டிரையம்ஃப் மோட்டார்சைக்கிள்ஸின் ஸ்ட்ரீட் கப் இந்தியாவில் 2017-ல் அறிமுகமாகும்

Written By:

டிரையம்ஃப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம், தங்களின் டிரையம்ஃப் ஸ்ட்ரீட் கப் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் 2017-ஆம் ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யும் என தகவல்கள் வெளியாகிறது. இந்திய வாகன சந்தைகள் வேகமாக வளர்ந்து வருவதனால் சர்வதேச ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தங்களின் மாடல்களை ஆர்வத்துடன் அறிமுகம் செய்து வருகின்றனர்.

விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள டிரையம்ஃப் ஸ்ட்ரீட் கப் மோட்டார்சைக்கிள் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

காட்சிப்படுத்தல்;

காட்சிப்படுத்தல்;

இங்கிலாந்தை சேர்ந்த டிரையம்ஃப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம், 2016 இன்டர்மோட் மோட்டார் ஷோவில் ஏராளமான மாடல்களை காட்சிப்படுத்தினர். ஸ்ட்ரீட் கப் மோட்டார்சைக்கிள் காட்சிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கபட்ட நிலையில், இதனை கான முடியவில்லை. சமீபத்தில் தான், இந்நிறுவனம் போனிவில் டி100 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தனர்.

சர்வதேச சந்தைகளில் ஸ்ட்ரீட் கப்...

சர்வதேச சந்தைகளில் ஸ்ட்ரீட் கப்...

டிரையம்ஃப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஸ்ட்ரீட் கப் மாடல், ஏற்கனவே சர்வதேச சந்தைகளில் விற்பனையில் உள்ளது.

அறிமுகம்;

அறிமுகம்;

டிரையம்ஃப் ஸ்ட்ரீட் கப் மோட்டார்சைக்கிள், இந்தியாவில் 2017-ல் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் கிடைக்கும் மாடல்கள்;

இந்தியாவில் கிடைக்கும் மாடல்கள்;

இங்கிலாந்தை சேர்ந்த டிரையம்ஃப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம், இதுவரை போனிவில் டி120, ஸ்ட்ரீட் ட்வின், போனிவில் டி100, த்ரக்ஸ்டன் ஆகிய மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்து விற்பனை செய்து வருகின்றனர்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

டிரையம்ஃப் ஸ்ட்ரீட் கப் மோட்டார்சைக்கிளுக்கு 900 சிசி பேரலல் ட்வின், லிக்விட் கூல்ட் இஞ்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த இஞ்ஜின், 54 பிஹெச்பியையும், அதிகப்படியாக 80 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

டிரையம்ஃப் ஸ்ட்ரீட் கப் மோட்டார்சைக்கிளின் இஞ்ஜின், 5-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

மைலேஜ்;

மைலேஜ்;

டிரையம்ஃப் ஸ்ட்ரீட் கப் மோட்டார்சைக்கிள், ஒரு லிட்டருக்கு 26.90 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என டிரையம்ஃப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தெரிவிக்கிறது.

விலை;

விலை;

தற்போதைய நிலையில், டிரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் 7.22 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் மும்பை) விலையில் விற்பனை செய்யப்படுகிறது. போனிவில் டி100 மாடல், 7.78 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் மும்பை) விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த டிரையம்ஃப் ஸ்ட்ரீட் கப் மோட்டார்சைக்கிளின் விலை, இங்கு குறிப்பிட்ட 2 மாடல்களின் விலைகளை காட்டிலும் கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

English summary
Triumph Motorcycles could launch their Street Cup in India by early 2017. Street Cup from Triumph Motorcycles has just gone on sale in international markets. Triumph Motorcycles claim that the Street Cup will deliver 26.90 km/l. Triumph Street Cup has 900cc parallel twin, liquid-cooled engine. This engine produces 54bhp, along with 80Nm of peak torque. To know more, check here...
Story first published: Wednesday, October 19, 2016, 7:09 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos