ஏபிஎஸ் பிரேக் வசதியுடன் புதிய பஜாஜ் பல்சர் என்எஎஸ்200 பைக் அறிமுகம்!
ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் பொருத்தப்பட்ட புதிய பஜாஜ் பல்சர் என்எஸ்200 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் கொண்ட புதிய பஜாஜ் பல்சர் என்எஸ்200 பைக் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை தொடர்ந்து செய்தியில் காணலாம்.

பஜாஜ் பல்சர் என்எஸ்200 பைக்கில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, முன்சக்கரம் மட்டும் ஏபிஎஸ் பிரேக் நுட்பத்தில் இயங்கும். மேலும், பிரேக் செயல்திறனை அதிகரிக்கும் விதத்தில், முன்சக்கரத்தில் 300மிமீ டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டு இருக்கிறது.

இந்த ஏபிஎஸ் மாடலில் இருக்கும் சிங்கிள் சேனல் சிஸ்டம் அவசர சமயத்தில் சடன் பிரேக் பிடிக்கும்போது பிரேக் சிஸ்டம் பூட்டிக் கொள்ளாமல் தவிர்க்கும். மேலும்,மோசமான சாலை நிலைகளுக்கும் இது சிறந்த பாதுகாப்பு அம்சமாக இருக்கும்.

இந்த ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் பொருத்தப்பட்ட பஜாஜ் பல்சர் என்எஸ்200 பைக் நாட்டிலுள்ள அனைத்து நகரங்களிலும் படிப்படியாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

மற்றபடி, இந்த புதிய ஏபிஎஸ் மாடலில் பெரிய அளவு மாற்றங்கள் ஏதும் இல்லை. முரட்டுத்தனமான தோற்றத்தை அளிக்கும் ஹெட்லைட், பெட்ரோல் டேங்க், எஞ்சின் கவுல் போன்றவை முக்கிய டிசைன் அம்சங்கள். இந்த பைக்கில் எல்இடி டெயில் லைட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
Trending On DriveSpark Tamil:
Recommended Video


புதிய பஜாஜ் பல்சர் என்எஸ்200 ஏபிஎஸ் மாடலில் 199.5சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்ப்டடு இருக்கிறது.இந்த எஞ்சின் அதிகபட்சமாக 23.17 பிஎச்பி பவரையும், 18.3 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய பஜாஜ் பல்சர் என்எஸ்200 ஏபிஎஸ் மாடல் மூன்று வண்ணங்களில் கிடைக்கும். வைல்டு ரெட் என்ற சிவப்பு வண்ணத்திலும், மிராஜ் ஒயிட் என்ற வெள்ளை வண்ணத்திலும், கிராஃபைட் பிளாக் என்ற கருப்பு வண்ணத்திலும் தேர்வு செய்து கொள்ளலாம்.

பல்சர் என்எஸ்200 பைக்கில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட வேண்டும் என்று வாடிக்கையாளர் மற்றும் பல்சர் பிரியர்களிடமிருந்து பஜாஜ் நிறுவனத்துக்கு நீண்ட காலமாக கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது. இந்த சூழலில் இந்த ஏபிஎஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பது ரசிகர்களையும், வாடிக்கையாளர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதிய பஜாஜ் பல்சர் என்எஸ்200 பைக்கின் ஏபிஎஸ் மாடல் ரூ.1.09 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும். டிவிஎஸ் அப்பாச்சி 200 4வி, யமஹா எஃப்இசட்25 ஆகிய மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். இந்த மாடல்களில் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் இல்லாததால், பஜாஜ் பல்சர் என்எஸ்200 வாடிக்கையாளர்களிடம் முதன்மையான தேர்வாக மாற வாய்ப்பு இருக்கிறது.
Trending On DriveSpark Tamil:


Click it and Unblock the Notifications