டிரையம்ஃப் ஸ்ட்ரீட் ஃபைட்டர் டிரிப்பிள் விரைவில் மேம்படுத்தி வழங்கபடும்
டிரையம்ஃப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம், சமீபத்தில் தான் தங்களின் மாடர்ன் கிளாசிக் ரேஞ்ச் வாகனங்களை உலகம் முழுவதும் மேம்படுத்தி வழங்கியது.
தற்போது, இங்கிலாந்தை மையமாக கொண்டு இயங்கும் டிரையம்ஃப் மோட்டார்சைக்கிள்ஸ் வாகன உற்பத்தி நிறுவனம் தங்களின் நுழைவு நிலை நேக்கட் ஸ்ட்ரீட் ஃபைட்டர் வாகனத்தையும் மேம்படுத்தி வழங்க திட்டமிட்டுள்ளது. ஆனால், மேம்படுத்தி வழங்கபட உள்ள மோட்டார்சைக்கிள் 2017-ஆம் மத்திக்கு பிறகு தான் வெளியாகாது என அறிவிக்கபட்டுள்ளது.
2017 டிரையம்ஃப் ஸ்ட்ரீட் டிரிப்பிள் மோட்டார்சைக்கிள், 750+ சிசி, இன்-லைன் 3-சிலிண்டர் இஞ்ஜின் கொண்டிருக்கும். கூடுதல் செயல்திறன் வழங்கும் வகையில், 675 சிசி, இன்-லைன் 3-சிலிண்டர் இஞ்ஜின் கைவிடப்பட உள்ளது. வெவ்வேறு செய்லதிறன் அளவுகள் கொண்ட வகையில் 4 வேரியண்ட்களின் இந்த மோட்டார்சைக்கிள் வெளியாக உள்ளது. இதனால், வாடிக்கையாளர்களுக்கும் தேர்வு செய்யும் வகையில் ஏராளமான தேர்வுகள் இருக்கும்.
டிரையம்ஃப் ஸ்ட்ரீட் டிரிப்பிள் மோட்டார்சைக்கிளின் பேஸ் வேரியண்ட் 110 பிஹெச்பியை வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது. மேலும், மிட் மாடல் போல் உள்ள ஆர் வேரியண்ட் 115 பிஹெச்பியை வெளிபடுத்தும் திறன் கொண்டிருக்கும். 2017 டிரையம்ஃப் ஸ்ட்ரீட் டிரிப்பிள் மோட்டார்சைக்கிள்கள் ஆர்எஸ் வேரியண்ட் மற்றும் ஆர்டி வேரியண்ட்களிலும் கிடைக்கும். இதன் டாப் எண்ட் வேரியண்ட் 120 பிஹெச்பியை வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

2017 டிரையம்ஃப் ஸ்ட்ரீட் டிரிப்பிள் மோட்டார்சைக்கிளின் 4 வேரியண்ட்களும், ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் வசதியை ஸ்டாண்டர்ட் அம்சமாக கொண்டிருக்கும். இதன் ஆர்எஸ் வேரியண்ட் மற்றும் ஆர்டி வேரியண்ட்கள் மட்டும் டிபிஎம்எஸ் எனப்படும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS (Tyre Pressure Monitoring System)), ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், டிஎஃப்டி ஸ்கிரீன், ஸ்விட்சபிள் டிராக்ஷன் கண்ட்ரோல் (Switchable traction control) ஆகிய வசதிகள் கொண்டிருக்கும்.
டிசைன் பொருத்த வரை, டிரையம்ஃப் ஸ்ட்ரீட் டிரிப்பிள் மோட்டார்சைக்கிள், இதன் முந்தைய மாடலை காட்டிலும் சற்று பெரியதாகவும், தட்டையாகவும் உள்ளது. டிரையம்ஃப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம், இந்த ஸ்ட்ரீட் டிரிப்பிள் மோட்டார்சைக்கிளை இந்தியாவிலும் அறிமுகம் செய்ய உள்ளனர்.
ஸ்ட்ரீட் டிரிப்பிள் மோட்டார்சைக்கிள் உலக அளவில், 2017-மத்தியிலும், இந்தியாவில் 2017-இறுதி அல்லது 2018-ஆம் ஆண்டு துவக்கத்தில் இருந்து கிடைக்கும் என தகவல்கள் வெளியாகிறது.
Spy Pic Credit ; www.motorcyclenews.com


Click it and Unblock the Notifications








