ராணுவத்திற்கான மின்சார மோட்டார்சைக்கிளை களமிறக்கும் ஏகே-47 துப்பாக்கி நிறுவனம்!
ஏகே-47 எந்திர துப்பாக்கி தயாரிப்பில் புகழ்பெற்ற கலானிஷ்கோவ் நிறுவனம், விரைவில் மின்சார மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய இருக்கிறது.
புத்தம் புதிய மின்சார மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது ஏகே-47 எந்திர துப்பாக்கி மூலமாக உலக புகழ்பெற்ற கலஷினிகோவ் நிறுவனம். கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

ரஷ்யாவை சேர்ந்த கலானிஷிகோவ் நிறுவனம் ஏகே-47 எந்திர துப்பாக்கி தயாரிப்பு மூலமாக உலக அளவில் புகழ்பெற்று விளங்குகிறது. இந்த நிறுவனத்தின் துணை நிறுவனமாக செயல்படும் IZH நிறுவனம் மோட்டார்சைக்கிள் தயாரிப்பில் மிகவும் பழமை வாய்ந்தது.

இந்த நிறுவனம் தற்போது மின்சார மோட்டார்சைக்கிள் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளது. விரைவில் இந்த நிறுவனம், புத்தம் புதிய மோட்டார்சைக்கிளை இந்த நிறுவனம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

என்டியூரோ ரக மோட்டார்சைக்கிள் போன்று வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அந்நாட்டு போலீஸ் துறையிலும், ராணுவத்திலும் பயன்படுத்துவதற்கு ஏற்ற சிறப்பம்சங்களை இந்த மோட்டார்சைக்கிள் பெற்றிருக்கிறது.

ஒரு முறை சார்ஜ் செய்தால், இந்த மின்சார மோட்டார்சைக்கிள் 150 கிமீ தூரம் வரை பயணிக்கும். மேலும், இதன் பயணிக்கும் தூரத்தை அதிகரிக்கும் முயற்சிகளும் நடந்து வருகிறதாம்.

இந்த மின்சார மோட்டார்சைக்கிள் அனைத்து விதமான சாலைகள் மற்றும் நிலபரப்புகளில் செல்லும் தகவமைப்புகளிலும், திறன் வாய்ந்த பேட்டரி மற்றும் மின் மோட்டாரையும் பெற்றிருக்கிறது.

அடுத்த ஆண்டு ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்த போட்டிகளில் தீவிரவாத தாக்குதல்களை நடத்த இருப்பதாக ஐஎஸ் தீவிரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.

இந்த நிலையில், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பில் ஈடுபட இருக்கும் போலீசாருக்கு, கலனிஷிகோவ் நிறுவனம் தயாரிக்கும் மின்சார மோட்டார்சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன.

முதல் கட்டமாக 50 மோட்டார்சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. போலீசாருக்கான மாடல் மட்டுமின்றி, ராணுவத்திற்கான விசேஷ மாடலையும் இந்த நிறுவனம் தயாரித்து கொடுக்க இருக்கிறது.

ராணுவத்திற்காக தயாரிக்கப்படும் மாடலானது, ரேடார் கண்களில் சிக்காத வகையிலான வடிவமைப்பையும், சப்தமில்லாமல் எதிரிகளின் பகுதிகளில் ராணுவ துருப்புகள் செல்வதற்கும் பயன்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதேபோன்று ஒரு புதிய ஹைப்ரிட் ரக மோட்டார்சைக்கிளை அமெரிக்காவை சேர்ந்த நாசா நிறுவனம், அந்நாட்டு ராணுவத்திற்காக உருவாக்கி வருகிறது. சைலென்ட்ஹாக் என்ற பெயரில் இந்த புதிய மோட்டார்சைக்கிள் உருவாக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, ராணுவம் மற்றும் போலீசாருக்காக புதிய மின்சார மோட்டார்சைக்கிளை உருவாக்குவதில் தீவிரம் காட்டி வரும் கலனிஷிகோவ் நிறுவனம், ஆயுத தயாரிப்பில் முன்னணி வகிக்கிறது. இந்த நிறுவனத்தின் நிறுவனர் மிக்கையில் கலாஷ்னிகோவ் இரண்டாவது உலகப்போரில் சோவியத் யூனியனின் பீரங்கி படையில் பணியாற்றியவர்.

போரில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, அவருக்கு செயல்திறன் மிகுந்த துப்பாக்கியை உருவாக்கும் எண்ணம் தோன்றியது. அவ்வாறு அவரது எண்ணத்தில் உருவாக்கப்பட்டதுதான் ஏகே-47 எந்திர துப்பாக்கி.

Automatic weapon of Kalashinikov என்பதன் சுருக்கமாக ஏகே என்பதும், 1947ம் ஆண்டில் பயன்பாட்டிற்கு வந்தால், 47 என்பதை குறிக்கும் விதத்தில் ஏகே-47 என்ற பெயரில் வழங்கப்படுகிறது. இந்த எந்திர துப்பாக்கி, இயக்குவதற்கு மிக எளிது.

எனவே, உலக அளவில் பல்வேறு நாட்டு படையணிகளிலும், புரட்சிப் படையினர் மற்றும் தீவிரவாதிகளால் அதிகம் விரும்பி பயன்படுத்தப்படுகிறது. இந்த எந்திர துப்பாக்கி 30 ரவுண்டுகள் வரை சுடும் திறன் பெற்றது.

உலகின் பல்வேறு நாடுகளிலும் இந்த துப்பாக்கி பயன்படுத்தப்படுகிறது. இந்திய ராணுவத்திற்கான ஏகே-47 துப்பாக்கி, உரிமம் பெற்று திருச்சியில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
Trending On DriveSpark Tamil:


Click it and Unblock the Notifications








