிது தொய்வு ஏற்பட்ட மாடல்களில் ஒன்று ஹோண்டா ஆக்டிவா. கடந்த மாதத்தில் 1,80,811 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மேலும், தொடர்ந்து முதலிடத்தை இழந்து இரண்டாவது இடத்தில் உள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர்ப்புறங்களுக்கு ஏற்ற மிக அருமையான போக்குவரத்து சாதனம் என்பதே இதன் பலம். வரும் மாதங்களில் மீண்டும் முதலிடத்தை பிடிக்க போராடும் என நம்பலாம்.

 01. ஹீரோ ஸ்பிளென்டர்

01. ஹீரோ ஸ்பிளென்டர்

கடந்த மாதம் ஹீரோ ஸ்பிளென்டர் நம்பர்-1 இடத்தை பிடித்தது. கடந்த மாதத்தில் 2,01,100 ஹீரோ ஸ்பிளென்டர் பைக்குகள் விற்பனையாகி உள்ளன. செல்லாது அறிவிப்பு எதிரொலியால் பைக்கின் விற்பனை 13 சதவீதம் குறைந்தது. சரியான விலையில் இந்திய வாடிக்கையாளர்களின் மிகவும் நம்பகமான பைக் மாடல் என்பதே இதன் மிகப்பெரிய பலம்.

English summary
Top 10 selling Two wheelers in Nov 2016.
Story first published: Saturday, December 24, 2016, 10:08 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos