அதிக வேகத்தில் சென்றதால் பெனெல்லி சூப்பர் பைக் விபத்தில் சிதைவு
சூப்பர் பைக்குகளில் தொடர்ந்து விபத்தில் சிக்கி வருகிறது. அந்த வரிசையில், தற்போது பெனெல்லி நிறுவனத்தில் அதிவேக பைக்கான டி.என்.டி 600ஐ விபத்தில் சிக்கி அதிக பாதிப்பை சந்தித்துள்ளது.
இந்திய சாலைகளில் அதிகவேகத்தில் பயணிக்கும் வாகனங்கள் விப்பத்திற்குள்ளாவது அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் மும்பை அகமாதபாத் நெடுஞ்சாலையில் நடைபெற்ற விபத்தில் பெனெல்லி டி.என்.டி 600ஐ சூப்பர் பைக் முற்றிலும் சிதைந்து உருகுலையும் அளவிற்கு கோர விபத்தை சந்தித்துள்ளது.

இந்த விபத்து குறித்து நமக்கு கிடைத்திருக்கும் தகவலின் படி பைக்கை ஓட்டிய நபர் அதிகவேகத்தில் சாலையில் சென்றதாகவும், பிறகு கட்டுபாட்டை இழந்து வண்டி விபத்தில் சிக்கியதாகவும் கூறப்படுகிறது.

விபத்து ஏற்பட்டபோது வாகனத்தை ஓட்டி வந்த ரைடர் தூக்கி வீசப்பட்டு, பெனெல்லி டி.என்.டி 600 ஐ பைக் டிவைடரில் மோதி சிதைந்துள்ளது.

புகைப்படங்களில் தற்போது நாம் பார்ப்பபோது போல பைக்கின் சக்கரங்கள் உடைந்து போயும், எரிவாயூ டேங்கில் சில பகுதிகள் நசுங்கி கிடக்கிறது.

இதுபோன்ற கோரமான விபத்து நடந்திருப்பதை வைத்து பார்க்கும் போது, சாலையில் வாகனத்தை ஓட்டி சென்ற ரைடர் கியரின் அதிகப்பட்சமான வேகத்தை கூட்டியுள்ளதை உணர முடிகிறது. விபத்தில் வண்டியிலிருந்து தூக்கி வீசப்பட்டதால், நல்லவேளையாக ரைடர் உயர்பிழைத்துள்ளார்

வண்டியில் இருந்து தூக்கி வீசப்பட்ட உடன் அங்கேயிருந்த மக்கள் ரைடரை காப்பாற்றி முதலுதவி சிகிச்சை அளித்து, மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சையில் அனுமதித்துள்ளனர்.

இதே போல சமீபத்தில் பெங்களூரில் நடைபெற்ற கவாஸாகி நிஞ்சா ஹெச் 2 பைக்கின் விபத்தும் ஒரு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோன்ற சூப்பர் பைக்குகளுக்கு தொடர்ந்து நடந்து வரும் விபத்தால், வாடிக்கையாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

பெனெல்லி டி.என்.டி 600ஐ பைக் விபத்தில் சிக்கியிருப்பது, சூப்பர் பைக் பயன்பாட்டாளர்களிடம் ஒரு அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. அதை சமூக வலைதளங்களும் பெரிய அளவில் உணர்த்தி வருகின்றன.

தலைக்கவசம் அணியாமல் பைக்கில் செல்வது, வாகனத்தை ஓட்டும்போது கவனமின்றி செயல்படுவது போன்றவை விபத்திற்கு வழிவகுக்கும் என்பதை எப்போதும் நாம் நினைவில் கொள்வோம்


Click it and Unblock the Notifications








