பெனெல்லி டொர்னாடோ 302ஆர் பைக் அறிமுக தேதி விபரம் வெளியீடு!

Written By:

வரும் 25ம் தேதி புதிய பெனெல்லி டொர்னாடோ 302ஆர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த பைக்கின் சிறப்பம்சங்கள் உள்ளிட்ட பல முக்கிய விபரங்களை தொடர்ந்து காணலாம்.

 பெனெல்லி டொர்னாடோ 302ஆர் பைக் அறிமுக தேதி விபரம் வெளியீடு!

கடந்த ஆண்டு நொய்டாவில் நடந்த சர்வதேச வாகன கண்காட்சியில் முதல்முறையாக இந்த பெனெல்லி டொர்னாடோ 302ஆர் பைக் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், இந்த பைக்கின் அறிமுகம் தொடர்ந்து தள்ளிப் போன நிலையில், தற்போது அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

 பெனெல்லி டொர்னாடோ 302ஆர் பைக் அறிமுக தேதி விபரம் வெளியீடு!

இந்தியாவில் விற்பனையில் இருக்கும் பெனெல்லி டிஎன்டி 300 பைக்கின் ஸ்போர்ட்ஸ் பைக் வெர்ஷன்தான் இந்த புதிய பெனெல்லி 302ஆர் பைக். இந்த பைக்கில் ஃபேரிங் பேனல்கள் மூலமாக ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாக மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது.

 பெனெல்லி டொர்னாடோ 302ஆர் பைக் அறிமுக தேதி விபரம் வெளியீடு!

பெனெல்லி டிஎன்டி 300 பைக்கில் பயன்படுத்தப்படும் அதே லிக்யூடு கூல்டு 300சிசி எஞ்சின்தான் இந்த பைக்கிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இரண்டு சிலிண்டர்கள் கொண்ட இந்த எஞ்சின் அதிகபட்சமாக 35 பிஎச்பி பவரையும், 27 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சின் 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டு இருக்கிறது.

 பெனெல்லி டொர்னாடோ 302ஆர் பைக் அறிமுக தேதி விபரம் வெளியீடு!

இந்த பைக்கின் முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷன் அமைப்பும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோன்று, முன்புறத்தில் இரண்டு டிஸ்க்குகளுடன் கூடிய பிரேக் சிஸ்டமும், பின்புறத்தில் ஒற்றை டிஸ்க் கொண்ட பிரேக் சிஸ்டமும் இருக்கிறது.

 பெனெல்லி டொர்னாடோ 302ஆர் பைக் அறிமுக தேதி விபரம் வெளியீடு!

இந்த பைக் 196 கிலோ எடை கொண்டது. 180மிமீ தரை இடைவெளியுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. 14 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

 பெனெல்லி டொர்னாடோ 302ஆர் பைக் அறிமுக தேதி விபரம் வெளியீடு!

புதிய பெனெல்லி டொர்னாடோ 302ஆர் பைக் ரூ.3.2 லட்சம் முதல் ரூ.3.5 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக்கிற்கு ஏற்கனவே முன்பதிவு நடந்து வருகிறது. கவாஸாகி நின்ஜா 300, யமஹா ஆர்3 மற்றும் கேடிஎம் ஆர்சி390 பைக்குகளுக்கு போட்டியாக இருக்கும்.

மேலும்... #பெனெல்லி #benelli
English summary
Benelli Tornado 302R India Launch On 25 July — Here’s What You Need To Know
Story first published: Wednesday, July 19, 2017, 18:13 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark