புதிய பஜாஜ் சிடி100 இஎஸ் பைக் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

Written By:

எலக்ட்ரிக் ஸ்டார்ட் வசதியுடன் பஜாஜ் சிடி100 பைக்கில் புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

To Follow DriveSpark On Facebook, Click The Like Button
புதிய பஜாஜ் சிடி100 இஎஸ் பைக் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

இதுவரை பஜாஜ் சிடி100 பைக் சிடி100பி, சிடி 100 ஸ்போக் மற்றும் பஜாஜ் சிடி100 அலாய் ஆகிய மூன்று மாடல்களில் கிடைத்து வருகிறது. இந்த நிலையில், எலக்ட்ரிக் ஸ்டார்ட் வசதியுடன் புதிய மாடல் இணைந்துள்ளது. இந்த புதிய மாடல் பஜாஜ் சிடி100 இஎஸ் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

புதிய பஜாஜ் சிடி100 இஎஸ் பைக் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

இந்த புதிய பஜாஜ் சிடி100 இஎஸ் பைக் ரூ.38,806 மும்பை எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. ஏற்கனவே விற்பனையில் இருந்த விலை உயர்ந்த மாடலைவிட இந்த எலக்ட்ரிக் ஸ்டார்ட் வசதி கொண்ட மாடல் ரூ.2,285 கூடுதல் விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இருந்தபோதிலும், மார்க்கெட்டில் மிக குறைவான பட்ஜெட்டில் அதிக சிறப்பம்சங்கள் கொண்ட மாடலாக கூறலாம்.

புதிய பஜாஜ் சிடி100 இஎஸ் பைக் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

புதிய பஜாஜ் சிடி100 இஎஸ் பைக் மாடல் சிவப்பு வண்ண அலங்கார ஸ்டிக்கருடன் கூடிய கருப்பு மற்றும் சில்வர் வண்ணக் கலவையிலும், நீல வண்ண அலங்கார ஸ்டிக்கருடன் கருப்பு மற்றும் சில்வர் வண்ணக் கலவையிலும் கிடைக்கும். இதுதவிர்த்து, சிவப்பு வண்ணத்திலும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Recommended Video
2017 DSK Benelli 302 R Launched In Inida | In Tamil - DriveSpark தமிழ்
புதிய பஜாஜ் சிடி100 இஎஸ் பைக் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

புதிய பஜாஜ் சிடி100 பைக்கில் 7.7 பிஎஸ் பவரையும், 8.24 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 102சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்ிகறது. 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய பஜாஜ் சிடி100 இஎஸ் பைக் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

புதிய பஜாஜ் சிடி100 பைக் லிட்டருக்கு 90 கிமீ மைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படடுகிறது. மார்க்கெட்டில் இருக்கும் பைக்குகளில் மிக அதிக மைலேஜ் தரும் பைக் மாடல்களில் ஒன்றாகவும் இதனை கூறலாம். இந்த பைக்கில் 10.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டு இருக்கிறது.

புதிய பஜாஜ் சிடி100 இஎஸ் பைக் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

இந்த பைக் 169மிமீ கிரவுண்ட் கிளிரயன்ஸ் கொண்டது. மணிக்கு 90 கிமீ வேகம் வரையிலும் செல்லும் திறனை பெற்றிருக்கிறது.

புதிய பஜாஜ் சிடி100 இஎஸ் பைக் விற்பனைக்கு அறிமுகம்- முழு விபரம்!

இந்த பைக்கின் முன் மற்றும் பின் சக்கரங்களில் டிரம் பிரேக்குகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இந்த பைக் 109 கிலோ எடை கொண்டதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. குறைவான பட்ஜெட்டில் நிறைவான அம்சங்களுடன் கூடிய பைக் மாடலை எதிர்பார்ப்போருக்கு சிறப்பான தேர்வாக இருக்கிறது.

மேலும்... #பஜாஜ் #bajaj
English summary
Bajaj CT100 Electric Start launched in India. The new Bajaj CT100 Electric Start Alloy is priced at Rs 38,806 ex-showroom (Mumbai).
Story first published: Thursday, August 24, 2017, 9:26 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos