சிட்டாய் பறந்த டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்... மூச்சு வாங்கிய பஜாஜ் டோமினார்!

Written By:

வரும் டிசம்பர் 6ந் தேதி புத்தம் புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், இந்த பைக்கின் செயல்திறன் மிக சிறப்பாக இருப்பதை எடுத்துக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கை விரட்டிய பஜாஜ் டோமினார்!

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் மிக தீவிரமான சாலை சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டு வந்தது தெரிந்ததே. அதுபோன்று, ஒரு டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் அடையாளங்கள் மறைக்கப்பட்ட நிலையில், நெடுஞ்சாலையில் ஓட்டி சாலை சோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருந்தது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கை விரட்டிய பஜாஜ் டோமினார்!

அங்க அடையாளங்கள் மறைக்கப்பட்டிருந்த அந்த பைக்கை பார்த்த பஜாஜ் டோமினார் பைக்கை ஓட்டிய இளைஞர், அந்த பைக்கை துரத்திப் பிடிக்க முயன்றுள்ளார். அப்போது தன் பைக்கை பின்னால் பைக்கில் வந்த இளைஞர் பின்தொடர்வதை டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கை ஆய்வு செய்தவர் கவனித்துவிட்டார்.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கை விரட்டிய பஜாஜ் டோமினார்!

இதையடுத்து, அவரிடம் சிக்காமல் இருக்க பைக்கை அவர் சிட்டாய் செலுத்தினார். பஜாஜ் டோமினார் பைக்கை ஓட்டியவர் அந்த டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கை விரட்டி பிடிக்க முயன்று தோல்வி கண்டார்.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கை விரட்டிய பஜாஜ் டோமினார்!

அந்த அப்பாச்சி பைக் சிட்டு போல் சாலையில் பறந்து சென்றது. பஜாஜ் டோமினார் பைக்கை ஓட்டிச் சென்றவரின் ஹெல்மெட் கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகியது. அத்துடன், மணிக்கு 150 கிமீ வேகத்திற்கும் மேல் அந்த அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் சென்றதும் இந்த வீடியோ மூலமாக புலனாகிறது.

Recommended Video - Watch Now!
Jeep Dealership Executives In Mumbai Beat Up Man Inside Showroom
டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கை விரட்டிய பஜாஜ் டோமினார்!

வரும் 6ந் தேதி விற்பனைக்கு வர இருக்கும் புதிய அப்பாச்சி310 பைக் இளைஞர்கள் மத்தியில் பேராவலை ஏற்படுத்தி இருக்கிறது. டிவிஎஸ் நிறுவனத்தின் சக்திவாய்ந்த பைக் மாடலாக வரும் புதிய அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கில் 313சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கை விரட்டிய பஜாஜ் டோமினார்!

இந்த எஞ்சின் அதிகபட்சமாக 34 எச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த பைக் சராசரியாக லிட்டருக்கு 30 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிகிறது. இந்த பைக் மணிக்கு 175 கிமீ வேகம் வரை செல்லும் திறன் பெற்றதாக இருக்கும் என்பதால், இந்த செக்மென்ட்டில் சக்திவாய்ந்த பைக் மாடலாக இருக்கும்.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கை விரட்டிய பஜாஜ் டோமினார்!

முழுவதுமான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், முன்புறத்தில் விண்ட் ஸ்கிரீன், மோனோ ஷாக் அப்சார்பர், டிஸ்க் பிரேக்குடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பல சிறப்பம்சங்களுடன் இந்த புதிய பைக் மாடல் வர இருக்கிறது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கை விரட்டிய பஜாஜ் டோமினார்!

ஓசூரில் உள்ள டிவிஎஸ் நிறுவனத்தின் ஆலையில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. கேடிஎம் ஆர்சி390, கவாஸாகி நின்ஜா 300, பஜாஜ் டோமினார் 400 உள்ளிட்ட பைக் மாடல்களுடன் போட்டி போடும்.

புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கை பஜாஜ் டோமினார் விரட்டி விரட்டி மூச்சு வாங்கும் வீடியோவை மேலே காணலாம்.

English summary
Bajaj Dominar fails to chase the TVS Akula.
Story first published: Thursday, November 30, 2017, 11:31 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark