கவாஸாகி - பஜாஜ் ஆட்டோ நிறுவனங்களின் வர்த்தக கூட்டணி முடிவுக்கு வருகிறது..!

Written By:

ஜப்பான் நிறுவனமான கவாஸாகியுடன் கடந்த 8 ஆண்டுகளாக கொண்டிருந்த வர்த்தக கூட்டணி முடிவுக்கு வருவதாக பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அறிவித்துள்ளது.

பஜாஜ் - கவாஸாகி கூட்டணி உடைந்தது..!

இந்தியாவில் பஜாஜ் மற்றும் கவாஸாகி நிறுவனங்களுக்கு இடையில் விற்பனை மற்றும் சேவை தொடர்பான கூட்டணி கடந்த 2010ஆம் முதல் இருந்து வருகிறது. பஜாஜ் ப்ரோ பைக்கிங் ஷோரூம்களில் தற்போது பஜாஜ் , கேடிஎம் மற்றும் கவாஸாகி பைக்குகள் விற்பனை மற்றும் சர்வீஸ் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்த கூட்டணி முறிவடைய உள்ளது..

பஜாஜ் - கவாஸாகி கூட்டணி உடைந்தது..!

கேடிஎம் பிராண்டுல் பஜாஜ் கூடுதல் கவனம் செலுத்தப்போவதாக கூறியுள்ளது. இதுவே இந்த கூட்டணி முறிவுக்கான காராணமாகவும் சொல்லப்படுகிறது.

பஜாஜ் - கவாஸாகி கூட்டணி உடைந்தது..!

1980களில் இருந்தே பைக் தயாரிப்பில் கூட்டணி வைத்து செயல்பட்டன இந்நிறுவனங்கள், கேபி 100, 125, பாக்ஸர், கேலிபர், விண்ட் உள்ளிட்ட பல பிரபலமான பைக்குகளை தயாரித்து வந்தது. பின்னர் வளர்ந்து வந்த இந்திய வாகன சந்தையில் இந்த பைக்குகள் மீதான ஈர்ப்பு குறைந்து, விற்பனையில் சிறிது சுணக்கம் ஏற்பட்டது.

பஜாஜ் - கவாஸாகி கூட்டணி உடைந்தது..!

பெர்ஃபாமன்ஸ் பைக்குகளுக்கு இந்திய சந்தையில் அதிகரித்த தேவையை கருத்தில் கொண்டு நிஞ்சா பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது கவாஸாகி நிறுவனம். இதன் பின்னர் 250சிசி முதல் 650 சிசி வரையிலான கவாஸாகி பைக்குகள் இந்தியாவில் அறிமுகம் ஆனது.

பஜாஜ் - கவாஸாகி கூட்டணி உடைந்தது..!

2012ஆம் ஆண்டு தனது துணை பிராண்டான கேடிஎம் பைக்குகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது பஜாஜ் ஆட்டோ. கேடிஎம் பிராண்டுகள் அறிமுகத்திற்கு பின்னர் கவாஸாகி பைக் விற்பனை சரிவை சந்தித்து வந்தன. இதுவே இரண்டு நிறுவனங்களுக்கு இடையிலான உரசலுக்கு வழிவகுத்ததாக கூறப்படுகிறது.

பஜாஜ் - கவாஸாகி கூட்டணி உடைந்தது..!

இது தொடர்பாக பஜாஜ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூட்டணி உடைவதால் அது எந்த விதத்திலும் பஜாஜ் நிறுவனத்தை பாதிக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஜாஜ் - கவாஸாகி கூட்டணி உடைந்தது..!

மேலும் கவாஸாகி நிறுவன பைக்குகள் அதிகம் விலை கொண்ட ப்ரீமியம் பைக்குகளாக உள்ளதால் அவை சரியான அளவில் விற்பனை ஆகவில்லை என்றும் பஜாஜ் நிறுவனம் கூறியுள்ளது. கடந்த 2015-16 ஆண்டுகள் காலகட்டத்தில் வெறும் 867 கவாஸாகி பைக்குகள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளதாகவும் பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது.

பஜாஜ் - கவாஸாகி கூட்டணி உடைந்தது..!

இந்தியாவில் இந்த கூட்டணி முடிவுக்கு வந்தாலும், சர்வதேச அளவில் இது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும் கூறப்பட்டுள்ளது. இந்தியா தவிர்த்து மற்ற நாடுகளில் இந்நிறுவனங்களின் கூட்டணி வழக்கம் போல் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பஜாஜ் - கவாஸாகி கூட்டணி உடைந்தது..!

ப்ரோ பைக்கிங் ஷோரூம்களில் கவாஸாகி பைக்குகள் ஏப்ரல் 1 முதல் கிடைக்காத நிலையில், இனி கவாஸாகியின் பிரத்யேக டீலர்கள் மூலம் நிஞ்சா உள்ளிட்ட பைக்குகளை விற்பனை செய்ய உள்ளது கவாஸாகி மோட்டார் நிறுவனம்.

பஜாஜ் - கவாஸாகி கூட்டணி உடைந்தது..!

விற்பனை மற்றும் விற்பனைக்கு பிந்தைய சேவைகளில் மட்டுமே இந்நிறுவங்கள் பிரிந்துள்ளன, பஜாஜ் நிறுவனத்தின் புனே தொழிற்சாலையில் வழக்கம் போல் கவாஸாகி பைக்குகள் அசெம்பிள் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
bajaj ends tie up with kawasaki in india from april 1 2017.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark