கேடிஎம் அவதாரத்தில் டிவிஎஸ் 50... நான் மெர்சலாயிட்டேன், அப்ப நீங்க?

By Saravana

வசதி, வாய்ப்புகள் இடம் கொடுக்காவிட்டாலும், தனது கனவு கார் அல்லது பைக்கின் பிரதிபலிப்புகளை தாங்கள் வைத்திருக்கும் வாகனங்களில் செய்து அழகு பார்ப்பது வழக்கம்.

அந்த வகையில், டிவிஎஸ் 50 மொபட்டை கேடிஎம் ட்யூக் 200 பைக் போன்று ஸ்டிக்கர்களை ஒட்டி அலங்காரம் செய்து அழகு பார்க்கிறார் இந்த கேடிஎம் பிரியர். மிக அட்டகாசமாக மாற்றப்பட்டிருக்கும் அந்த மொபட்டை தற்போது ஸ்லைடரில் கண்டு ரசிக்கலாம்.

திருச்சிக்காரர்...

திருச்சிக்காரர்...

மிக நேர்த்தியாக மாற்றப்பட்டிருக்கும் இந்த பைக்கை திருச்சி பகுதியை சேர்ந்தவர்தான் அட்டகாசமாக மாற்றியிருக்கிறார். அவர் தனது மொபட்டை மாற்றியிருக்கும் அழகை தொடர்ந்து காணலாம்.

கேடிஎம் பிரியர்

கேடிஎம் பிரியர்

இந்த மொபட்டிற்கு சொந்தக்காரர் கேடிஎம் ட்யூக் 200 பைக் பிரியர் என்பதை பார்த்தவுடனே புலனாகிறது. தனது கனவு பைக்கான கேடிஎம் டியூக் 200 பைக்கை வாங்க முடியாவிட்டாலும், தனது மொபட்டில் இவ்வாறு அசத்தலாக மாற்றியிருக்கிறார்.

ஸ்டிக்கர்

ஸ்டிக்கர்

கேடிஎம் பிராண்டு என்றாலே ஆரஞ்ச், கருப்பு மற்றும் வெள்ளை கலவைதான் நினைவுக்கு வரும். அந்த விதத்தில், பெட்ரோல் டேங்கில் கேடிஎம் டியூக் 200 ஸ்டிக்கர் பிரதானமாக காட்சி அளிக்கிறது. மட்கார்டு, ஃபோர்க்குகள், ஃபுட்போர்டு என எங்கு பார்த்தாலும் கேடிஎம் பிராண்டு தயாரிப்புகளை நினைவூட்டும் பிரத்யேக வண்ணக் கலவையில் அசத்துகிறது இந்த மொபட்.

புதுப்பொலிவு

புதுப்பொலிவு

பழைய பைக்கை ஸ்டிக்கர் ஒட்டியதோடு மட்டுமின்றி, பல ஆக்சஸெரீகளுடன் புதுப்பொலிவு கொடுத்துள்ளார். ஃபுட்ரெஸ்ட், கைப்பிடிகளுக்கு புதிய உறை, புதிய இருக்கை, கிராப் ரெயிலுக்கு லெதர் உறை என அனைத்தும் மாற்றப்பட்டிருக்கிறது.

ரேஸுக்கு தயார்

ரேஸுக்கு தயார்

கேடிஎம் ஸ்டிக்கர் தவிர்த்து Ready To Race என்று பந்தயத்திற்கு தயார் என்ற துள்ளலான வாசகமும் இடம்பெற்றிருக்கிறது.

உரிமையாளர் விபரம்

உரிமையாளர் விபரம்

ஃபேஸ்புக்கிலிருந்து இந்த படங்கள் கிடைத்தாலும், இந்த பைக்கின் உரிமையாளர் பற்றிய விபரங்கள் எமக்கு கிடைக்கவில்லை என்பது துரதிருஷ்டவசமானது. அவரை பற்றிய தகவல்களை தந்தால் நிச்சயம் பகிர்ந்து கொள்ள டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் தயாராக இருக்கிறது.

ரசனை

ரசனை

மிகுந்த ரசனையோடு இந்த மொபட்டை மாற்றியிருக்கும் உரிமையாளருக்கு எமது வாழ்த்துகள். விரைவில் அவரது கனவு பைக்கான கேடிஎம் ட்யூக் 200 வாங்க வேண்டும் என்பதும் அவரது கனவு மட்டுமல்ல. எமது அவாவும் கூட.

உங்களது கருத்து

உங்களது கருத்து

இந்த அட்டகாசமான மொபட் பற்றிய உங்களது கருத்துக்களையும் கமென்ட் பாக்ஸில் பகிர்ந்து கொள்ளலாம்.

Via- Bike Crazies

More from DriveSpark

Article Published On: Saturday, March 5, 2016, 11:00 [IST]
English summary
TVS XL moped in KTM Avatar.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+