’பஜாஜ் டாமினார் முதல் கே.டி.எம் 390 டியூக் வரை’ 2018 ஆட்டோ எக்ஸ்போவை கலக்கவுள்ள பைக் ரகங்கள்..!!

’பஜாஜ் டாமினார் முதல் கே.டி.எம் 390 டியூக் வரை’ 2018 ஆட்டோ எக்ஸ்போவை கலக்கவுள்ள பைக் ரகங்கள்..!!

By Azhagar

இந்தியாவில் பல லட்சம் பைக்குகள் சாலையில் ஓடினாலும். இன்னும் சிலர் இதுவரை இல்லாத செயல்திறன், இப்போது வரை பார்க்காத டிசைன், யானை திறனை தரும் மைலேஜ் என இத்யாதி, இத்யாதி விஷயங்களுக்காக காத்திருக்கின்றனர்.

2018 ஆட்டோ எக்ஸ்போவில் களமிறங்கும் புதிய பைக்குகள்..!!

அவர்களின் தேவைகளை அறிந்தோ என்னவோ, 2018ல் டெல்லியில் பிரம்மாண்டமான ஆட்டோ எக்ஸ்போ நடக்கவுள்ளது.

உலகின் முதன்மையான நிறுவனங்கள் பல தங்களது மோட்டார் சைக்கிள்களை காட்சிப்படுத்த உள்ளன.

பஜாஜ் டோமினோர் 200

பஜாஜ் டோமினோர் 200

பஜாஜ் டோமினோர் 200 புதிய அவதாரத்தில் அடுத்த வருட ஆட்டோ எக்ஸ்போவில் களமிறங்குகிறது.

டோமினோரின் மினி வெர்ஷனாக வரும் இந்த பைக் சிறிய எதிர்பார்ப்பை இப்போதே ஏற்படுத்திவிட்டது.

உயர் ரக மாடலில் இந்தியாவில் பலருக்கு முதல் தேர்வாக உள்ளது டாமினோர் 400.

2018 ஆட்டோ எக்ஸ்போவில் களமிறங்கும் புதிய பைக்குகள்..!!

இதனுடைய மினிவெர்ஷனாக அடுத்தாண்டு வரவுள்ள டாமினார் 200 பைக்கிற்கு பஜாஜ் விலையை ரூ.1 லட்சமாக நிர்ணயம் செய்ய திட்டமிட்டுள்ளது.

பஜாஜ் பல்சர் ஆர்.எஸ்.400

பஜாஜ் பல்சர் ஆர்.எஸ்.400

இந்தியாவில் பலசர் மாடல் பைக்குகள் தான் பல இளைஞர்களின் முதல் தேர்வு. இதில் சமகால கட்டத்திற்கு ஏற்றவாறு பஜாஜ் தயாரித்திருக்கும் மாடல் தான் பல்சர் ஆர்.எஸ்.200

இது எந்த கான்செப்டில் கட்டமைக்கப்படவுள்ளது என்பது தொடர்பான தகவல்கள் விரைவில் வெளிவரவுள்ளன.

Recommended Video

TVS Jupiter Classic Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
2018 ஆட்டோ எக்ஸ்போவில் களமிறங்கும் புதிய பைக்குகள்..!!

பல்சர் ஆர்.எஸ் மாடல் பைக்கில் பயன்படுத்தப்படவுள்ள எஞ்சின் மற்றும் மற்ற செயல்திறனுக்காக இந்தியாவே காத்துக்கொண்டுள்ளது.

2018 ஆட்டோ எக்ஸ்போவில் களமிறங்கும் இந்த பைக், சுமார் ரூ.1.4 லட்சம் விலையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டியூட்ச்சே சூப்பர்ஸ்போர்ட்

டியூட்ச்சே சூப்பர்ஸ்போர்ட்

2016ல் இத்தாலியை சேர்ந்த டுக்காட்டி தயாரிப்பாளர்கள் இந்த சூப்பர்ஸ்போர்ட் மாடல் பைக்குகளை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தனர்.

தற்போது 2018ல் புதிய டியூட்ச்சே சூப்பர்ஸ்போர்ட் பைக் ஆட்டோ எக்ஸ்போ வழியாக இந்தியாவில் அறிமுகமாகிறது.

2018 ஆட்டோ எக்ஸ்போவில் களமிறங்கும் புதிய பைக்குகள்..!!

செயல்திறன் மற்றும் வடிவமைப்பில் இந்த பைக் எக்ஸ்-ரே 1000 மற்றும் சுசுகி ஜிஎஸெக்ஸ் 1000 எஃப் மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

ஹோண்டா சிபி ஹார்னெட் 160 எஃப்

ஹோண்டா சிபி ஹார்னெட் 160 எஃப்

2015ம் ஆண்டில் ஹோண்டா நிறுவனம் அறிமுகப்படுத்திய சிபி ஹார்னெட் பைக்கில் ஸ்போர்ட்ஸ் வெர்ஷனை இந்த 2018ல் அறிமுகப்படுத்துகிறது.

2018 ஆட்டோ எக்ஸ்போவில் களமிறங்கும் புதிய பைக்குகள்..!!

ஆட்டோ எக்ஸ்போவில் பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையில் வெரும் ஹோண்டா சிபி ஹார்னெட் ஸ்போர்ட்ஸ் பைக் ரூ.90,000 விலை பெறும் என நம்பப்படுகிறது.

ராயல் என்ஃபீல்டு கான்டினெட்டல் ஜிடி 750

ராயல் என்ஃபீல்டு கான்டினெட்டல் ஜிடி 750

2018 ஆட்டோ எக்ஸ்போவை கதிகலக்க செய்யவுள்ளது ராயல் என்ஃபீல்டின் இந்த தயாரிப்பு தான்.

ட்வின் சிலிண்டர் கொண்ட 750சிசி திறன் பெற்ற எஞ்சின் என்ற அறிமுகமே இதற்கான போதுமானது. வேறெதுவம் தேவை இல்லை.

ராயல் என்ஃபீல்டு எலெக்ட்ரான்ஸ்

ராயல் என்ஃபீல்டு எலெக்ட்ரான்ஸ்

எலெக்ட்ரிக் பவர் பிளாண்ட் கொண்டு தயாரிக்கப்பட்டு இருக்கும் இந்த பைக் எப்போது வெளியாகும் என பலரும் காத்திருக்கின்றனர்.

2018 ஆட்டோ எக்ஸ்போவில் களமிறங்கும் புதிய பைக்குகள்..!!

2018 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியான பின் இந்த பைக் இந்தியாவில் பெரிய விற்பனை திறனை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 ஹீரோ ஹாஃபூர்

ஹீரோ ஹாஃபூர்

கேப்பாசிட்டி திறனுடன் ஒரு மாடல் பைக்கை வெளியிட வேண்டும் என்பது ஹீரோவின் நீண்ட நாள் விருப்பம். 2018ல் இந்த ஹீரோவின் ஹாஃபூர் பைக்கை வரவேற்க இந்திய ஆட்டோமொபைல் உலகள் வெறிக்கொண்டு தயாராகி வருகிறது.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ்

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ்

கடந்தாண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்ஃபோவின் போதே ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் அடுத்தாண்டு கண்காட்சியில் வெளிவரும் இந்த பைக் சுமார் ரூ.1 லட்சம் வரை விலையை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹஷ்ஹோர்னா விட்பில்லென் 401

ஹஷ்ஹோர்னா விட்பில்லென் 401

கேடிஎம் டியூக் 390 பைக் ஹேக்சா வாலிடினுடன் அடுத்தாண்டில் களமிறங்குகிறது. இதனுடைய செயல்திறன் மற்றும் விலைக்குறித்த பல்வேறு தகவல்கள் விரைவில் வெளியிடப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, August 12, 2017, 17:59 [IST]
English summary
Read in Tamil: 2018 Auto Expo Gets New Bikes Ranges and New Updates. Click it for More...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+