லேட்டானாலும் லேட்டஸ்டாக மின்சார வகான துறைக்குள் கால்பதிக்கும் பஜாஜ்..!!

Written By:

பஜாஜ் நிறுவனம் 2020ல் மின்சார வாகன துறையில் கால்பதிக்க உள்ளதாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜீவ் பஜாஜ் தெரிவித்துள்ளார்.

மின்சார வாகன தயாரிப்பில் என்ட்ரி கொடுக்கும் பஜாஜ் நிறுவனம்..!!

லைவ்மின்ட் செய்தி ஊடகத்திற்கு பேசிய அவர், அர்பனைட் எனும் பிராண்டு உருவாக்குவதற்கான பணிகளில் பஜாஜ் இறங்கியுள்ளதாக கூறினார்.

மின்சார வாகன தயாரிப்பில் என்ட்ரி கொடுக்கும் பஜாஜ் நிறுவனம்..!!

பஜாஜின் அர்பனைட் பிராண்டு முற்றிலும் இருசக்கர வாகன தயாரிப்பு பணிகளுக்காக, டெஸ்லா நிறுவனத்தின் செயல்பாடுகளை பின்பற்றி உருவாகவுள்ளது.

மின்சார வாகன தயாரிப்பில் என்ட்ரி கொடுக்கும் பஜாஜ் நிறுவனம்..!!

அர்பனைட், இந்தியாவில் குறைந்த மதிப்பில் இருசக்கர வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்களை விட மிகவும் வித்தியாசமான செயல்பாடுகளை கொண்டு இருக்கும்.

மின்சார வாகன தயாரிப்பில் என்ட்ரி கொடுக்கும் பஜாஜ் நிறுவனம்..!!

அதாவது தற்போது இந்தியாவில் இருக்கும் மின்சார வாகனங்கள் குறைந்த செயல்திறன் கொண்டது, மற்றும் அதற்கு ஏற்றவாறான பயன்பாட்டை தருகிறது.

மின்சார வாகன தயாரிப்பில் என்ட்ரி கொடுக்கும் பஜாஜ் நிறுவனம்..!!

இதை மாற்றும் முயற்சியாக பஜாஜ் தயாரிக்கவுள்ள மின்சார இருசக்கர வாகனங்களின் பயன்பாடு இருக்கும் என இங்குள்ள தொழில்துறையினர் கருதுகிறார்கள்.

மின்சார வாகன தயாரிப்பில் என்ட்ரி கொடுக்கும் பஜாஜ் நிறுவனம்..!!

பஜாஜ் ஆட்டோவை தவிர, ஹீரோ நிறுவனமும் இந்தியாவில் மின்சார வாகன சந்தையில் இயங்கு வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் தற்போது வரை ஹீரோ இந்தியளவில் சுமார் 300 விற்பனை மற்றும் சேவை மையங்களை அமைத்துள்ளது.

மின்சார வாகன தயாரிப்பில் என்ட்ரி கொடுக்கும் பஜாஜ் நிறுவனம்..!!

ஆனால் மின்சார இருசக்கர வாகன உற்பத்திக்கான தனி நிறுவனம் அமைக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ள ஒரே நிறுவனம் பஜாஜ் தான்.

மின்சார வாகன தயாரிப்பில் என்ட்ரி கொடுக்கும் பஜாஜ் நிறுவனம்..!!

ப்ரீமியம் தரத்திலான பைக்குகள் தான் பஜாஜ் உருவாக்கும் அர்பனைட் பிராண்டுக்கு கீழ் உருவாகவுள்ளது. இதில் மூன்று சக்கர வாகனங்களும் தயாரிக்கப்படும் என்பது விசேஷ தகவல்.

மின்சார வாகன தயாரிப்பில் என்ட்ரி கொடுக்கும் பஜாஜ் நிறுவனம்..!!

அர்பனைட் பிராண்டுக்கு கீழ் உருவாகும் அந்த இருசக்கர வாகனம் பைக் இல்லையேன்றால் ஸ்கூட்டர் என இரண்டில் எதாவது ஒன்றாக இருக்கலாம்.

மின்சார வாகன தயாரிப்பில் என்ட்ரி கொடுக்கும் பஜாஜ் நிறுவனம்..!!

டோர்க் மோட்டார் சைக்கிள் என்ற பூனேவை சேர்ந்த நிறுவனம் ஒன்று டி6எக்ஸ் என்ற மின்சார மோட்டார் சைக்கிளை தயாரித்து வருகிறது.

மின்சார வாகன தயாரிப்பில் என்ட்ரி கொடுக்கும் பஜாஜ் நிறுவனம்..!!

இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் அதற்கு போட்டியாகத்தான் பஜாஜ் மின்சார இருசக்கர வாகனத்தை தயாரிப்பதாக தெரிகிறது.

மின்சார வாகன தயாரிப்பில் என்ட்ரி கொடுக்கும் பஜாஜ் நிறுவனம்..!!

பைக் அல்லது ஸ்கூட்டர் என எந்த வடிவத்திலும் பஜாஜ் தயாரிக்கவுள்ள மின்சார வாகனம் இருப்பதற்கான சாத்திய கூறுகள் உள்ளன.

மின்சார வாகன தயாரிப்பில் என்ட்ரி கொடுக்கும் பஜாஜ் நிறுவனம்..!!

இருந்தாலும் பஜாஜ் இந்த வாகனத்தை பெங்களூரை சேர்ந்த புதிய ஏத்தர் எனர்ஜி என்ற நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

மின்சார வாகன தயாரிப்பில் என்ட்ரி கொடுக்கும் பஜாஜ் நிறுவனம்..!!

எப்படி இருந்தாலும் போட்டியை உணர்ந்து மற்ற வாகன நிறுவனங்களை போல மின்சார வாகன துறையில் பஜாஜ் கால்பதிக்கவுள்ளது.

மின்சார வாகன தயாரிப்பில் என்ட்ரி கொடுக்கும் பஜாஜ் நிறுவனம்..!!

லேட்டாக இருந்தாலும், மின்சார வாகன தயாரிப்பை அர்பனைட் என்ற பிராண்டு கீழ் தயாரிக்கப்படும் என்ற பஜாஜின் அறிவிப்பு லேட்டஸ்டானது.

மேலும்... #பஜாஜ் #bajaj
English summary
Read in Tamil: Bajaj Looking To Enter Electric Vehicle Segment By 2020 Says MD Rajiv Bajaj. Click for Details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark