யுஎம் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின், முதல் இந்திய ஷோரூம் டெல்லியில் திறப்பு
யுஎம் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம், இந்தியாவில் தங்கள் முதல் ஷோரூமை தலைநகர் டெல்லியில் திறந்துள்ளனர்.
அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் யுஎம் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் இந்திய பிரவேசம் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

வாடிக்கையாளர்கள் தங்களின் மனதிற்கு பிடித்த யுஎம் மோட்டார்சைக்கிள்ஸ் இரு சக்கர வாகனங்களை கண்டு மகிழலாம். இனி வாடிக்கையாளர்கள், யுஎம் மோட்டார்சைக்கிள்களை நேரடியாக புக்கிங் செய்து கொள்ளலாம். முன்னதாக, இந்த புக்கிங் வசதி யுஎம் மோட்டார்சைக்கிள்ஸ் இணையதளத்தில் கூட செய்து கொள்ளள முடியாமல் இருந்தது.
யுஎம் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் ரெனிகட் கமான்டோ 1.59 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் (டெல்லி)) விலையிலும், ரெனிகட் ஸ்போர்ட் எஸ் 1.49 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் (டெல்லி)) விலையிலும் விற்கப்படுகிறது. இந்த மோட்டார்சைக்கிள்கள், இந்த ஷோரூமில் டிஸ்பிளே செய்யபட்டுள்ளது.
யுஎம் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம், ஏற்கனவே 1,000 புக்கிங் குவித்துள்ளது. இதில், முதல் 500 இரு சக்கர வாகனங்களின் டெலிவரி, இந்த ஆகஸ்ட் மாதம் முதல் துவங்கும்.
யுஎம் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் அடுத்த ஷோரூம், தானேவில் விரைவில் திறக்கப்பட உள்ளது. இதையடுத்து, இந்தியா முழுவதும், யுஎம் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம், 25 ஷோரூம்களை அடுத்தடுத்து திறக்க உள்ளது.
யுஎம் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் டெல்லி ஷோரூம், யுஎம் கன்னாட் பிளேஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஷோரூம் வாரத்தின் 7 நாட்களும், காலை 10:30 மணி முதல் மாலை 7:30 மணி வரை திறந்திருக்கும்.
யுஎம் கன்னாட் பிளேஸ் ஷோரூம் முகவரி;
யுஎம் கன்னாட் பிளேஸ்,
ஜி-7 கன்னாட் பிளேஸ்,
சென்ட்ரல் டெல்லி.
UM Connaught Place,
G-7 Connaught Place,
Central Delhi.


Click it and Unblock the Notifications














