கருப்பு, தங்க நிற காம்போவில் அசத்தலான அப்டேட்டுன் வெளிவரும் 2018 பஜாஜ் டாமினோர் 400 பைக்..!!

கருப்பு, தங்க நிற காம்போவில் அசத்தலான அப்டேட்டுன் வெளிவரும் 2018 பஜாஜ் டாமினோர் 400 பைக்..!!

By Azhagar

இணையத்தில் கசிந்துள்ள புதிய புகைப்படத்தின் மூலம் பஜாஜ் 2018 டாமினோர் 400 மோட்டார் சைக்கிள் புதிய நிறத்தை வெளிவருவது தெரியவந்துள்ளது.

பஜாஜ் 2018 டாமினோர் 400 பைக்கில் அசத்தும் அப்டேட்..!!

பஜாஜ் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் மாடலான டாமினோர் 400 மோட்டார் சைக்கிள் புதிய மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் தயாராகி வருவதாக முன்னரே தகவல்கள் வெளிவந்தன.

பஜாஜ் 2018 டாமினோர் 400 பைக்கில் அசத்தும் அப்டேட்..!!

அதை உறுதிப்படுத்தும் விதத்தில் புதிய பஜாஜ் டாமினோர் 400 பைக்கின் புகைப்படங்கள் அமைந்துள்ளன.

பைக்கின் அலாய் வீல்கள் தங்க நிறத்தில் இருப்பதாக திரஸ்ட்சோன் என்ற இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

தங்க நிறத்திலான டாமினோர் பைக் ஏற்கனவே விற்பனையில் தான் உள்ளது எனவும் திரஸ்ட்சோன் இணையதளம் தெரிவிக்கிறது.

பஜாஜ் 2018 டாமினோர் 400 பைக்கில் அசத்தும் அப்டேட்..!!

புதிய டாமினோர் 400 பைக் வேரியன்ட் மேட் கருப்பு நிறத்தில் வெளிவரும் என்றாலும், வழக்கம் போல கருப்பு நிற அலாய் வீல்களுக்கு மாற்றாக புதிய மேம்படுத்தப்பட்ட மாடலில் தங்க நிற அலாய் வீல்கள் இடம்பெற்றுள்ளன.

பஜாஜ் 2018 டாமினோர் 400 பைக்கில் அசத்தும் அப்டேட்..!!

மேட் பிளாக் மற்றும் தங்க நிற சக்கரங்களுடன் தனித்துவமான அடையாளம் பெறுகிறது 2018 டாமினோர் 400 பைக். மேலும் இந்த தோற்றம் நிச்சயம் இளைஞர்களை ஈர்க்கும் என்பது பஜாஜின் கணிப்பு.

Trending On Drivespark:

பஜாஜ் 2018 டாமினோர் 400 பைக்கில் அசத்தும் அப்டேட்..!!

இந்த மேட் பிளாக் தங்க நிற வீல் என கலப்பு அம்சங்களை பெற்றுள்ள 2018 டாமினோர் 400 மாடல் பைக், தற்போது விற்பனையில் இருக்கும் மாடலை விட ரூ.500 முதல் ரூ.1000 வரை விலை அதிகமாக பெறலாம்.

Recommended Video

2018 Yamaha YZF-R1 Quick Look - DriveSpark
பஜாஜ் 2018 டாமினோர் 400 பைக்கில் அசத்தும் அப்டேட்..!!

இவற்றுடன் டாமினோர் 400 மோட்டார் சைக்கிளில் சிவப்பு நிற பதிப்பும் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளது.

அதை உணரச்செய்யும் விதத்தில் அந்த பைக்கின் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து பெரிய வரவேற்பை பெற்றன.

பஜாஜ் 2018 டாமினோர் 400 பைக்கில் அசத்தும் அப்டேட்..!!

குறிப்பாக சிவப்பு நிற டாமினோர் 400 மோட்டார் சைக்கிளின் ஃபூட்பெக், அசெம்பிளி, ஹேன்டில்பார், பெரிமீட்டர் ஃபிரேம் மற்றும் ஸ்பிலிட் கிராப் ரெயில் போன்றவை சில்வர் நிறத்தில் இருந்தன.

பஜாஜ் 2018 டாமினோர் 400 பைக்கில் அசத்தும் அப்டேட்..!!

இதற்கிடையே வெள்ளை நிற பதிப்பில் வரும் டாமினோர் 400 மாடல் பைக்கின் விற்பனை நிறுத்தப்படலாம் என்றும் பஜாஜ் நிறுவன தகவல்கள் தெரிவிக்கின்றன.

பஜாஜ் 2018 டாமினோர் 400 பைக்கில் அசத்தும் அப்டேட்..!!

373சிசி திறன் பெற்ற 2018 பஜா டாமினோர் 400 பைக்கின் எஞ்சின் லிக்விட் கூல்டு முறையில் இயங்கும். இது அதிகப்பட்சமாக 34.5 பிஎச்பி பவர் மற்ற்ம் 35 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

Trending On Drivespark:

பஜாஜ் 2018 டாமினோர் 400 பைக்கில் அசத்தும் அப்டேட்..!!

பைக்கின் சரியான செயல்பாட்டிற்காக அதனுடைய எஞ்சின் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப்பர் கிளட்சுடன் இணைக்கப்பட்டுள்ளது.

பஜாஜ் 2018 டாமினோர் 400 பைக்கில் அசத்தும் அப்டேட்..!!

முந்தைய மோட்டார் சைக்கிளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, புதிய டாமினோ 400 மாடல் புதிய தோர்றத்தில் மற்றும் நிறங்களில் பெரிய மாறுபாட்டை பெற்றுள்ளது.

பஜாஜ் 2018 டாமினோர் 400 பைக்கில் அசத்தும் அப்டேட்..!!

அதேசமயத்தில் செயல்திறன் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களில் பஜாஜ் டாமினோர் 400 மாடல் பைக் எந்தளவிலும் மாற்றங்களை பெற்றிருக்கவில்லை.

Trending DriveSpark YouTube Videos

Subscribe To DriveSpark Tamil YouTube Channel - Click Here

English summary
Read in Tamil: Bajaj Dominar 400 Gets Another Update. Click for Details...
Story first published: Friday, December 29, 2017, 15:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X