டிவிஎஸ் அகுலா 310 பைக், இந்தியாவில் விரைவில் அறிமுகம்?
டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்கும், டிவிஎஸ் அகுலா 310 பைக், இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என செய்திகள் வெளியாகிறது.
டிவிஎஸ் அகுலா 310 பைக் தொடர்பான கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

டிவிஎஸ் அகுலா 310 பைக்...
டிவிஎஸ் அகுலா 310 பைக், சென்னையை மையமாக கொண்டு இயங்கும் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்கும் இரு சக்கர வாகனம் ஆகும்.
முழுவதுமாக ஃபேரிங் செய்யப்பட்ட இந்த டிவிஎஸ் அகுலா 310 பைக், முன்னதாக 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் கான்செப்ட் வடிவில் காட்சிபடுத்தப்பட்டது. இந்த பைக் அப்போதிலிருந்தே பெரிய ஹிட்டாகிவிட்டது.

டீசர்;
டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம், தாங்கள் தயாரித்து வரும் இந்த டிவிஎஸ் அகுலா 310 பைக்கின் படங்களை ட்விட்டரில் வெளியிட்டு டீஸ் செய்து வருகின்றனர்.

அமைப்பு;
டிவிஎஸ் அகுலா 310 பைக், அலுமினியம் ட்ரெல்லிஸ் சப்ஃபிரேம் அடிப்படையாக கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது.

இஞ்ஜின்;
ரேஸ் டியூனிங் செய்யப்பட்ட டிவிஎஸ் அகுலா 310 பைக், 4-வால்வ்கள், சிங்கிள் சிலிண்டர் உடைய 313 சிசி இஞ்ஜின் கொண்டுள்ளது.
பிஎம்டபுள்யூ மோட்டோராட்-டிடம் இருந்து ஏற்கப்பட்ட இந்த இஞ்ஜின் தான், பிஎம்டபுள்யூ ஜி310ஆர் பைக்கிலும் உபயொகிக்கப்படுகிறது.
இந்த இஞ்ஜின், 34 பிஹெச்பியையும், 28 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

கியர்பாக்ஸ்;
டிவிஎஸ் அகுலா 310 பைக்கின் இஞ்ஜின், 6-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள்;
டிவிஎஸ் அகுலா 310 பைக், தெர்மல் எஃப்ஃபீஷியன்சிக்கான கில்-வென்ட்க்ள் மற்றும் ரேம் ஏர் இண்டக்ஷன் கொண்டுள்ளது.
இவை அனைத்தும், டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் உருவாக்கும் முழுமையான சிறப்பு அமசங்களாக உள்ளன.

இதர அம்சங்கள்;
டிவிஎஸ் அகுலா 310 பைக், தலை கீழாக பொருத்தபட்டுள்ள ஃப்ரண்ட் ஃபோர்க்குகள், ரியர் மோனோ ஷாக், டியூவல் சேனல் ஏபிஎஸ் மற்றும் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் மீட்டர் கொண்டுள்ளன.

பெயர் காரணம்;
டிவிஎஸ் அகுலா 310 பைக் என்ற பெயரில், அகுலா என்ற ரஷ்ய மொழி வார்த்தைக்கு 'ஷார்க்' என்ற ஆங்கில பொருளும், 'சுறா' என்ற தமிழ் பொருளும் கிடைக்கிறது.
டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் 33 வருட ரேசிங் சரித்திரத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது.

உற்பத்தி;
டிவிஎஸ் அகுலா 310 பைக், டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமாக தமிழ்நாட்டின் ஓசூரில் உள்ள உற்பத்தில் ஆலையில் தயாரிகபட உள்ளது.
இதனால், டிவிஎஸ் அகுலா 310 பைக், எளிமையான விலையில் விற்கப்படலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

போட்டி;
டிவிஎஸ் அகுலா 310 பைக், கேடிஎம் ஆர்சி390, கவாஸாகி நிஞ்ஜா 300 மற்றும் யமஹா ஆர்3 ஆகிய பைக்குகளுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

அறிமுகம்;
டிவிஎஸ் அகுலா 310 பைக், இந்தியாவில் இந்த ஆண்டின் இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.

விலை;
டிவிஎஸ் அகுலா 310 பைக், சுமார் 2 லட்சம் ரூபாய் முதல் 2.5 லட்சம் ரூபாய்க்கும் இடையிலான (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்கப்படலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;
டிவிஎஸ் அகுலா 310 பைக்கிற்கு, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 300 என பெயர் மாற்றம்
டிவிஎஸ் மோட்டார்ஸ் தொடர்புடைய செய்திகள்
டிவிஎஸ் அப்பாச்சி தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்


Click it and Unblock the Notifications








