யமஹா ரே ஸ்கூட்டர் மற்றும் எஃப்இசட்-எஸ், ஃபேஸர் பைக்குகள் உற்பத்தி நிறுத்தம்!
யமஹா நிறுவனம், தங்கள் நிறுவனத்தின் சார்பாக வழங்கபட்டு வந்த ரே ஸ்கூட்டர், எஃப்இசட்-எஸ் மற்றும் ஃபேஸர் ஆகிய மாடல்களை இந்திய வாகன சந்தைகளில் இருந்து விலக்கி கொண்டுள்ளனர்.
ரே ஸ்கூட்டர் பற்றி...

ஜப்பானிய இரு சக்கர வாகன உற்பத்திய நிறுவனமான யமஹா, ஸ்கூட்டர் சந்தைகளில் ரே ஸ்கூட்டர் மூலம் தான் பிரவேசம் செய்தனர். ஆனால், இந்த ஸ்கூட்டரை தங்களின் இணையதளத்தில் இருந்து விலக்கி கொண்டுள்ளனர்.
இந்த ரே ஸ்கூட்டரை அடிப்படையாக கொண்டு தான், யமஹாவில் பிற ஸ்கூட்டர் மாடல்கள் உருவாக்கபட்டன. மிகவும் ஸ்போர்ட்டியான டிசைன் மொழி கொண்டுள்ள ரே-ஃஜி மாடலும், ரே ஸ்கூட்டரின் நேரடி வழி தோன்றல் ஆகும். யமஹாவின் ஆல்ஃபா மற்றும் ஃபாஸ்ஸினோ மாடல்களிலும், ரே ஸ்கூட்டரில் உபயோகிக்கபடும் இஞ்ஜின் தான் உபயோகிக்கபடுகிறது.
ரே ஸ்கூட்டர், 113 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது. இதன் இஞ்ஜின் 7 பிஹெச்பியையும், உச்சபட்சமாக 8.1 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், யமஹா நிறுவனம், சிக்னஸ் ரே இசட்ஆர் ஸ்கூட்டரை காட்சிபடுத்தியது. யமஹா ரே ஸ்கூட்டர் விலக்கி கொள்வது, யமஹா சிக்னஸ் ரே இசட்ஆர் ஸ்கூட்டரை அறிமுகம் செய்வதற்கு தான் என தகவல்கள் வெளியாகிறது.
எஃப்இசட்-எஸ் மற்றும் ஃபேஸர் பற்றி...

ரே ஸ்கூட்டர் மட்டுமல்லாமல், யமஹா நிறுவனம் யமஹா எஃப்இசட்-எஸ் மற்றும் ஃபேஸர் ஆகிய பைக்குகளையும் விலக்கி கொள்கின்றனர். இந்த 2 மாடல்களும் கார்புரேட்டட மாடல்கள் ஆகும்.
முன்னதாக, யமஹா நிறுவனம், தங்களின் எஃப்இசட்-எஸ் மற்றும் ஃபேஸர் ஆகிய பைக்குகளை, ப்யூவல் இஞ்ஜெக்ஷன் தேர்வுகளுடன் வழங்கி வந்தனர்.
எஃப்இசட்-எஸ் மற்றும் ஃபேஸர், 153 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்ட் இஞ்ஜின் கொண்டிருந்தது. இந்த இஞ்ஜின் 13.81 பிஹெச்பி-யையும், உச்சபட்சமாக 13.6 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது. இதன் இஞ்ஜின் 5-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது. இவை, வெட், மல்டிபிள்-டிஸ்க் கிளட்ச் கொண்டுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், யமஹா நிறுவனம் சார்பாக ஏராளமான தயாரிப்புகள் காட்சிபடுத்தபட்டது. மெதுவாக விற்பனையாகும் தயாரிப்புகளை விலக்கி கொண்டு, புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்யும் நோக்கில் தான் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளபடுவதாக செய்திகள் வெளியாகிறது.


Click it and Unblock the Notifications








