பெனெல்லி இம்பீரியல் 400 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் வருகிறது?

Written By:

இத்தாலியில் நடந்து வரும் சர்வதேச மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் பெனெல்லி நிறுவனத்தின் புதிய 400சிசி மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தியா வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருப்பதால் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

புல்லட்டிற்கு நேர் போட்டியாக வரும் பெனெல்லி மோட்டார்சைக்கிள்!

பெனெல்லி இம்பீரியலே 400 என்ற பெயரில் அறிமுகமாகி இருக்கும் இந்த புதிய மோட்டார்சைக்கிள், வரும் பிப்ரவரியில் நொய்டாவில் நடக்க இருக்கும் சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

புல்லட்டிற்கு நேர் போட்டியாக வரும் பெனெல்லி மோட்டார்சைக்கிள்!

டிசைன், எஞ்சின் ஆகிய அம்சங்களில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 350சிசி புல்லட் மற்றும் கிளாசிக் மோட்டார்சைக்கிள்களுக்கு போட்டியாக இருக்கும். பழமையும், புதுமையும் கலந்து செய்த கலவையாக இந்த மோட்டார்சைக்கிளை களமிறக்க உள்ளது பெனெல்லி.

புல்லட்டிற்கு நேர் போட்டியாக வரும் பெனெல்லி மோட்டார்சைக்கிள்!

வட்ட வடிவ ஹெட்லைட், க்ரோம் பூச்சுடன் கூடிய முன்புற, பின்புற ஃபென்டர்கள், ஸ்போக்குகளுடன் கூடிய சக்கரங்கள், டிஜிட்டல் திரை மற்றும் அனலாக் மானி பொருத்தப்பட்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை இதன் முக்கிய அம்சங்கள். புகைப்போக்கி குழாய் கூட ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களை நினைவூட்டுகிறது.

புல்லட்டிற்கு நேர் போட்டியாக வரும் பெனெல்லி மோட்டார்சைக்கிள்!

புதிய பெனெல்லி இம்பீரியலே 400 மோட்டார்சைக்கிளில் சிங்கிள் சிலிண்டர் கொண்ட 373.5சிசி ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட இந்த எஞ்சின் அதிகபட்சமாக 19 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

Recommended Video - Watch Now!
[Tamil] 2017 DSK Benelli 302 R Launched In Inida - DriveSpark
புல்லட்டிற்கு நேர் போட்டியாக வரும் பெனெல்லி மோட்டார்சைக்கிள்!

இந்த மோட்டார்சைக்கிளில் எஞ்சின் டபுள் கிராடில் ஃப்ரேமில் பொருத்தப்பட்டு இருக்கிறது. முன்புறத்தில் 41மிமீ டெலிஸ்கோப்பில் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷனும், பின்புறத்தில் இரட்டை ஸ்பிரிங் ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டு இருக்கிறது.

புல்லட்டிற்கு நேர் போட்டியாக வரும் பெனெல்லி மோட்டார்சைக்கிள்!

அதேபோன்று, முன்சக்கரத்தில் 300மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 240மிமீ டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டு இருக்கிறது. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் வருவது, ராயல் என்ஃபீல்டுக்கு தலைவலி தரும் விஷயமாக இருக்கும்.

புல்லட்டிற்கு நேர் போட்டியாக வரும் பெனெல்லி மோட்டார்சைக்கிள்!

புதிய பெனெல்லி இம்பீரியலெ 400 மோட்டார்சைக்கிள் 200 கிலோ கெர்ப் எடை கொண்டது. இந்த மோட்டார்சைக்கிளில் 12 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளுக்கு பேனியர் பேக்குகள் உள்பட பல கூடுதல் ஆக்சஸெரீகளையும் பெனெல்லி வழங்க இருக்கிறது.

புல்லட்டிற்கு நேர் போட்டியாக வரும் பெனெல்லி மோட்டார்சைக்கிள்!

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களுக்கு மிகச் சரியான நேரடி போட்டியாளர்கள் இல்லாத நிலை இதுவரை இருக்கிறது. பஜாஜ் நிறுவனம் டோமினாரை வைத்து முட்டி மோதினாலும், ராயல் என்ஃபீல்டு மார்க்கெட்டை அசைக்க முடியவில்லை.

புல்லட்டிற்கு நேர் போட்டியாக வரும் பெனெல்லி மோட்டார்சைக்கிள்!

புதிய பெனெல்லி இம்பீரியலே 400 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு வந்தால், நிச்சயம் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்துக்கு நேர் போட்டியாக அமையும். இந்த மோட்டார்சைக்கிள் டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும்.

மேலும்... #பெனெல்லி #benelli #eicma
English summary
Italian motorcycle manufacturer Benelli has unveiled its new retro-styled cruiser motorcycle, the Imperiale 400 at the 2017 EICMA motorcycle show in Milan, Italy.
Story first published: Friday, November 10, 2017, 16:49 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark