டிவிஎஸ் ஸ்கூட்டர்கள் மீது 2,500 ரூபாய் மதிப்பிலான தள்ளுபடி - முழு விவரம்

By Ravichandran

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம், பண்டிகை காலங்களை ஒட்டி தங்களின் ஸ்கூட்டர்கள் மீது தள்ளுபடிகளையும், ஆதாயங்களையும் வழங்குகின்றனர். சென்னையை சேர்ந்த டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம், முன்னோடி 2 வீலர் நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது.

தொடர் பண்டிகை காலங்கள் நிலவுவதால், பல்வேறு 2 வீலர் மற்றும் கார் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்கு விதவிதமான சலுகைகளை வழங்கி வருகின்றனர். அந்த வரிசையில், டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனமும் சில சலுகைகளை அளிக்கிறது.

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம், தங்களின் ஸ்கூட்டர்கள் மீது 2,500 ரூபாய் மதிப்பிலான தள்ளுபடியினை தருகின்றனர்.

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கும் தள்ளுபடிகள் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

தள்ளுபடிகள்;

தள்ளுபடிகள்;

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் அளிக்கும் இந்த தள்ளுபடிகள் மற்றும் ஆதாயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஷோரூம்களில் மட்டுமே கிடைக்கும்.

இந்த தள்ளுபடிகள், ஸ்கூட்டர்கள் மீது மட்டும் தான் வழங்கப்படும், மோட்டார்சைக்கிள்கள் மீது வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கபட்டுள்ளது.

அதிகப்படியாக, 2,500 ரூபாய் வரை இந்த தள்ளுபடிகள் கிடைக்கும்.

ஆக்சஸரீஸ்;

ஆக்சஸரீஸ்;

இந்தியாவின் அனைத்து டிவிஎஸ் டீலர்ஷிப்களிலும், இந்த டிவிஎஸ் ஸ்கூட்டர்களுக்கான ஆக்சஸரீஸ்கள் கிடைக்கும்.

ஹெல்மெட், ஸ்டீல் கார்ட், ஹேண்டில் கிரிப்கள், சீட் கவர், லைசன்ஸ் பிளேட் மற்றும் பார்க்கிங் கவர் உள்ளிட்ட ஏராளமான ஆக்சஸரீஸ்கள், டிவிஎஸ் ஷோரூம்களில் கிடைக்கிறது.

சலுகைகள் கிடைக்கும் ஸ்கூட்டர்கள்;

சலுகைகள் கிடைக்கும் ஸ்கூட்டர்கள்;

தற்போதைய நிலையில், டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கும் வீகோ, ஜுபிடர், டிவிஎஸ் ஸ்கூட்டி பெப்+, ஸ்கூட்டி ஸெஸ்ட் 110 ஆகிய 4 மாடல்கள் இந்த சலுகைகலுடன் கிடைக்கும்.

சலுகைகள் கிடைக்கும் காலம்;

சலுகைகள் கிடைக்கும் காலம்;

டிவிஎஸ் மோட்டார்ஸ் ஷோரூம்கள் இந்த தள்ளுபடிகளையும், ஆதாயங்களையும் குறுகிய கால சலுகையாகவே அளிக்கின்றனர்.

இதனால், இந்த ஸ்கூட்டர்களை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள், டிவிஎஸ் ஷோரூம்களுக்கு முந்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மோட்டார்சைக்கிள்கள்;

மோட்டார்சைக்கிள்கள்;

மோட்டார்சைக்கிள்கள் தொடர்பான தள்ளுபடிகளை, டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் பின்னர் அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம்.

எனினும், டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி மோட்டார்சைக்கிள் மீது எந்த விதமான தள்ளுபடிகளும் கிடைக்க வாயப்புகள் இல்லை.

எதிர்பார்ப்பு;

எதிர்பார்ப்பு;

தற்போது வழங்கப்படும் பண்டிகை கால தள்ளுபடிகள் மூலம், டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவன 2 வீலர்களின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.

இதர தொடர்புடைய செய்திகள் - 1;

இதர தொடர்புடைய செய்திகள் - 1;

ஆகஸ்ட் மாதத்தில் கார் நிறுவனங்களின் அசத்தலான தள்ளுபடிகள் - முழு விவரம்

சுதந்திர தினத்தை ஒட்டி 41,000 ரூபாய் வரையிலான சலுகைகள் வழங்கும் ரெனோ

ஃபோர்டு ஃபிகோ, ஃபிகோ ஆஸ்பயர் விலை அதிரடியாக குறைப்பு - முழு விவரம்

இதர தொடர்புடைய செய்திகள் - 2;

இதர தொடர்புடைய செய்திகள் - 2;

70-வது சுதந்திர தின விழா - ஆகஸ்ட்டில் ஹூண்டாய் நிறுவனத்தின் அட்டகாசமான சலுகைகள்

70% தள்ளுபடியில் பைக் சர்வீஸ் மற்றும் கார் பராமரிப்பு ஆக்சஸரீஸ்

ஆகஸ்ட் மாதத்தில் அசத்தலான சலுகைகள் வழங்கும் செவர்லே

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Most Read Articles

English summary
TVS Motors offers wide range of discounts and benefits for festive season. These Offers can be availed only at select TVS Motors dealerships. Dealerships will provide these offers and discounts only on scooters and not on motorcycles. Maximum benefits worth Rs. 2,500 can be availed on Wego, Jupiter, Scooty Pep+, and Scooty Zest 110. To know more, check here...
Story first published: Saturday, August 20, 2016, 13:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X