3 புதிய கஸ்டமைஸ் பைக்குகளை அறிமுகப்படுத்தியது ஆர்க் நிறுவனம்!

Written By:

இத்தாலியின் மிலன் நகரில் நடந்து வரும் சர்வதேச மோட்டார்சைக்கிள் கண்காட்சியில், ஆர்க் மோட்டார்சைக்கிள் நிறுவனம் சார்பில் 3 புதிய கஸ்டமைஸ் மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன.

3 புதிய கஸ்டமைஸ் பைக்குகளை அறிமுகப்படுத்தியது ஆர்க் நிறுவனம்!

பிரபல ஹாலிவுட் நடிகர் கீனு ரீவ்ஸ் மோட்டார்சைக்கிள் மீது அதீத ஆர்வம் கொண்டவர். மோட்டார்சைக்கிள் மீது ஆர்வத்தோடு ரசித்து நின்று விடாமல், ஆர்க் என்ற பெயரில் சொந்தமாக ஒரு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தை கார்டு ஹோலிங்கர் என்பவருடன் இணைந்து துவங்கினார்.

3 புதிய கஸ்டமைஸ் பைக்குகளை அறிமுகப்படுத்தியது ஆர்க் நிறுவனம்!

இந்த நிலையில், ஆர்க் நிறுவனம் கஸ்டமைஸ் மோட்டார்சைக்கிள்களை உருவாக்கி வருகிறது. இந்த நிறுவனம் உருவாக்கி 3 அட்டகாசமான புதிய கஸ்டமைஸ் மோட்டார்சைக்கிள் மாடல்கள் மிலன் மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன.

Recommended Video - Watch Now!
[Tamil] Honda CBR 650F Launched In India - DriveSpark
3 புதிய கஸ்டமைஸ் பைக்குகளை அறிமுகப்படுத்தியது ஆர்க் நிறுவனம்!

KRGT-1 2018, KRGT-1S மற்றும் Arch Method 143 ஆகிய மூன்று கஸ்டமைஸ் மாடல்களும் இன்று பொது பார்வைக்கு வந்தன. இதில், ஆர்க் கேஜிஆர்டி -1 மோட்டார்சைக்கிள் அடுத்த ஆண்டு ஐரோப்பிய நாடுகளில் விற்பனைக்கு கிடைக்கும். யூரோ-4 மாசு கட்டுப்பாட்டு அம்சம் கொண்டது.

3 புதிய கஸ்டமைஸ் பைக்குகளை அறிமுகப்படுத்தியது ஆர்க் நிறுவனம்!

இரண்டாவது மாடல் கேஆர்ஜிடி-1எஸ் மாடலானது, துள்ளலான வடிவமைப்பு தாத்பரியங்களையும், ஆக்சஸெரீகளையும் கொண்டது.

3 புதிய கஸ்டமைஸ் பைக்குகளை அறிமுகப்படுத்தியது ஆர்க் நிறுவனம்!

மூன்றாவது, ஆர்க் மெத்தட் 143 மாடலானது, கார்பன் ஃபைபர் பாகங்களால் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற சக்திவாய்ந்த மோட்டார்சைக்கிளாக இருக்கும்.

3 புதிய கஸ்டமைஸ் பைக்குகளை அறிமுகப்படுத்தியது ஆர்க் நிறுவனம்!

மூன்றாவது மாடலான ஆர்க் மெத்தட் 143 மோட்டார்சைக்கிள் ஆர்க் நிறுவனத்தின் டிசைன் வல்லமையை எடுத்துக் காட்டும் விதமாக இருக்கும். மொத்தமாக 23 மெத்தட் 143 மோட்டார்சைக்கிள்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளன.

இஐசிஎம்ஏ மோட்டார்சைக்கிள் கண்காட்சி செய்திகள்!

English summary
Arch Motorcycle Unveils 3 Custom Motorcycles At EICMA.
Story first published: Tuesday, November 7, 2017, 18:55 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark