ஜோஹேமர் மின்சார பைக்கின் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை!

Written By:

புதுமையான தோற்றம் கொண்ட பைக்குகள் அறிமுகமாகிக் கொண்டே வந்தாலும், அதில் ஒரு சில பைக்குகள்தான் நம் கவனத்தை ஈர்க்கும். ஓட்டி பார்த்துவிட வேண்டும் என்ற வேட்கையை உருவாக்கும்.

அந்த வகையில், மிக வித்தியாசமான தோற்றத்துடன் நம் மனதில் வேட்கையை உருவாக்கும் ஒரு மின்சார பைக் மாடலை பற்றித்தான் இந்த செய்தியில் பார்க்கப் போகிறோம்.

சும்மா ஜம்முனு போறதுக்கு ஒரு அசத்தலான மின்சார பைக்!

ஜோஹேமர் ஜே1 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் இந்த புதிய எலக்ட்ரிக் பைக் மிக கவர்ச்சியாகவும், புதுமையாகவும் இருக்கிறது. நீண்ட தூர பயணத்திற்கு ஏற்ற க்ரூஸர் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

சும்மா ஜம்முனு போறதுக்கு ஒரு அசத்தலான மின்சார பைக்!

இந்த பைக்கை பார்ப்பதற்கு ஹாலிவுட் படங்களில் பயன்படுத்தப்படும் பைக்கை போல மிக வித்தியாசமாக இருக்கிறது. சாவகாசமாக அமர்ந்து செல்வதற்கு ஏதுவான இருக்கை அமைப்பையும், உயர்த்தப்பட்ட அளவில் கச்சிதமான கைப்பிடிகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

சும்மா ஜம்முனு போறதுக்கு ஒரு அசத்தலான மின்சார பைக்!

இந்த மின்சார பைக்கில் 12.6 kWh திறன் கொண்ட லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரியை 90 நிமிடங்களில் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏறிவிடும். பின்புற சக்கரத்தில் மின்மோட்டார் சக்கரத்துடன் நேரடியாக இணைக்கப்பட்டு இருக்கிறது.

சும்மா ஜம்முனு போறதுக்கு ஒரு அசத்தலான மின்சார பைக்!

ஒருமுறை பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 200 கிமீ தூரம் வரை பயணிக்கும். இந்த பைக்கில் 150 கிமீ தூரம் பயணிக்கும் மற்றொரு மாடலிலும் கிடைக்கும்.

சும்மா ஜம்முனு போறதுக்கு ஒரு அசத்தலான மின்சார பைக்!

பல நவீன தொழில்நுட்ப அம்சங்கள் இந்த மின்சார பைக்கில் இடம்பெற்று இருக்கிறது. 2.4 அங்குல திரையுடன் கூடிய சைடு மிரர்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் உள்பட பல சிறப்பம்சங்கள் உள்ளன.

சும்மா ஜம்முனு போறதுக்கு ஒரு அசத்தலான மின்சார பைக்!

சில்வர், வெள்ளை, நீலம், மஞ்சள் மற்றும் பச்சை ஆகிய 5 விதமான வண்ணங்களில் கிடைக்கிறது.

சும்மா ஜம்முனு போறதுக்கு ஒரு அசத்தலான மின்சார பைக்!

இந்த பைக் இரண்டுவிதமான மாடல்களில் வருகிறது. 150 கிமீ செல்லும் மாடல் 23,000 யூரோ விலையிலும், 200 கிமீ தூரம் பயணிக்கும் மாடல் 25,000 யூரோ விலையிலும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சும்மா ஜம்முனு போறதுக்கு ஒரு அசத்தலான மின்சார பைக்!

ஆஸ்திரியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதுபோன்ற பைக்குகள் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டால், நிச்சயம் பைக் ஆர்வலர்களை சுண்டி இழுக்கும் என்று நம்பலாம்.

English summary
All you need to know about Johammer J1.
Story first published: Tuesday, January 3, 2017, 14:17 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos