யமஹா சல்யூட்டோ பைக், மேட் கிரீன் வண்ணத்தில் அறிமுகம்

By Ravichandran

யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் தயாரித்து வழங்கும் யமஹா சல்யூட்டோ பைக், தற்போது மேட் கிரீன் நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜப்பானை சேர்ந்த யமஹா நிறுவனம், இந்தியாவில் நெருங்கி வரும் பண்டிகை காலங்களுக்கு தயாராகி வருகிறது. பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்வது அல்லது மேம்பாடுகள் செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், மேட் கிரீன் வண்ணத்தில் அறிமுகம் செய்யப்பட்ட யமஹா சல்யூட்டோ பைக் பற்றிய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

இந்த யமஹா சல்யூட்டோ பைக்கில், சிங்கிள் சிலிண்டர் உடைய 125 சிசி, ஏர்-கூல்ட் இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 4-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ள இதன் இஞ்ஜின், 8.20 பிஹெச்பியையும், 10.10 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

மைலேஜ்;

மைலேஜ்;

யமஹா சல்யூட்டோ பைக்கில் புளூ கோர் டெக்னாலஜி உள்ளது. இதனால், யமஹா சல்யூட்டோ பைக், ஒரு லிட்டருக்கு 78 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.

மேம்பாடுகள்;

மேம்பாடுகள்;

மேட் கிரீன் நிற மேம்பாட்டை தவிர, யமஹா இந்தியா நிறுவனம், இந்த யமஹா சல்யூட்டோ பைக் வேறு எந்த விதமான மேம்பாடுகளும் செய்யப்படவில்லை. மேட் கிரீன் நிறத்திலான யமஹா சல்யூட்டோ பைக், ஸ்பெஷல் எடிஷன் மாடலும் அல்ல. ஆனால், இது ஏற்கனவே உள்ள வண்ண தேர்வுகளில், கூடுதல் நிற தேர்வு ஆகும். இந்தியா வாடிக்கையாளர்கள் பல்வேறு வகையிலான ரசனைகள் கொண்டுள்ளனர். யமஹா நிறுவனம், அனைவரின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்ய முயற்சித்து வருகிறது.

திட்டம்;

திட்டம்;

இந்த பண்டிகை காலத்தை ஒட்டி, யமஹா நிறுவனம் பல்வேறு ஈர்க்கும் வகையிலான ஸ்பெஷல் எடிஷன்களையும், நிற தேர்வுகளையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது. இந்திய வாகன சந்தைகளை பொருத்த வரை, யமஹா நிறுவனத்திற்கு பலமான சந்தை மதிப்பு உள்ளது. யமஹா நிறுவனம், தற்போதைய நிலையில், பல்வேறு பைக்குகளையும், ஸ்கூட்டர்களையும், சூப்பர்பைக்குகளையும் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.

விலை;

விலை;

மேட் கிரீன் நிறத்திலான யமஹா சல்யூட்டோ பைக்கின் விலை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

டிரம் பிரேக்குகள் உடைய மேட் கிரீன் நிற யமஹா சல்யூட்டோ - 53,600 எக்ஸ்-ஷோரூம் டெல்லி

டிஸ்க் பிரேக்குகள் உடைய மேட் கிரீன் நிற யமஹா சல்யூட்டோ - 56,100 எக்ஸ்-ஷோரூம் டெல்லி

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

யமஹா சல்யூட்டோ ஆர்எக்ஸ் பைக் இந்தியாவில் அறிமுகம்

இப்போது டிஸ்க் பிரேக்குடன் யமஹா சலுட்டோ பைக்!

வந்துவிட்டது புதிய யமஹா சல்யூடோ 125சிசி பைக் - தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்!!

More from DriveSpark

Article Published On: Friday, September 16, 2016, 12:35 [IST]
English summary
Yamaha Motor India is gearing up for upcoming 2016 festive season. Saluto motorcycle is now available in special new colour option of Matt Green paint scheme. Matt Green colour option is not special edition, but is new addition to its colour range. Yamaha claims that its Saluto motorcycle delivers fuel efficiency of 78km/l, due to its Blue Core technology. To know more, check here...
மேலும்... #யமஹா #yamaha
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+