புதிய பஜாஜ் பல்சர் பைக்குகளில் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்!
பஜாஜ் பல்சர் பைக்குகளின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
புதிய பஜாஜ் பல்சர் பைக்குகளின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

பஜாஜ் நிறுவனத்தின் மிகவும் வெற்றிகரமான பைக் மாடல் பல்சர். பல்சர் வரிசையில் 150சிசி மாடல் விற்பனையில் கலக்கி வருகிறது. இதுதவிர்த்து, 180சிசி மற்றும் 220சிசி மாடல்களும் இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற மாடல்களாக இருக்கின்றன.
Recommended Video


இந்த நிலையில், பல்சர் பைக் மாடல்களின் விற்பனை உலக அளவில் ஒரு கோடி என்ற இமாலய விற்பனையை கடந்துள்ளது. இதனை கொண்டாடும் விதத்தில் சிறப்பு பதிப்பு மாடல்களை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

பல்சர் பிளாக் பேக் எடிசன் என்ற பெயரில் இந்த புதிய சிறப்பு பதிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. பல்சர் வரிசையில் 150, 180 மற்றும் 220எஃப் பைக்குகளில் இந்த ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

பிளாக் எடிசன் பல்சர் மாடல்கள் புதிய வண்ணக் கலவை, பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் மற்றும் வெள்ளை வண்ண அலாய் வீல்கள் பிரத்யேக அம்சங்களாக இருக்கிறது.

எஞ்சின்களில் எந்த மாற்றமும் இல்லை. இந்த பிரத்யேக வண்ணக் கலவை மற்றும் சிறப்பம்சங்கள் கொண்ட பல்சர் பைக்குகள் இளைஞர்களை வெகுவாக கவரும் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications








