டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கை வாங்கத் தூண்டும் 7 விஷயங்கள்!

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 ஸ்போர்ட்ஸ் பைக் குறித்த 5 முக்கிய விஷயங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

வரும் டிசம்பர் 6ந் தேதி புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 ஸ்போர்ட்ஸ் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த பைக் குறித்த 7 முக்கிய விஷயங்களை இரண்டே நிமிடங்களில் தெரிந்து கொள்ளலாம்.

டிவிஎஸ் நிறுவனத்தின் பவுர்ஃபுல் பைக்

டிவிஎஸ் நிறுவனத்தின் பவுர்ஃபுல் பைக்

இதுவரை டிவிஎஸ் நிறுபவனம் தயாரித்த மாடல்களில் மிகவும் சக்திவாய்ந்த முதல் ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாக வெளிவர இருக்கிறது. இந்த பைக்கில் இருக்கும் 313சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 33.6 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்கின் இரட்டையர்

பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்கின் இரட்டையர்

டிவிஎஸ்- பிஎம்டபிள்யூ கூட்டணியில் உருவான பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்கின் அடிப்படையில் ஃபேரிங் பேனல்கள் பொருத்தப்பட்ட ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. எனவே, உதிரிபாகங்களிலும், கட்டுமானத்திலும் மிகத் தரமான பட்ஜெட் ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாக எதிர்பார்க்கப்படுகிறது.

தரமான உதிரிபாகங்கள்

தரமான உதிரிபாகங்கள்

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கில் பல பிரிமியம் ஆக்சஸெரீகள் இடம்பெற்றிருக்கின்றன. முதல்முறையாக ட்ரெல்லிஸ் ஃப்ரேமில் பயன்படுத்தப்பட்டிருக்கும் டிவிஎஸ் பைக் மாடல் இது. மேக்னெட்டி மரெல்லி நிறுவனத்தின் இசியூ கம்ப்யூட்டர், கான்டினென்ட்டல் நிறுவனத்தின் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம், கேஒய்பி நிறுவனத்தின் சஸ்பென்ஷன் பாகங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

பிரேக் சிஸ்டம்

பிரேக் சிஸ்டம்

இந்த பைக்கில் முன்புறத்தில் நான்கு பிஸ்டன்கள் கொண்ட 300மிமீ டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பிரேக் சிஸ்டமும், முன்புற சஸ்பென்ஷனுக்கான அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும் பைப்ரி நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்பட்டு இருக்கிறது.

 சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள், அகலமான டயர்கள், முழுவதுமான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை மிக முக்கிய அம்சங்களாக இடம்பெற்றிருக்கின்றன.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கில் ஏராளமான பிரிமியம் அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இருப்பினும், போட்டியாளர்களுக்கு மிக சவாலான விலையில் இந்த பைக்கை நிலைநிறுத்த டிவிஎஸ் திட்டமிட்டுள்ளது. ரூ.2 லட்சத்திற்குள் இந்த பைக் எதிர்பார்க்கப்படுகிறது.

சுண்டி இழுக்கும்...

சுண்டி இழுக்கும்...

கேடிஎம் ஆர்சி 390, யமஹா ஆர்3, கவாஸாகி நின்ஜா 300 பைக் மாடல்களுடன் போட்டி போடும். சிறப்பம்சங்கள் மிகுதியாக இருப்பதும், போட்டியாளர்களைவிட விலை குறைவாக எதிர்பார்க்கப்படுவதும், இந்த பைக் இளம் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர வாய்ப்புள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, November 24, 2017, 17:26 [IST]
English summary
7 Important Things To Know About All New TVS Apache RR 310 Bike
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+