டிவிஎஸ் விக்டர் பைக் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம்... புதிய வடிவில்...!!

By Ravichandran

மிகவும் புகழ்வாய்ந்த பைக் மாடல்களில் ஒன்றான டிவிஎஸ் விக்டர், தற்போது புதிய வடிவில், நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிதாக டிவிஎஸ் விக்டர் பைக் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

டிவிஎஸ் விக்டர் பைக் பற்றி...

டிவிஎஸ் விக்டர் பைக் பற்றி...

முதன் முறையாக டிவிஎஸ் விக்டர் பைக் 2001-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யபட்ட போது, இது பயணியர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் பிரிவில், அதிகம் விற்பனையாகும் பைக்-காக விளங்கியது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

இந்த டிவிஎஸ் விக்டர் பைக், 110சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஆயில் மற்றும் ஏர்-கூல்ட், இகோத்ரஸ்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இதன் இஞ்ஜின், 9.4 பிஹெச்பி-யையும், 9.4 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த இஞ்ஜின் 4-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

மைலேஜ்;

மைலேஜ்;

புதிய டிவிஎஸ் விக்டர் பைக், 8 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஃப்யூவல் டேங்க் கொண்டுள்ளது.

இந்த டிவிஎஸ் விக்டர் பைக், ஒரு லிட்டருக்கு 76 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.

எடை;

எடை;

புதிய டிவிஎஸ் விக்டர் பைக், 112 கிலோ எடை கொண்டுள்ளது.

சிறப்பம்சங்கள்;

சிறப்பம்சங்கள்;

டிவிஎஸ் விக்டர் பைக், டெலெஸ்கோப்பிக் ஃப்ரண்ட் ஃபோர்க்-கள், ரியர்-க்கான ட்யூவல் ஷாக் அப்ஸார்பர்கள், அல்லாய் வீல்கள், டிரம் பிரேக்-கள் (தேர்வு முறையிலான) உள்ளிட அம்சங்களை கொண்டுள்ளது.

மேலும், இந்த செக்மெண்ட்-டில் முதன் முறையாக, ஸ்டாண்டர்ட் ஹஸார்ட் (அபாயங்களுக்கான அறிகுறிகள் வழங்கும்) லேம்ப்களுடன் வெளியாகிறது.

இலக்கு வாடிக்கையாளர்கள்;

இலக்கு வாடிக்கையாளர்கள்;

புதிய டிவிஎஸ் விக்டர் பைக், 25 முதல் 35 வயதுடைய குடும்ப மனிதர்களை இலக்கு வாடிக்கையாளர்களாக கொண்டு அறிமுகம் செய்யபட்டுள்ளது.

விலை விவரங்கள்;

விலை விவரங்கள்;

புதிய டிவிஎஸ் விக்டர் பைக்கின் விலை விவரங்களை தெரிந்து கொள்வோம்.

டிவிஎஸ் விக்டர் பைக் - ட்ரம் பிரேக்கள் கொண்டது - 49,990 ரூபாய்

டிவிஎஸ் விக்டர் பைக் - டிஸ்க் பிரேக்கள் கொண்டது - 51,490 ரூபாய்

அனைத்து விலை விவரங்களும், எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) விலைகள் என்பது குறிப்பிடதக்கது.

இறுதி கருத்து;

இறுதி கருத்து;

சிறந்த தோற்றங்கள் மற்றும் நல்ல மைலேஜ் வழங்கும் பைக்கை தேடும் வாடிக்கையாளர்களுக்கு, புதிய டிவிஎஸ் விக்டர் பைக் சிறந்த தேர்வாக விளங்குகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

டிவிஎஸ் விக்டர் பைக்-கை மறுபிரவேசம் செய்ய, டிவிஎஸ் நிறுவனம் திட்டம்

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக் விற்பனைக்கு அறிமுகம்

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கின் படங்கள்... முதல்முறையாக டிரைவ்ஸ்பார்க் தளத்தில்...

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

More from DriveSpark

Article Published On: Wednesday, January 20, 2016, 15:19 [IST]
English summary
One of the most famous Motorcycles from TVS Motors, TVS Victor is launched. When it was launched in 2001, it was one of the best selling motorcycles in the commuter segment. The new TVS Victor is targeted towards family men, in the age group of 25 to 35 years. This is a good bike, with good looks and delivers best mileage.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+