யுஎம் மோட்டார்சைக்கிள்களின் புக்கிங் மீண்டும் துவங்கியது

By Ravichandran

இந்தியாவில் யுஎம் மோட்டார்சைக்கிள்களின் புக்கிங் மீண்டும் துவங்கபட்டுள்ளது.

அமெரிக்காவை மையமாக கொண்டு, குரூஸர் பைக்குகளை உற்பத்தி யுஎம் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம், தங்களின் யுஎம் மோட்டார்சைக்கிள்களின் புக்கிங்கை மீண்டும் துவக்கியுள்ளது. இதன் டெலிவரி ஆகஸ்ட் 2016-ல் தான் துவங்க உள்ளது. புக்கிங் மீண்டும் துவங்கி இருந்தாலும், இவற்றின் டெலிவரிகள் இன்னும் துவங்கவில்லை.

um-motorcycles-bookings-re-opened-in-india

யுஎம் மோட்டார்சைக்கிள் ரேஞ்ச்சில் கீழ், 2 மோட்டார்சைக்கிள்கள் உள்ளன. ரெனிகேட் கமாண்டோ மோட்டார்சைக்கிள், 1.59 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையிலும், ரெனிகேட் கமாண்டோ ஸ்போர்ட் எஸ் மோட்டார்சைக்கிள், 1.59 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையிலும் விற்கபடுகிறது. இந்த 2 மோட்டார்சைக்கிள்களும் 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யபட்டது.

யுஎம் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம், புதிதாக ரெனிகேட் கிளாசிக் என்ற மோட்டார்சைக்கிளையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது.

um-motorcycles-bookings-re-opened-india-again

யுஎம் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம், இந்தியா முழுவதும் ஷோரூம்களை முயற்சித்து வருகிறது. இதற்காக, யுஎம் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம், லோஹியா ஆட்டோ நிறுவனத்துடன் கை கோற்த்துள்ளது. யுஎம் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம், லோஹியா ஆட்டோ உற்பத்தி ஆலையில் தங்களின் மோட்டார்சைக்கிள்களை தயாரிக்கிறது. இதற்காக, யுஎம் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம், 250 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.

இந்தியாவில் கிடைக்கும், யுஎம் மோட்டார்சைக்கிள்களின் ரெனிகேட் ரேஞ்ச் வாகனங்கள், 279 சிசி, சிங்கிள் சிலிண்டர், வாட்டர் கூல்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது. இதன் இஞ்ஜின் 25 பிஹெச்பியையும், உச்சபட்சமாக 21.8 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது. இவற்றின் இஞ்ஜின், 6-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.

Most Read Articles
English summary
American Cruiser Motorcycle manufacturer UM Motorcycles has re-opened bookings for their Renegade range of motorcycles in India. Deliveries would begin in August 2016. UM Motorcycles is planning to bring another model named the Renegade Classic, in this range to India. To know more about UM Motorcycles Bookings and future plans, check here...
Story first published: Wednesday, May 18, 2016, 13:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X