தரமான ஹெல்மெட்டுகள் வாங்க திணறும் வாகன ஓட்டிகள்... ஜிஎஸ்டி எதிரொலி..!!
தரமான ஹெல்மெட்டுகள் வாங்க திணறும் வாகன ஓட்டிகள்... ஜிஎஸ்டி எதிரொலி..!!
ஜிஎஸ்டி-யின் கீழ் ஹெல்மெட்டுகளுக்கு 18 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளதால், தற்போது தரமான ஹெல்மெட்டுகள் கூடுதல் விலை ஏற்றத்தை பெற்றுள்ளது.

இதனால் ஐஎஸ்ஐ முத்திரையுடன் கூடிய ஹெல்மெட்டுகளை வாங்க விரும்புவோர் தற்போது இருக்கும் விலையை விட கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக முழுவதும் இருசக்கர வாகனங்கள் பயன்படுத்துவோர் ஹெல்மெட் அணியவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில் ஹெல்மெட்டுகளின் விலை அதிகரிப்பால், தரமான ஹெல்மெட்டுகள் வாங்குவது வாகன ஓட்டிகளுக்கு மேலும் கடினமாகியுள்ளது.

இதன்காரணமாக சாலையோரங்களில் விற்கப்படும் தரமற்ற ஐஎஸ்ஐ முத்திரை பெற்ற ஹெல்மெட்டுகளின் மக்கள் அதிகம் வாங்குகின்றனர்.

புதிய இருசக்கர வாகனங்களை வாங்குபவர்கள், ஹெல்மெட் வைத்திருப்பது கட்டாயம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்காரணமாக சலுகைகள் அறிவிக்கப்பட்டு, வாகனம் வாங்கும் போது உற்பத்தியாளர்கள் நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு அந்த சலுகைகளை வழங்கினார்கள்.

அதிகப்பட்ச விலை நிர்ணயிக்கப்பட்ட ஐஎஸ்ஐ முத்திரை கொண்ட ஹெல்மெட்டை வாடிக்கையாளர்கள் ரூ.700-க்கு வாங்கி வந்தார்கள்.
Recommended Video


மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை நடைமுறைப்படுத்திய பிறகு, அரசு அளித்த சலுகைகளை விற்பனையாளர்கள் ரத்து செய்தார்கள்.
இதனால் தரமான ஹெல்மெட்டுகள் விலை அதிகரித்து, ஜிஎஸ்டி-க்கு பிறகு அதனுடைய விற்பனையில் தேக நிலை ஏற்பட்டுள்ளது.

தரமான ஹெல்மெட்டுகளின் விற்பனை குறைந்தததால், போலியாக தயாரிக்கப்பட்டு ஐஎஸ்ஐ முத்திரைக்கொண்ட ஹெல்மெட்டுகளின் விற்பனை அதிகரித்து வருகிறது.

தமிழக தலைநகரான சென்னையில் தரமற்ற ஹெல்மெட்டுகள் விற்பனை அமோகமாக உள்ளது. குறிப்பாக போலீசார் நடமாட்டம் அதிகமிருக்கும் பகுதிகளில் இந்த ஹெல்மெட்டுகள் பகிரங்கமாகவே விற்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில் நடக்கும் சாலை விபத்துகளால் உயிர் இழப்புகள் அதிகரித்து வருகிறது. மேலும் விபத்துகளால் படுகாயம் அடைவதும் சர்வசாதரணமாக நடக்கிறது.

இந்நிலையில் உயிர்காக்கும் ஹெல்மெட்டுகள் தரமற்ற நிலை இருந்தால் விபத்துகளால் ஏற்படும் உயிரழப்புகள் இன்னும் அதிகரிக்கத்தான் செய்யும்.

சாலை விபத்துகள் இல்லா தமிழகத்தை உருவாக்க அரசு மற்றும் காவல்துறை எடுக்கும் அனைத்து முயற்சிகளும் இதனால் தோல்வியில் தான் முடியும்.


Click it and Unblock the Notifications








