புதிய பஜாஜ் 2017 டிஸ்கவர்125 பைக் விற்பனைக்கு அறிமுகம்

Written By:

இந்தாண்டு முதல் இருசக்கர வாகன உற்பத்தியில் புதிய விதிமுறைகள் புகுத்தப்பட்டுள்ளது. இதன்படி அனைத்து பைக்குகளிலும் பாரத் ஸ்டேஜ்-4 தர மாசு உமிழ்வு சான்று பெற்ற இஞ்சினும், ஆட்டோமேடிக் ஹெட்லைட்டும் பொருத்தப்பட்டு தயாரிக்கப்பட வேண்டும். இந்த புதிய விதிமுறகள் படி தற்போது புதிய டிஸ்கவர்125 பைக் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அறிமுகமாகிள்யுளது.

புதிய பஜாஜ் டிஸ்கவர்125 பைக் விற்பனைக்கு அறிமுகம்

பஜாஜ் நிறுவனத்தின் வெற்றிகரமான மாடல்களில் ஒன்றாக டிஸ்கவர் திகழ்ந்து வருகிறது. தற்போது அறிமுகமாகியுள்ள புதிய 2017 டிஸ்கவர்125 பைக் புதிய பெயிண்ட் ஸ்கீமில், அட்டகாசமான தோற்றத்தில் வெளிவந்துள்ளது.

புதிய பஜாஜ் டிஸ்கவர்125 பைக் விற்பனைக்கு அறிமுகம்

இதில் குறிப்பிடத்தக்க மாற்றமாக புதிய அலாய் வீல்கள், 35 வாட் டிசி ஹெட்லைட் மற்றும் அகலமான ரியர் டயர்ஆகியவை உள்ளது.

புதிய பஜாஜ் டிஸ்கவர்125 பைக் விற்பனைக்கு அறிமுகம்

2017 டிஸ்கவர்125 பைக்கில் பாரத் ஸ்டேஜ்-4 மாசு உமிழ்வு சான்று பெற்ற காற்றால் குளிவிக்கப்படும் 124.6 சிசி சிங்கில் இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 11 பிஹச்பி ஆற்றலையும், 10.8 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாகும். இதில் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது.

புதிய பஜாஜ் டிஸ்கவர்125 பைக் விற்பனைக்கு அறிமுகம்

இந்த பைக், டீப் ரெட் கிராஃபிக்ஸ் உடன் கூடிய எபோனி பிளாக், டீப் பிளூ கிராஃபிக்ஸ் உடன் கூடிய எபோனி பிளாக், எலக்ட்ரான் பிளூ மற்றும் ஃபிளேம் ரெட் ஆகிய 4 வண்ணங்களில் கிடைக்கிறது.

புதிய பஜாஜ் டிஸ்கவர்125 பைக் விற்பனைக்கு அறிமுகம்

இதன் டிரம் பிரேக் வேரியண்ட் முன்புறமும், பின்புறமும் 130 எம்எம் கொண்டதாகவும், டிஸ்க் வேரியண்ட் 200 எம்எம் அளவு கொண்டதாகவும் உள்ளது. இதில் எலெக்ட்ரிக் ஸ்டாட்டரும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய பஜாஜ் டிஸ்கவர்125 பைக் விற்பனைக்கு அறிமுகம்

புதிய டிஸ்கவர்125 பைக்கின் எடை 120.5 கிலோவாகும். இதன் அதிகபட்ச வேகம் 100 கிமீ ஆகும். இது லிட்டருக்கு 82.4 கிமீ மைலேஜ் தர வல்லது என்பது சிறப்பானதாகும்.

புதிய பஜாஜ் டிஸ்கவர்125 பைக் விற்பனைக்கு அறிமுகம்

டிஸ்கவர்125 புதிய விதிமுறைகள்படி தயாரிக்கப்பட்டுள்ளதால் நடப்பு மாடலை விட ரூ.1,464 கூடுதல் விலை நிர்னயிக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.50,559 (டெல்லி எக்ஸ் ஷோரூம்) ஆகும். இதன் டிஸ்க் பிரேக் வேரியண்ட் ரூ. 52,559 (டெல்லி எக்ஸ் ஷோரூம்) என்ற விலையில் கிடைக்கிறது.

புதிய பஜாஜ் டோமினார்400 பைக்கின் படங்கள்:

 

English summary
Bajaj Auto has launched the 2017 Discover 125 with BS-IV compliant engine and few other cosmetic updates. The motorcycle gets wider rear tyre and DC lighting setup.
Story first published: Tuesday, March 14, 2017, 9:45 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos