டிவிஎஸ் அகுலா 310 பைக்கிற்கு, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 300 என பெயர் மாற்றம்
டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கும் டிவிஎஸ் அகுலா 310 ஸ்போர்ட்ஸ் பைக்கிற்கு, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 300 என பெயர் சூட்டபட்டுள்ளது.
டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 300 ஸ்போர்ட்ஸ் பைக் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 300...
டிவிஎஸ் அகுலா 310 ஸ்போர்ட்ஸ் பைக், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபட்ட போது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னையை மையமாக கொண்டு இயங்கும் டிவிஎஸ் நிறுவனம், உற்பத்தி நிலையில் இருக்கும் டிவிஎஸ் அகுலா 310 ஸ்போர்ட்ஸ் பைக்கிற்கு, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 300 என பெயர் சூட்டியுள்ளது.
டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 300 ஸ்போர்ட்ஸ் பைக், பிஎம்டபுள்யூ 310ஆர் அடிப்படையாக கொண்டு வடிவமைக்கபட்டுள்ளது.

இஞ்ஜின்;
டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 300 ஸ்போர்ட்ஸ் பைக், திறன்மிக்க 313 சிசி, லிக்விட் கூல்ட், சிங்கிள் சிலிண்டர் இஞ்ஜின் கொண்டுள்ளது.
இந்த இஞ்ஜின், 34 பிஹெச்பியையும், 28 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;
டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 300 ஸ்போர்ட்ஸ் பைக்கின் இஞ்ஜின், 6-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

கார்பன் ஃபைபர்;
டிவிஎஸ் அகுலா 310 ஸ்போர்ட்ஸ் பைக் பெயர் கொண்டு 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தபடும் போது, இதில் கார்பன் ஃபைபர் உபயோகபடுத்தபட்டிருந்தது.
ஆனால், தயாரிப்பு நிலையில் உள்ள டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 300 ஸ்போர்ட்ஸ் பைக்கில், கார்பன் ஃபைபர் உபயோகபடுத்தபடாது. செலவுகளை குறைக்கும் நோக்கில் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளது.

சஸ்பென்ஷன்;
டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 300 ஸ்போர்ட்ஸ் பைக், ட்வின் ஹெட்லேம்ப்கள் கொண்டுள்ளது.
டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 300 ஸ்போர்ட்ஸ் பைக்கின் முன் பக்கத்தில் தலைகீழாக பொருத்தபட்டுள்ள ஃபோர்க்குகளும், பின் பக்கத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷனும் வழங்கபட்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்;
டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 300 பைக்கில், அப்பாச்சி வகை பைக்குகளின் பல்வேறு பைக்குகளின் கூறுகள் பகிர்ந்து கொள்ளபடுகிறது.
டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 300 ஸ்போர்ட்ஸ் பைக், டிவிஎஸ் மோட்டார்ஸ் வழங்கும் மோட்டார்சைக்கிள்களின் உயர்ந்த நிலையில் வகைபடுத்தபட்டுள்ளது.

தோற்றம்;
வெளிப்புற தோற்றத்தின் படி, மேற்புரமாக வளைந்த டெயில் பகுதியினாலும், நன்கு செதுக்கபட்ட ஃப்யூவல் டேங்கினாலும், டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 300 ஸ்போர்ட்ஸ் பைக் கட்டு மஸ்தாக காட்சி அளிக்கிறது.
கேடிஎம் ஆர்சி 390 பைக்கில் உள்ள மிட்ஷிப் எக்ஸ்ஹாஸ்ட் போல் அல்லாமல், டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 300 ஸ்போர்ட்ஸ் பைக்கின் எக்ஸ்ஹாஸ்ட் வெளிபுறமாக நோக்கியவாறு உள்ளது.

பிரேக்;
டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 300 ஸ்போர்ட்ஸ் பைக்கின், முன் சக்கரம் மற்றும் பின் சக்கரம் ஆகிய இரண்டிற்கும் ஏபிஎஸ் உடன் கூடிய டிஸ்க் பிரேக்குகள் பொருத்தபட்டுள்ளது.

டயர்கள்;
டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 300 ஸ்போர்ட்ஸ் பைக், உயர் திறன் கொண்ட பிரெல்லி டயர்கள் பொருத்தபட்டுள்ளது.

போட்டி;
டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 300 ஸ்போர்ட்ஸ் பைக், கேடிஎம் ஆர்சி 390 பைக் மற்றும் அறிமுகம் செய்யபட உள்ள ஹீரோ ஹெச்எக்ஸ் 250 ஆகிய பைக்குகளுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

அறிமுகம்;
டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 300 ஸ்போர்ட்ஸ் பைக், இந்த ஆண்டின் வரும் மாதங்களில் அறிமுகம் செய்யபடும் அறிமுகம் செய்யபடும் என எதிர்பார்க்கபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;
டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக், 8 வேரியண்ட்டுகளில் அறிமுகம்
டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 சிசி பைக், ஜனவரி 20-ஆம் தேதி அறிமுகம்?
டிவிஎஸ் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்


Click it and Unblock the Notifications








