ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள் போல மாறிய பஜாஜ் அவென்ஜர்!

Written By:

வார இறுதி விடுமுறை தினங்களில் மனதை இலகுவாக்குவதற்கு மோட்டார்சைக்கிளில் பயணம் மேற்கொள்வது இளைஞர்களின் பொழுதுபோக்காக இருக்கிறது. மேலும், மோட்டார்சைக்கிளில் நீண்ட தூர பயணிக்கவும் இக்கால இளைஞர்கள் பிரியப்படுகின்றனர்.

ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள் போல மாறிய பஜாஜ் அவென்ஜர்.

அவர்களுக்கு ஏதுவான சிறப்பம்சங்களை க்ரூஸர் வகை மோட்டார்சைக்கிள்கள் பெற்றிருக்கின்றன. இந்த நிலையில், க்ரூஸர் வகை மோட்டார்சைக்கிள்களை வாங்க பிரியப்படுவோருக்கு மிக குறைவான விலை தேர்வாக பஜாஜ் அவென்ஜர் மோட்டார்சைக்கிள் மாடல்கள் இருக்கின்றன.

ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள் போல மாறிய பஜாஜ் அவென்ஜர்.

இந்த நிலையில், க்ரூஸர் வகை மோட்டார்சைக்கிள்களில் மிகவும் விரும்பப்படும் பிராண்டு ஹார்லி டேவிட்சன். ஹார்லி கனவுடன் சுற்றினாலும், கைக்கு தோதுவான விலையில் கிடைக்கும் பஜாஜ் அவென்ஜர் மோட்டார்சைக்கிளையே வாங்கும் நிலை ஏற்படுகிறது.

ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள் போல மாறிய பஜாஜ் அவென்ஜர்.

இந்த மனக்குறையை போக்கும் விதத்தில், பஜாஜ் அவென்ஜர் 220 மோட்டார்சைக்கிளுக்கு விசேஷ கஸ்டமைஸ் கிட்டை அறிமுகம் செய்துள்ளது புனே நகரில் இயங்கி வரும் ஆட்டோலாக் டிசைன் நிறுவனம்.

ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள் போல மாறிய பஜாஜ் அவென்ஜர்.

பஜாஜ் ஸ்ட்ரீட் 220 மோட்டார்சைக்கிளுக்கு இந்த கஸ்டமைஸ் கிட் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. சிறிய மாற்றங்கள் செய்து ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 மோட்டார்சைக்கிளுக்கு இணையான தோற்றத்தை கொடுத்து அசத்தி இருக்கிறது புனே நகரில் இயங்கி வரும் ஆட்டோலாக் டிசைன் நிறுவனம்.

ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள் போல மாறிய பஜாஜ் அவென்ஜர்.

அவென்ஜர் புரூயிஸ் என்ற பெயரில் இந்த விசேஷ ஆக்சஸெரீ பேக்கேஜை ஆட்டோலாக் டிசைன் நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது. ஹெட்லைட் கவுல், இரண்டு விதமான இருக்கை அமைப்புடன் இந்த விசேஷ கிட் கிடைக்கிறது. இவற்றின் மூலமாக உங்களது பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட் 220 மாடல், ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 மோட்டார்சைக்கிளுக்கு இணையாக மாறிவிடும்.

ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள் போல மாறிய பஜாஜ் அவென்ஜர்.

ஹேண்டில்பார் மற்றும் விசேஷ விளக்குகளும் கூடுதலாக பெற்றுக் கொள்ளலாம். மிக குறைவான ஆக்சஸெரீ மாற்றத்துடன் அவென்ஜர் புரூயிஸ் மாடல் அசத்துகிறது. மேலும், இந்த ஆக்சஸெரீ பேக்கேஜ் ரூ.10,000 முதல் ரூ.15,000 விலையில் கிடைப்பதும் பைக் பிரியர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள் போல மாறிய பஜாஜ் அவென்ஜர்.

பஜாஜ் அவென்ஜர் மோட்டார்சைக்கிளில் இருக்கும் 220சிசி எஞ்சின் அதிகபட்சமாக 19.03 பிஎஸ் பவரையும், 17.5 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பஜாஜ் அவென்ஜர் பைக்கிற்கான விசேஷ ஏர் ஃபில்டர் மற்றும் புகைப்போக்கி குழல் மாற்றங்களையும் ஆட்டோலாக் செய்து தருகிறது. இதற்கும் மிக தோதுவான விலையில் கிடைக்கிறது.

மேலும்... #பஜாஜ் #bajaj
English summary
Autologue Design Introduces Special Custom Kit For Bajaj Avenger Motorcycle.
Story first published: Wednesday, April 19, 2017, 11:06 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark