கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கிய டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர்!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் சிறப்புகளை அறிந்து அனுபவிக்க கொச்சியில் எமது குழுவினர் டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டரில் பயணித்த அனுபவக் கட்டுரையின் தொடர்ச்சியை இங்கே காணலாம்.

By Saravana Rajan

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டருடன் கொச்சியில் எமது குழுவினர் கொண்டாடிய தருணங்களின் முதல் பாகத்தை நேற்று வழங்கியிருந்தோம்.

அதன் தொடர்ச்சியாக இரண்டாவது நாளில் கிறிஸ்துமஸ் பண்டிகையை எமது குழுவினர் கொண்டாடிய விதமும், சென்ற இடங்களை பற்றி சிறப்புத் தகவல்களையும் இந்த செய்தியில் காணலாம்.

 கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கிய டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர்!

கிறிஸ்துமஸ் பண்டிகையை டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டரில் பயணிப்பதற்கு திட்டமிட்ட இடங்களில் மிக முக்கியமானது எமது குழுவினர் கருதிய இடம் செயிண்ட் ஜார்ஜ் சிரோ மலபார் கத்தோலிக் போரன் சர்ச் என்ற பழமையான தேவாலயம். கிமு 594ம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்தியாவின் மிக பழமையான தேவாலயங்களில் ஒன்றாக விளங்குகிறது.

 கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கிய டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர்!

அந்த தேவாலயத்தை நோக்கி கிறிஸ்துமஸ் தினத்தன்று இரண்டாம் நாள் பயணத்தை டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டரில் எமது குழுவினர் துவங்கினர். மிக மென்மையான ஓட்டுதல் சுகத்தை தந்த டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டரில் பயணம் இனிதே இருந்தது. வழியில் நடந்த ஓவியக் கண்காட்சி அரங்கையும் எமது குழுவினர் கண்டு ரசித்த பின்னர் செயிண்ட் ஜார்ஜ் தேவாலயத்தை அடைந்தனர்.

 கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கிய டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர்!

ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்கு கடல் வழியை கண்டுபிடித்த போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த வாஸ்கோடகாமா தனது மூன்றாவது இந்திய பயணத்தின்போது உடல்நலம் குன்றி மரணமடைந்தார். அவரது உடல் இந்த தேவாலய பகுதியில்தான் அடக்கம் செய்யப்பட்டது. பின்னர், அந்த உடல் போர்ச்சுக்கல் நாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்ட லிஸ்பன் நகரில் அடக்கம் செய்யப்பட்டது. அந்தளவு வரலாற்றுடன் நெருங்கிய தொடர்பு உடைய இந்த தேவாலயமானது இந்தியாவில் கிறிஸ்தவ பாரம்பரியத்தை நிலைநாட்டும் சின்னமாகவே கருதப்படுகிறது.

 கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கிய டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர்!

அடுத்து, கேரளாவில் பிரபலமான கடல் உணவுதான் எமது குழுவினரின் அடுத்த டார்க்கெட். அத்துடன், அங்கு புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி நடந்து வரும் கொச்சி திருவிழாவையும் காண்பதற்கான அரிய வாய்ப்பை டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர் ஏற்படுத்தி கொடுத்தது. இந்த தருணத்தில் வெள்ளை நிற உடைகளில் முதியவர்களும், குழந்தைகளும் உற்சாகத்துடன் பல்வேறு விளையாட்டுகளில் கலந்து கொண்டதை காண முடிந்தது.

 கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கிய டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர்!

கொச்சி திருவிழாவின் ஹைலைட்டான விஷயம், புத்தாண்டு தினத்தன்று மிகப்பெரிய ஊர்வலம் நடக்கிறது. அலங்கரிக்கப்பட்ட யானை முன்னே செல்ல மேளதாளங்களுடன் மக்கள் ஊர்வலம் உற்சாகமாக பின்தொடர்கிறது.

 கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கிய டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர்!

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களால் களைகட்டி இருந்த கொச்சி நகரை வலம் வருவதற்கு டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர் பேருதவி புரிந்தது. நெருக்கடியான இடங்களில் எளிதாகவும், விரைவாகவும் செல்வதற்கு டிவிஎஸ் வீகோ சிறப்பாக இருந்தது.

கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கிய டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர்!

அத்துடன் சிங்க் பிரேக் சிஸ்டமும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்தது. எமது குழுவினரின் பயணம் உற்சாகம் குறையாமல் பார்த்துக் கொண்டது டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர்.

 கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கிய டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர்!

திட்டமிட்டபடி பயணத்தை சிறக்க வைத்த டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டருக்கு சற்று ஓய்வும், எமது குழுவினருக்கு சற்று தெம்பும் தேவைப்பட்ட நிலையில், கடலோரம் அமைந்திருந்த சீகல் ரெஸ்ட்டாரண்டுக்கு எமது குழுவினர் விசிட் அடித்தனர்.

 கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கிய டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர்!

அரபிக் கடற்கரையில் அமைந்திருக்கும் இந்த கடற்கரை ரெஸ்ட்டாரண்டின் நுழைவு பகுதியே எம் குழுவினரை கவர்ந்து இழுத்தது. காரணம், அங்கு நிறுத்தப்பட்டிருந்த பழைய ஸ்கூட்டரும், கார் பானட்டில் செய்யப்பட்டிருந்த பெஞ்சும் எமது குழுவினரை உற்சாகமடைய வைத்தது. ஒருகாலத்தில் மேனுவலாக கியர் மாற்றும் வசதி, கால் மூலமாக இயக்கும் பிரேக் வசதி என சிக்கலாக இருந்த ஸ்கூட்டர் இப்போது அதிக பாதுகாப்பு வசதிகளுடன் சிரமமில்லாமல் ஓட்டுவதற்கான ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் கால மாற்றத்துடன் உருமாறிப் போயிருப்பதை நினைவூட்டுவதாகவே அந்த தருணம் அமைந்தது.

 கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கிய டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர்!

இக்கால வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக கவர்ச்சிகரமான டிசைன், வண்ணங்கள், முழுவதுமான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், , இருக்கைக்கு கீழே பொருட்கள் வைப்பதற்கான இடவசதி, எலக்ட்ரிக் ஸ்டார்ட், மொபைல் சார்ஜர், சொகுசான பயணத்தை வழங்கும் டெலஸ்கோப்பிக் சஸ்பென்ஷன் என அசத்துகிறது டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர்.

 கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கிய டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர்!

சான்டா கிளாஸ் இப்போது பார்த்திருந்தால் டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டரை தனது ஆஸ்தான வாகனமாக பயன்படுத்தி இருப்பார் என்பது திண்ணம். குறிப்பாக, நடைமுறையில் பயன்படுத்துவதற்கான எளிமையான, சிறப்பான போக்குவரத்து சாதனமாக டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர் இருப்பதை நேரடி அனுபவத்தின் மூலமாக உணர முடிந்தது.

 கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கிய டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர்!

இறுதியாக பல நூறு குடும்பங்கள் குழுமியிருந்த தேவாலயத்தில் நடந்த திருப்பலி பூஜையில் டிரைவ்ஸ்பார்க் குழுவினரும் கலந்து கொண்டு, அத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிறைவுடன் கொச்சி நகருக்கு விடை கொடுத்தனர்.

 கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கிய டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர்!

அடுத்து என்ன? என்ற கேள்வி எழுவது இயல்புதான். ஆம், அடுத்து டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டருடன் பெங்களூரில் புத்தாண்டு கொண்டாட காத்திருக்கிறது டிரைவ்ஸ்பார்க் டீம். அந்த கொண்டாட்ட பதிவுகளை விரைவில் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் படிக்கலாம்.

டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர்களுடன் கொச்சியில் டிரைவ்ஸ்பார்க் குழுவினரின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்- வீடியோ!

More from DriveSpark

Article Published On: Thursday, December 29, 2016, 15:26 [IST]
English summary
Exploring the charms and delights of Cochin riding a TVS Wego on Christmas part two. Read more.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+