டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம், ஏப்ரலில் 16% வளர்ச்சி பதிவு
டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம், ஏப்ரல் மாதத்தில் 16% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார்சைக்கிள்களின் விற்பனை, இந்த ஒட்டுமொத்த விற்பனை சாதனை எட்ட உதவியுள்ளது. ஸ்கூட்டர்களின் விற்பனை 28.3% என்ற அளவிலும், மோட்டார்சைக்கிள்களின் விற்பனை 20.7% என்ற அளவிலும் உயர்ந்துள்ளது.
ஏப்ரல் 2015-ன் போது, டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் மொத்த விற்பனை 1,95,937 மாடல்களாக இருந்தது. ஏப்ரல் 2016-ன் போது, சென்னையயை மையமாக கொண்டு இயங்கும் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் மிகுந்த டிமாண்ட் எதிர் கொண்டது. இதனால், இதன் விற்பனை 2,27,096 என்ற அளவை எட்டியது. மொத்தத்தில், கடுமையான சூழ்நிலைகளிலும் டிவிஎஸ் மோட்டார்ஸ், 16% என்ற சிறப்பான வளர்ச்சியை பெற்றது.

மறுமுனையில், ஏற்றுமதி நடவடிக்கைகள் 13% குறைந்துள்ளது. ஏப்ரல் 2015-ன் போது, டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் மொத்த ஏற்றுமதி 32,426 யூனிட்களாக இருந்தது. அதே டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஏற்றுமதி ஏப்ரல் 2015-ன் போது, 28,354 யூனிட்களாக குறைந்தது. ஒட்டுமொத்தத்தில் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம், விற்பனை நடவடிக்கைகள் நல்ல வகையில் நடைபெற்றது.


Click it and Unblock the Notifications








