மதுரையில் பிரதான சாலையில் தீ பிடித்து எரிந்த பல்சர் ஆர்.எஸ். 200 பைக்..!

Written By:

மதுரையில் பிராதன சாலை ஒன்றில் சென்றுகொண்டுயிருந்த பஜாஜ் பல்சர் ஆர்.எஸ் 200 பைக்கில் திடீரென தீ பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பைக்கில் தீ பரவுவதை முன்னரே சுதாரித்துக்கொண்டதால் பஜாஜ் பல்சர் ஆர்.எஸ் 200 பைக்கை ஓட்டி வந்த இளைஞர் காயங்கள் ஏதுமின்றி தப்பித்தார்.

நடுரோட்டில் பற்றி எரிந்த பல்சர் பைக்- வீடியோ இணைப்பு

மதுரையிலுள்ள பசுமலை பகுதியில் வசித்து வருபவர் தனிஷ் அஹமத். பல நாட்டுகளாக காத்திருந்து, ஒன்றரை வருடங்களுக்கு முன்பு தான் தனது விருபத்திகுரிய மாடலான பல்சர் ஆர்.எஸ் 200 பைக்கை வாங்கியுள்ளார்.

நடுரோட்டில் பற்றி எரிந்த பல்சர் பைக்- வீடியோ இணைப்பு

தனிஷ் அஹமத் பைக்கை வாங்கிய பிறகு, அதை சரியாக சர்வீஸ் செய்து, முறையாக பாராமரிப்பு செய்து இதுவரை எதற்காகவும் தனது பல்சர் ஆர்.எஸ்.200 பைக்கில் பழுது ஏற்படாதவாறு முழு பராமரிப்பு செய்து வந்தார்.

நடுரோட்டில் பற்றி எரிந்த பல்சர் பைக்- வீடியோ இணைப்பு

இந்நிலையில் கல்லூரிக்கு செல்வதற்காக பசுமலை பிரதான சாலையில் பல்சர் ஆர்.எஸ். 200 பைக்கை தனிஷ் அஹமத் ஓட்டி சென்றுக்கொண்டுயிருந்த போது, எஞ்சின் பகுதியிலிருந்து தீ கசியும் வாசம் வருவதை உணர்ந்து, பரபரப்புடன் சாலையில் நிறுத்தி பைக்கின் கீழ் பார்த்துள்ளார்.

நடுரோட்டில் பற்றி எரிந்த பல்சர் பைக்- வீடியோ இணைப்பு

அப்போது பல்சர் ஆர்.எஸ்.200 பைக்கின் எஞ்சினில் தீ பிடித்து எரிவதை பார்த்த தனிஷ் அஹமத், உடனே பைக்கை சாலையோரமாக நிறுத்தி அவர் பார்த்தபோது, தீ எஞ்சின் பகுதியிலிருந்து மளமளவென அனைத்து இடங்களுக்கு பரவியது.

நடுரோட்டில் பற்றி எரிந்த பல்சர் பைக்- வீடியோ இணைப்பு

சிறிது நேரத்தின் தனீஷ் அஹமத்தின் கனவு பைக்கான பல்சர் ஆர்.எஸ்.200 அவர் கண் முன்னே முழுவதும் கொழுந்து விட்டு எரிந்து அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழல தொடங்கியது.

நடுரோட்டில் பற்றி எரிந்த பல்சர் பைக்- வீடியோ இணைப்பு

செய்வதரியாமல் நின்ற அவருக்கு அக்கப்பக்கத்தில் இருப்பவர்கள் பைக்கின் தீயை அணைக்க உதவியும், ஒன்றும் பயனில்லாமல், தனீஷ் அஹமத் ஆசை ஆசையாய் வாங்கிய பல்சர் ஆர்.எஸ்.200 பைக் அவர் கண்முன்னே முற்றிலுமாக எரிந்து சாம்பலானது.

நடுரோட்டில் பற்றி எரிந்த பல்சர் பைக்- வீடியோ இணைப்பு

முற்றிலும் எதிர்பாராத இந்த சம்பவத்தை குறித்து பேசியுள்ள தனீஷ் அஹமத், பல்சர் ஆர்.எஸ் 200 பைக்கிற்கு சரியான பராமரிப்பு, நிலையான சர்வீஸ் என அனைத்தும் முறையாக மேற்கொள்ளப்பட்டதாகவும்,

அடுத்த 1500 கிலோ மீட்டர் ஓட்டி முடிந்திருந்தால் 2வது சர்வீஸ் கொடுக்கப்பட்டு இருக்கவேண்டும். அந்த ஒரு தருணத்தில் தனது பல்சர் ஆர்.எஸ் 200 பைக்கில் தீ விபத்து ஏற்பட்டுயிருப்பதாக கூறினார்.

நடுரோட்டில் பற்றி எரிந்த பல்சர் பைக்- வீடியோ இணைப்பு

மேலும், தனீஷ் அஹமத் பைக்கை பசுமலை பிரதான சாலையில் ஓட்டியபோது 60 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றுகொண்டிருந்துள்ளார். இதனால் அவரது யூகப்படி சர்கியூட்டில் ஏதாவது தீ கசிவு ஏற்பட்டு அது எஞ்சினுக்கு சென்று, பிறகு பைக் முழுவதும் பரவி எரிந்திருக்கலாம் என்பது அவரது எண்ணமாக உள்ளது.

நடுரோட்டில் பற்றி எரிந்த பல்சர் பைக்- வீடியோ இணைப்பு

தனீஷ் அஹமத்தின் மோட்டார் சைக்கிளிற்கு ஏற்பட்ட திடீர் தீ விபத்தை அறிந்த டீலர்களுக்கு அவருக்கு புதிய பஜாஜ் பல்சர் ஆர்.எஸ்.200 பைக்கை வழங்க முன்வந்துள்ளனர். இதனால் அவர் கொஞ்சம் ஆறுதலடைந்துள்ளார்.

நடுரோட்டில் பற்றி எரிந்த பல்சர் பைக்- வீடியோ இணைப்பு

தமிழகளவில் பலசர் பைக் மாடலை வைத்திருப்போர் மத்தியில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திடீரென தீ பிடித்து எரிந்த பஜாஜ் பல்சர் ஆர்.எஸ்.200 மோட்டார் சைக்கிள் 199.5 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் கொண்டது.

6-ஸ்பீடு கியர் பாக்ஸ் தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த மாடல் 24 பி.எச்.பி மற்ற்ம் 18.3 டார்க் திறன் வழங்கும்.

மதுரை பசுமலை பகுதியின் பிரதான சாலையில் கொழுந்து விட்ட எரிந்த பஜாஜ் பல்சர் ஆர்.எஸ். 200 பைக்கின் முழு வீடியோ...!

via RushLane

English summary
A Bajaj Pulsar RS 200 caught fire in the middle of the road and was completely burnt in Tamil Nadu. The rider noticed fire in the engine area and parked the motorcycle immediately.
Story first published: Saturday, April 22, 2017, 14:02 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark