பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் டாப் 10 ஸ்கூட்டர் மாடல்கள்!

By Saravana

எளிதான கையாளுமை, பொருட்களை பாதுகாப்பாக வைத்து செல்வதற்கான இடவசதி, மொபைல்சார்ஜர், இருபாலரும் ஓட்டுவதற்கு எளிது என பல சிறப்பம்சங்களை கொண்ட ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர்களுக்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனால், பைக் மார்க்கெட்டின் விற்பனை வளர்ச்சியை விட ஸ்கூட்டர் மார்க்கெட்டின் விற்பனை வளர்ச்சி விகிதம் வெகுவாக அதிகரித்து காணப்படுகிறது. வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் விதத்தில், பல புதிய ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர் மாடல்களும் தொடர்ந்து களமிறக்கப்பட்டு வருகின்றன. அந்த விதத்தில், இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்படும் டாப் - 10 ஸ்கூட்டர் மாடல்களின் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

01. ஹோண்டா பிசிஎக்ஸ் 150

01. ஹோண்டா பிசிஎக்ஸ் 150

இந்திய ஸ்கூட்டர் மார்க்கெட்டில் கோலோய்ச்சி வரும் ஹோண்டா நிறுவனம், புதிய ஹோண்டா பிசிஎக்ஸ் 150 ஸ்கூட்டர் மாடலை இந்த ஆண்டு அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிக வித்தியாசமாகவும், கம்பீரமான டிசைன் கொண்ட இந்த ஸ்கூட்டரில் சிங்கிள் சிலிண்டர் உடைய 153சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் மற்றும் 220மிமீ விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக் சிஸ்டம் கொடுக்கப்பட்டிருக்கும். மிகச்சிறப்பான நிலைத்தன்மை மற்றும் சொகுசு சவாரியை தரும். இதே எஞ்சின் கொண்ட ஆக்டிவா 150 மாடல் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

 02. ஹீரோ ஸிர்

02. ஹீரோ ஸிர்

ஹோண்டாவிடமிருந்து தனது முதலிடத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு, ஹீரோ மோட்டோகார்ப் பல வியூகங்களை வகுத்து, புதிய மாடல்களை களமிறக்கி வருகிறது. அந்த வகையில், 150சிசி ஸ்கூட்டர் மார்க்கெட்டில் நுழைவதற்காக ஸிர் 150 என்ற புதிய ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய உள்ளது. இது இரு வகையிலான மாடலில் வரும். இந்த ஸ்கூட்டரில் சிங்கிள் சிலிண்டர் கொண்ட 157சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். அதிகபட்சமாக 13.8 பிஎச்பி பவரையும், 12.7 என்எம் டார்க்கையும் வழங்கும்.

03. மஹிந்திரா கஸ்ட்டோ 125

03. மஹிந்திரா கஸ்ட்டோ 125

மஹிந்திரா கஸ்ட்டோ ஸ்கூட்டரின் அதிக சக்திவாய்ந்த மாடல் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கஸ்ட்டோ ஸ்கூட்டர் 109.6சிசி எஞ்சினுடன் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், புதிய கஸ்ட்டோ மாடலில் 125சிசி எஞ்சின் கொண்டதாக வருகிறது. தோற்றத்தில் அதிக வேறுபாடுகள் இருக்காது.

04. ஹோண்டா லீட் 125

04. ஹோண்டா லீட் 125

ஹோண்டா பிசிஎக்ஸ் 150 ஸ்கூட்டரைத் தொடர்ந்து ஹோண்டா லீட் 125 மாடலும் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரில் இருக்கும் அதே எஞ்சினுடன் புதிய டிசைனில் வெளியிடப்பட உள்ளது. இந்த ஸ்கூட்டரில் இருக்கும் 125சிசி எஞ்சின் அதிகபட்சமாக 11.33 பிஎச்பி பவரை அளிக்க வல்லதாக இருக்கும். சிறப்பான எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் வகையில், ஸ்டார்ட்/ஸ்டாப் சிஸ்டம் கொடுக்கப்பட்டிருக்கும். இதில், ஃப்யூவல் இன்ஜெக்ஷன் தொழில்நுட்பமும் இடம்பெற்றிருக்கும்.

 05. யமஹா நோஸா

05. யமஹா நோஸா

யமஹா ஃபேஸினோ ஸ்கூட்டரின் விற்பனை யமஹாவுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. இதனால், பைக் மார்க்கெட்டிற்கு இணையாக ஸ்கூட்டர் மார்க்கெட்டிலும் யமஹா கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில், யமஹா ஃபேஸினோ டிசைனில் சிறிது மாறுதல்கள் செய்யப்பட்ட ஸ்கூட்டர் மாடலாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் இருக்கும் 113சிசி எஞ்சின் அதிகபட்சமாக 7.24 பிஎச்பி பவரையும், 7.6 என்எம் டார்க்கையும் வழங்கும்.

 06. பீஜோ சேட்லிஸ் 125

06. பீஜோ சேட்லிஸ் 125

கடந்த ஆண்டு பீஜோ இருசக்கர வாகன பிராண்டின் பெரும்பான்மை பங்குகளை மஹிந்திரா கைவசப்படுத்தியது. இந்தநிலையில், பீஜோ சேட்லிஸ் 125 ஸ்கூட்டரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு திட்டமிட்டு இருக்கிறது. மேக்ஸி ஸ்கூட்டர் மாடலாக வர இருக்கும் இந்த ஸ்கூட்டரில் 14.75 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 125சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. 14 இன்ச் வீல்கள், எல்சிடி திரை, 37 மிமீ டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள், ஹாலஜன் ஆப்டிக்கல் ஹெட்லைட்டுகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்றவற்றுடன் பிரிமியம் ஸ்கூட்டர் மாடலாக வருகிறது.

 07. பீஜோ டிஜாங்கோ

07. பீஜோ டிஜாங்கோ

பீஜோ நிறுவனத்திடமிருந்து எதிர்பார்க்கப்படும் இரண்டாவது ஸ்கூட்டர் மாடல் டிஜாங்கோ. இது வெஸ்பா பிராண்டு போன்றே, பல விதமான கூடுதல் கஸ்டமைஸ் ஆப்ஷன்களை கொண்டதாக இருக்கும். டிஜாங்கோ 50சிசி, 125சிசி மற்றும் 150சிசி மாடல்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதில், 125சிசி மாடல் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 125சிசி எஞ்சின் 10 பிஎச்பி பவரை அளிக்க வல்லதாக இருக்கும்.

 08. பீஜோ ஸ்பீடுஃபைட் 3

08. பீஜோ ஸ்பீடுஃபைட் 3

முந்தைய மாடலான பீஜோ டிஜாங்கோ ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே எஞ்சின்தான். ஆனால், டிசைனில் மாறுதல்கள் செய்யப்பட்ட மாடல். இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் சிஸ்டம் கொண்ட இந்த ஸ்கூட்டர் ஹோண்டா டியோ போன்றே டிசைனில் இளைஞர்களை வசீகரிக்கும் என நம்பலாம்.

09. யாஜியோ லிபர்டி 125

09. யாஜியோ லிபர்டி 125

மிகவும் வெற்றிகரமான ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்று பியாஜியோ லிபர்டி 125 மாடல். இந்த ஸ்கூட்டரில் 10.2 பிஎச்பி பவரையும், 10.4 என்எம் டார்க்கையும் வழங்கும் எஞ்சின் இருக்கிறது. லிபர்டி 125 ஸ்கூட்டரின் டிசைன் பிரத்யேகமான ஸ்கூட்டரை விரும்புவோர்க்கு மிகச் சிறப்பான சாய்ஸாக இருக்கும். இந்த ஸ்கூட்டரில் முன்புறத்தில் 240மிமீ டிஸ்க் பிரேக் உள்ளது.

10. பியாஜியோ ஃப்ளை 125

10. பியாஜியோ ஃப்ளை 125

வெஸ்பா பிராண்டின் தாய் நிறுவனமான பியாஜியோ பிராண்டிலிருந்து வரும் இரண்டாவது மாடல். இந்த ஸ்கூட்டர் மாடலில் 12 பிஎச்பி பவரையும், 10.7 என்எம் டார்க்கையும் வழங்கும் எஞ்சின் கொடுக்கப்பட்டிருக்கிறது. சிவிடி கியர்பாக்ஸ் உள்ளது. இந்த ஸ்கூட்டரில் 32மிமீ டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள், பின்புறத்தில் ஹைட்ராலிக் மோனோ ஷாக் அப்சார்பர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. முன்புறம், பின்புற சக்கரங்களில் 220மிமீ டிஸ்க்குகள் உடைய பிரேக் சிஸ்டம் செயலாற்றுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 5, 2016, 10:42 [IST]
English summary
Upcoming Scooter Models In India 2016.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+